1. அறிமுகம்

பலமுறை தன் கனவில் மறைந்த உறவினர்களை காண்பதன் பொருள் என்னவென்று எங்களது வாசகர்கள் அடிக்கடி கேட்கின்றனர். அவர்களில் சிலர் மறைந்த உறவினர்களை காண்பதை வரவேற்கிறார்கள், சிலர் பயப்படுகிறார்கள். ‘என் தந்தை மறுமையில் (இறப்பிற்கு பின்பான வாழ்வு) அவர் பயணத்தை தொடர்கிறாரா?’, ‘அவர் சொர்க்கத்தை அடைந்துள்ளாரா?’, ‘அவர்கள் என்னிடம் என்ன சொல்ல விரும்புகின்றனர்?’ போன்ற கேள்விகள் வந்துள்ளன. இக்கட்டுரையில், ஆன்மீக ஆராய்ச்சியின் மூலம், மனோரீதியான  மற்றும் ஆன்மீக ரீதியான கண்ணோட்டத்தில் இவ்விஷயத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.

ஆன்மீக ஆராய்ச்சி என்றால் என்ன? என்ற கட்டுரையை படிக்கவும்.

2. கனவில் மறைந்த குடும்பத்தினரை காண்பதன் பொருள் என்ன?

ஆன்மீக ஆராய்ச்சியின் மூலம், மறைந்த குடும்பத்தினரை கனவில் காண்பதற்கு மனோரீதியான மற்றும் ஆன்மீக ரீதியான காரணங்கள் உள்ளன என கண்டுபிடித்துள்ளோம். இது 30% நேரங்களில் மனோரீதியான காரணங்களாலும் 70% நேரங்களில் ஆன்மீக ரீதியான காரணங்களாலும் நிகழ்கிறது.

இறப்பதற்கு முன்பு அன்புக்குரியவர்களுடன் நேரம் கழிக்கவில்லை என்ற குற்ற உணர்வு அல்லது வருத்தம் இருப்பதால், அல்லது மறைந்த குடும்பத்தினரை பற்றி ஏதேனும் ஒரு கவலை போன்றவை சில மனோரீதியான காரணங்கள் ஆகும். இதில் மறைந்த உறவினர்களின் உருவங்கள் கனவில் தோன்றுவது ஆழ்மனதின் எழுச்சிகளே ஆகும்.

ஆன்மீக காரணங்கள் இரு வகையாகும். ஒரு பொருள் என்னவென்றால், இறப்பிற்கு பிறகு மறைந்த குடும்பத்தினரின் சூட்சும தேஹத்திற்கு பூலோகத்திலுள்ள தனது சந்ததியினரை தொடர்புகொள்ள முயற்சித்தல். மற்றொரு காரணம், பழி வாங்க முயற்சித்தல் ஆகும்..

ஆன்மீக ஆராய்ச்சியினால் நாங்கள் கண்டறிந்தது என்னவென்றால் (ஆன்மீக காரணங்களைப் பொறுத்தவரை), கிட்டத்தட்ட 65% நேரங்களில்  பித்ருக்களுக்கு மறுமையில் உதவி தேவைப்படுவதாலும் 30% நேரங்களில் பூலோகத்தில் உள்ள தனது சந்ததியினரை தொந்தரவு செய்ய அல்லது பழி வாங்குவதற்காகவும் இது நிகழ்கிறது. கிட்டத்தட்ட 5% சமயங்களில் மறைந்த உறவினர்கள் தனது சந்ததியினருக்கு கனவுகள் மூலம் தகவலளித்து உதவுவதே அத்தகைய கனவுகளுக்கு காரணம்  ஆகும். சில நேரம் நம் பித்ருக்கள் நமக்கு உதவுவார்கள் என சொல்லப்படுகிறது, இது சரியா? என்ற கட்டுரையை படிக்கவும்.

ஒரே கனவு குறைந்தபட்சம் 3 முறை தோன்றினால் அது ஆன்மீக ரீதியானது என்று கருதலாம். யார் தனக்கு அநேகமாக உதவுவார்களோ அந்த குடும்பத்தினரை தான் மறைந்த குடும்பத்தினர் தொடர்பு கொள்வார்கள் (அல்லது அவர்களது கனவில் தோன்றுவார்கள்).  மறுமையில் உள்ள சூட்சும தேஹங்களுக்கு, விழித்திருக்கும் நிலையை விட கனவுகள் மூலம் தொடர்புகொள்வது எளிதாக உள்ளது. ஏனென்றால், அவர்கள் தொடர்பு கொள்ள முயற்சிக்கும் நபர், விழித்திருக்கும் நிலையில் ஐம்புலன்களில் மூழ்கியுள்ளார், மேலும் அவரிடம் மன ஒருமைப்பாடு இருப்பதில்லை. கனவு அல்லது உறக்க நிலையில், மனம் சூட்சும தகவல்களை எளிதாக ஏற்கிறது.

நீண்டகால நோயால் இறப்பு போன்று சாதாரணமாக மரணித்தவர்களை விட கொடூரமான அல்லது அகால மரணம் அடைந்தவர்கள் தான் அதிகளவு கனவுகளில் வர வாய்ப்புண்டு என்று நாங்கள் கண்டறிந்துள்ளோம். ஏனென்றால், இயற்கையான காரணங்களால் இறந்த நபர் மரணத்திற்கு மனரீதியாக தயாராக இருக்கிறார், ஆகவே, அவருக்கு மறுமையில் பயணத்தை தொடர்வது எளிதாக இருக்கும்.

10% நேரங்களில் மட்டுமே, ஏதேனும் தீய சக்தி ஒன்று, கனவுகளில் இறந்த உறவினராக தோன்றுகிறது. 

3. திடீரென்று இறந்த நண்பர் கனவில் வருவதன் பொருள் என்ன?

எனினும், இறந்தவர்கள் கனவில் வருவது மறைந்த குடும்பத்தினராகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. மறைந்த நெருங்கிய நண்பர் கூட ஒருவரது கனவில் வரலாம். இதன் முக்கிய காரணம் என்னவென்றால், பூமியில் உள்ள தனது குடும்பத்தினரை விட தொடர்புகொள்ள முயற்சிக்கும் நபரிடம் மிக நெருக்கமாய் உணர்வதால், அந்த நபரின்  உதவியை நாட அவரை  தொடர்புகொள்ளலாம். எஸ்.எஸ்.ஆர்.எஃப்.-பின் ஆராய்ச்சி குழு உறுப்பினர் ஒருவர் விளக்கிய ஒரு உதாரணத்தில் இவ்விஷயம் தெளிவாகும்.

சமீபத்தில், என் நண்பர் மாது (உண்மையான பெயரல்ல) எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஆராய்ச்சி மையத்தில் வந்து என்னை சந்தித்து, ஒரு பயங்கர விபத்தில் மாண்டுபோன அவரது நெருங்கிய நண்பர் தன் கனவில் அடிக்கடி தோன்றுவதை பற்றி கூறினார். ஒருமுறை, பல்கலைக்கழகத்தில் இருந்தபோது, மாது தனது நண்பருடன் ஒரு சுற்றுலாவுக்கு செல்லவில்லை, ஏனெனில் அவர் தனது நண்பர் அவருக்கு பயிற்சி அளித்த ஒரு போட்டியில் பங்குபெற்றார். சுற்றுலாவில் மாதுவின் நண்பர் மூழ்கி உயிர் துறந்தார்.

அவர் நண்பருடன் அப்போது இல்லாமல் போனதால் மற்றும் அங்கே இருந்திருந்தால் நண்பரின் உயிரை காப்பாற்றி இருக்கலாமோ என்ற எண்ணத்தால் குற்ற உணர்வு கொண்டு ஆழ்ந்த வருத்தத்திற்கு மாது ஆளானார். அவரிடம் இறுதிச் சடங்கிற்கு போகவும் தெம்பு இல்லை. இறுதிச் சடங்கிற்குப் பிறகு, மாதுவின் கனவில் அவரது நண்பர் தோன்ற ஆரம்பித்தார். ஒவ்வொரு முறையும் ஒரே கனவு வரும் மற்றும் சில நாட்களுக்கு ஒரு முறை இப்படி நடக்கும், பல ஆண்டுகள் இப்படியே தொடர்ந்தது. மாது இக்கனவினால் மிகுந்த அச்சம்கொண்டாலும், இவ்விஷயத்தை பற்றி யாரிடமும் உதவி கேட்கவில்லை.

பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரு நாள் தனது பயத்தை எதிர்கொண்ட மாது கனவில் நண்பரிடம் இவ்வாறு சொன்னார், “இதோ பாரடா, உன்னருகில் நான் இல்லாமல் போனதற்கு வருந்துகிறேன், நடந்ததை என்னால் மாற்ற முடியாது, ஆனால் இப்படியே மீண்டும் மீண்டும் உன்னை கனவில் கண்டும் என்னால் வாழ முடியாது. உனக்கு என்னிடமிருந்து என்ன வேண்டுமோ அதை எடுத்துக்கொள்…. வேண்டுமென்றால் என்னை கொன்றுவிடு…. எனக்கு கவலை இல்லை!”. அடுத்த நாளிலிருந்து மாதுவுக்கு அந்த கனவு வரவேயில்லை. கனவில் தனது நண்பரை எதிர்த்து நின்றது சரியே என்று மாது நினைத்தார். எனினும், ஆன்மீக ரீதியான கண்ணோட்டத்தில், இறந்த நண்பருக்கு அவர் நெருக்கமான தோழன் மாதுவிடமிருந்து தேவைப்பட்டது ஆன்மீக உதவி மட்டுமே. மாது புரிந்துக்கொள்ளவே மாட்டார் என பார்த்தவுடன் இறந்த நண்பரின் சூட்சும தேஹம் பின்வாங்கியது. மீண்டும் மாதுவை கேட்கவே இல்லை.

மாதுவின் சரியான செயல் என்னவாக இருந்திருக்க வேண்டும் என்றால், மறைந்த தனது நண்பருக்கு உதவ ஒரு சடங்கை ஏற்பாடு செய்ய உதவியிருக்க வேண்டும்.

4. கனவுகளில் வரும் மறைந்த உறவினர்களுக்கு உதவ ஒருவர் ஆன்மீக ரீதியில் என்ன செய்யவேண்டும்?

  • ஸ்ரீ குருதேவ தத்த என்ற நாமம் வலிமையான நாமஜபம் ஆகும், இது பித்ருக்கள் அல்லது மறைந்த உறவினர்களால் ஏற்படும் எல்லாவித பிரச்சனைகளுக்கும் நிவாரணம் அளிக்கும்.
  • பித்ருக்கள் அல்லது மறைந்த உறவினர்களால் ஏற்படும் மிக தீவிரமான பிரச்சனைகளுக்கு எஸ்.எஸ்.ஆர்.எஃப். பரிந்துரைப்பது, ஸ்ரீ குருதேவ தத்த நாமஜபத்துடன் நாராயண நாகபாலி (பித்ருக்களுக்கு), த்ரிபிண்டி சிரார்த்தம் போன்ற குறிப்பிட்ட சடங்குகளையும் செய்ய வேண்டும்.
  • சடங்கின் செயல்திறன் மற்றும் மறுமையில் உதவி தேவைப்படும் மறைந்த நபருக்கு உதவும் திறனை, சடங்கு நடத்தும் புரோஹிதரின் ஆன்மீக நிலை/திறன் மற்றும் மந்திரங்களே தீர்மானிக்கின்றன. பிரார்த்தனைகளை மட்டுமே கொண்ட சடங்குகள் மனோரீதியான நிலையில் உள்ளவை, குறிப்பிட்ட மந்திரங்களால் உருவாக்கப்படும் சக்தியுடன் ஒப்பிடுகையில் இதுபோன்ற சடங்குகளிங் பலன் மிக குறைந்ததாகும்.

ஆய்வுக் கட்டுரைகள்

கட்டட வடிவமைப்பாளரான ஷௌர்யா மேத்தா, தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக, மறைந்த தனது சகோதரி வலியில் இருப்பதுபோல கனவு கண்டு வந்தார். ஒரு குறிப்பிட்ட சடங்கை செய்த பின்னரே இது நின்றது.