ஒரு மகானை எவ்வாறு அடையாளம் காண்பது?

ஒரு சாதாரண மனிதனால் ஆன்மீக முன்னேற்றத்தில் உச்ச நிலையை அடைந்துள்ள ஒரு மகானை அடையாளம் காண இயலாது. இதைப் புரிந்து கொள்வதற்கு சில உதாரணங்களைப் பார்ப்போம்.

ஒரு மகானை எவ்வாறு அடையாளம் காண்பது?

அதே போன்று ஒருவர் ஆன்மீகத்தில் அடைந்துள்ள மன பரிபக்குவத்தையும் அவர் ஆன்மீகத்தில் எவ்வளவு உயர்ந்த மகான் நிலையில் உள்ளார் என்பதையும் அதே போன்று ஆன்மீகத்தில் உன்னத நிலையை அடைந்த மகானாலேயே உணர முடியும்.

ஒரு சராசரி மனிதனோ அல்லது மத நம்பிக்கை உள்ள மனிதனோ அல்லது ஒரு பக்குவப்பட்ட ஸாதகரோ கூட மற்றொரு மனிதன் ஒரு மகான் நிலையில் உள்ளவரா என்பதை நிர்ணயிக்கும் தகுதி உள்ளவர்களாக மாட்டார்கள். ஒரு ஸாதகரால் கூட தன்னை விட 20% ஆன்மீக நிலையில் உயர்ந்துள்ள ஒருவரையே அடையாளம் கண்டுபிடிக்க இயலும். ஏனெனில் 20% மேல் ஆன்மீக நிலையில் வித்தியாசம் ஏற்பட்டால் அதிர்வலைகளில் ஏற்படும் வித்தியாசம் சாதாரணமாக உணர முடியாத அளவிற்கு அதி சூட்சும நிலையில் இருக்கும்.

இரு மகான்களுக்கிடையே உள்ள வித்தியாசத்தைக் கண்டறிதல்

ஆன்மீக பயிற்சி செய்யும் பழக்கமுள்ள ஸாதகராலோ அல்லது ஆன்மீக பயிற்சி எதுவும் செய்யாத சாதாரண மனிதனாலோ இரு மகான்களுக்கிடையே ஆன்மீக அளவில் உள்ள வித்தியாசத்தை எடை போட இயலாது.

எந்த மகானை நாம் பின்பற்றுவது?

ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தி இவைகளின் மூலமாகவே ஒரு சாதாரண மனிதன் உலகைப் புரிந்து கொள்ள இயலும்.

ஒரு மகான் என்றால் அவர் எப்படி இருப்பார், அவரது நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனையான தோற்றத்தை மக்கள் தங்கள் மனங்களில் உருவாக்கி வைத்திருப்பார்கள். ஆன்மீகத்தை சரியாக புரிந்து கொள்ளாத குறுகிய கண்ணோட்டத்தின் அடிப்படையில் கூட இது இருக்கலாம். இதனால் யாரை மகானாக கருதி பின்பற்றுவது என்பதில் அவர்கள் தவறான முடிவு எடுப்பதற்கு கூட வாய்ப்புள்ளது. அதன் காரணமாக அவர்களால் :

  1. ஆன்மீகத்தில் உயர்ந்த நிலையில் உள்ளவர்களிடமிருந்து வெளிப்படும் சூட்சும ஆன்மீக அதிர்வலைகளை உணர முடியாமல் போகிறது.
  2. அந்த மகான் உயர்ந்த ஆன்மீக நிலையில் உள்ளார் என்பதை ஆன்மீகத்தில் உயர்ந்த நிலையில் உள்ள மற்றொரு மகான் சொன்னால் தான் அவர்களுக்கு புரியும். இல்லாவிட்டால் அந்த சாதுவின் உயர்ந்த ஆன்மீக நிலையை அவர்களால் புரிந்து கொள்ள இயலாது.

இது சாதாரண ஸாதகர்களை சந்தேகத்தில் ஆழ்த்தும். ஒரு பக்கம் நாம் மகான்களை, நம்மை ஆன்மீகத்தில் கரை சேர்க்கும் கலங்கரை விளக்கமாக நினைக்கிறோம். மறுபக்கம் யார் உண்மையான மகான் என்று நம்மால் புரிந்து கொள்ள இயலாதபோது யாரை நாம் மகான் என்று நம்புவது?

இதற்கு பதில் என்னவென்றால் ஒரு ஸாதகன் ஆறு கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட ஆன்மீக பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். கடவுளை உணர வேண்டும் என்ற முயற்சியில் இவன் ஒரு அடி முன்னோக்கி வைத்தால் இறைவன் இவனுக்கு உதவ பத்து அடிகள் இவனை நோக்கி எடுத்து வைக்கிறார். மேலும் அவனது ஆன்மீக வேட்கைக்கும் தகுதிக்கும் ஏற்றபடி வழிகாட்டும் தக்க ஆன்மீக குருவையும் காட்டிக் கொடுக்கிறார்.