மகான் நிலையைப் பற்றிய தவறான கருத்துக்கள்

மகான் நிலையைப் பற்றிய சில தவறான கருத்துக்கள் பின்வருமாறு:

  1. ஒரு நல்ல அல்லது மத நம்பிக்கை உடைய அல்லது அற்புதங்கள் செய்யக்கூடிய ஒருவரே மகான்

    ஒரு மனிதனின் ஆன்மீக நிலையை  பொருத்தே அவர் மகான் என தீர்மானிக்கப்படுகிறார். ஒரு மனிதன் பின்பற்றும் பாதையைப் பொருத்து ஒரு மகானின் ஆன்மீக நிலையை தீர்மானிக்கும் அடிப்படை மாறும். பல்வேறு காரணங்களால் மனிதர்கள் அற்புதங்கள் செய்ய முடியும். அற்புதங்கள் செய்வதற்கு அவர்களது முற்பிறவியின் ஆன்மீக பயிற்சியே பெரும்பாலும் காரணமாகிறது. எப்படியாயினும் அளவிற்கு மீறி ஆன்மீக சக்தியை வெளிப்படுத்துவதால் ஒருவரின் ஆன்மீக நிலை தாழ்வடைகிறது.

  2. இறந்த பிறகுதான் ஒருவர் மகானாக முடியும்

    ஒரு மனிதன் மகான் நிலையை அடைய இறக்க வேண்டும் என்பது அவசியமில்லை. குரு (70% ஆன்மீக நிலையை அடைந்த ஒரு ஆச்சார்யர்) ஸ்தானத்தை அடைந்த ஒரு மகானின் வழிகாட்டுதலின்படி ஒரு மனிதன் ஆன்மீக பயிற்சி செய்தால் அவன் தன் வாழ்நாளிலேயே 70% ஆன்மீக நிலையை அடைய முடியும்.

  3. தேர்ந்தெடுக்கப்பட்ட சில தனி மனிதர்களுக்கே மகான் என்ற பட்டம் அளிக்கப்படுகிறது

    மகானின் நிலை, அதாவது 70% ஆன்மீக நிலை அடைவது என்பது சில தேர்ந்தெடுக்கப்பட்ட தனிமனிதர்களுக்கானதோ அல்லது பிறவியிலேயே ஒரு மகானுக்குரிய ஆன்மீக நிலையை பெற்றிருக்க வேண்டும் என்பதோ இல்லை. பூமியில் மனிதனாகப் பிறந்த எவரும் மகான் நிலையை அடைய வேண்டும் என்ற உண்மையான ஆர்வத்துடன் இடைவிடாது அடுத்தடுத்த நிலைக்கு தேவையான ஆன்மீக பயிற்சியை செய்வதன் மூலம் மகான் நிலையை அடைய முடியும். ஒரு குருவின் வழிகாட்டுதலின் கீழ் நாம் எல்லோரும் நம் உண்மை இயல்பான ஆத்ம தத்துவத்துடன் இணைய முடியும்.

  4. ஒரு மகான் என்பவர் குறிப்பிட்ட மதத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்

    ஒரு மகானின் கண்ணோட்டம் உலகளாவி விரிந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது சம்ப்ரதாயம் என்ற தளைகள் அவரைக் கட்டுப்படுத்தாது. அதோடு ஒரு மகான் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவராக மட்டுமே இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஒருவர் ஒரு குறிப்பிட்ட மதத்தில் பிறந்திருந்தாலும் ஆன்மீக பயிற்சியை செய்த பின்பு மகான் நிலையை அடைய முடியும். மகான் நிலையை அடைந்த பின்பு அவர் தனிப்பட்ட ஒரு மதத்தை சார்ந்தவர் என்ற நிலையைக் கடந்து ஒவ்வொரு ஜீவனுள்ளும் கடவுளை, அதாவது ஆத்மாவைக் காணும் நிலையை எய்துவார். மேலும் இறைவனை அடைய எவ்வளவு மனிதர்கள் உள்ளனரோ அவ்வளவு வழிகள் உள்ளன என்ற ஞானமும் அவரிடம் இருக்கும்.