ஆளுமை குறைகள் மன அழுத்தத்தை சமாளிக்கும் திறனை பாதிக்கும்

1. மன அழுத்தத்தை சமாளிக்கும் திறனும் இயலாமையும்

இந்த பகுதியில் நாம் எவ்வாறு மன அழுத்தத்தை சமாளிக்கிறோம் என்பதை இரண்டு சித்திரங்கள் வாயிலாக வெளிப்படுத்துகிறோம். கீழே உள்ள சித்திரத்தில் ஒரு மனிதன் நான்கு பெரிய மூட்டைகளை சுமந்து செல்கிறான்.

ஆளுமை குறைகள் மன அழுத்தத்தை சமாளிக்கும் திறனை பாதிக்கும்

இந்த மனிதன் சுமக்கும் ஒவ்வொரு மூட்டையும் பின்வரும் வாழ்வின் பிரச்சனைகளுடன் தொடர்புடையதாகும்.

  1. கல்வியை புறக்கணிக்கும் மகள்
  2. மனைவியுடன் சச்சரவுகள்
  3. நோய்வாய்ப்பட்டிருக்கும் மகன்
  4. நிதி நெருக்கடி

ஆழ்மனது ஒரு குறிப்பிட்ட அளவு பதட்டத்தையே தாங்கிக்கொள்ளும். இது எதிர்கொள்ளும் பிரச்சனைகளின் அளவு, தீவிரம் மற்றும் நீடிக்கும் கால வரையறை ஆகியவற்றை பொறுத்தது. ‘1அ’ என குறிப்பிட்டிருக்கும் சித்திரத்தில் காட்டப்பட்டது போல தற்போது அந்த மனிதன் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தாங்கிக்கொண்டு வாழ்வை நடத்திச்செல்ல அவனால் முடிகிறது.

ஆளுமை குறைகள் மன அழுத்தத்தை சமாளிக்கும் திறனை பாதிக்கும்

  1. கல்வியை புறக்கணிக்கும் மகள்
  2. மனைவியுடன் சச்சரவுகள்
  3. நோய்வாய்ப்பட்டிருக்கும் மகன்
  4. நிதி நெருக்கடி
  5. ஒட்டகத்தின் முதுகை உடைத்த கடைசி துரும்பு – உத்தியோக உயர்வு கிடைக்காமை / கைத்தொலைபேசியை தவறவிடுதல்

‘1ஆ’ எனும் சித்திரத்தில் காண்பிக்கப்பட்டது போல பதவியுயர்வு கிடைக்காமை போன்ற கூடுதலான பிரச்சனைகளின் காரணமாக பதட்டம் அதிகமாகி, மருத்துவரீதியாக காண்பிக்கப்படும் மனஅழுத்தம் வெளிப்படுகிறது. ‘ஒட்டகத்தின் முதுகை உடைத்த கடைசி துரும்பு’ எனும் பழமொழிக்கு ஏற்றாற்போல் ‘பதவியுயர்வு கிடைக்காமை’ என்பதே அத்துரும்பாக இருந்து எதிர்மறை உணர்வுகளுக்கு உட்படுத்தி ஒரு மனிதனின் மனச்சோர்வுக்கு காரணமாக அமைகிறது. ஒருவருடைய ஆளுமையை பொறுத்து ஒட்டகத்தின் முதுகை உடைத்த கடைசி துரும்பு வேறுபட்டதாக அமையலாம். பதவியுயர்வு கிடைக்காமை போன்ற பெரிய விஷயமாகவும் இருக்கலாம். கைத்தொலைபேசி காணாமல் போனது போன்ற சிறிய விஷயமாகவும் இருக்கலாம். இரு நிகழ்வுகளும் ஒருவரை மனச்சோர்விற்கு உட்படுத்தலாம். வெளியிலிருந்து பார்ப்பவருக்கு இந்த மனிதரின் எதிர்வினை சமமற்றதாக இருக்கலாம்.  இந்த இறுதி துரும்புக்கு முன்பு ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான நிகழ்வுகளையும் பிரச்சனைகளின் தொடரையும் அவர்கள் காணவில்லை. அதுவே இம்மனிதரை விளிம்பு வரை கொண்டு வந்து மனச்சோர்விற்கு உள்ளாக்கி இருக்கிறது.

ஒரு தனிப்பட்டவரின் சிரமத்தையும் மனஅழுத்தத்தையும் சமாளிக்கும் இயலாமையே துன்பத்தை ஏற்படுத்துகிறது

2. மன அழுத்தத்தை சமாளிக்கும் நமது திறனை பாதிப்பது எது?

ஒருவரிடம் மன அழுத்தத்தை எதிர்கொள்ள காணப்படும் சக்தியை பொறுத்து பதட்டத்தை எதிர்கொள்ள காணப்படும் அவரின் திறனும் வேறுபடும். விரும்பத்தகாத பண்புகள் நமது ஆளுமையில் (ஆளுமை குறைகள்) காணப்படும் பொழுதும் முடிவடையாத காரியங்கள் காணப்படும் பொழுதும் கிடைக்கக்கூடிய மனோ சக்தி மிகவும் குறைவாகவே இருக்கும்.

ஆளுமை குறைகள் மன அழுத்தத்தை சமாளிக்கும் திறனை பாதிக்கும்

  • நாம் முன்பு குறிப்பிட்டவாறு ஆளுமை குறைகள் என்பவை கோபம், பயம், சோம்பேறித்தனம், சந்தேகம், பொய் கூறுதல் மற்றும் நம்பிக்கை அற்றிருத்தல் போன்றன. இவ்வாறான விரும்பத்தகாத பண்புகள் நாள் முழுதும் நமது எண்ணங்களை உட்கொண்டு நமது மனோ சக்தியை சூறையாடி விடுகின்றன.
  • முடிக்கப்படாத விஷயங்கள் என்பது தற்போது கூட ஒருவர் பயப்படக்கூடிய, நினைத்தாலே பதட்டத்தை ஏற்படுத்தக்கூடிய கடந்த காலத்தில் நடந்த விரும்பத்தகாத சம்பவங்கள் ஆகும். உதாரணமாக, ஒரு மாணவன் பரீட்சையில் தோற்கும் போது அவனுக்கு அது கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. தாம் எவ்வாறு அந்த தருணங்களில் வேதனைப்பட்டோம் என நினைத்து மறுபடியும் அவ்வாறான தோல்வி ஒன்று ஏற்பட்டால் அந்த வேதனையை மீண்டும் அனுபவிக்க வேண்டுமே என பீதி அடைகிறான். எனவே அவனுடைய மனது முடிக்கப்படாத விஷயங்களை தொடர்ச்சியாக சுமந்து வருகிறது. மன அழுத்தத்திற்கும் சிரமத்திற்கும் மனம் எவ்வாறு எதிர்விளைவு காண்பிக்க வேண்டும் என்று இந்த முடிக்கப்படாத விஷயங்கள் மனதை கட்டுப்படுத்துகின்றன. அதே உதாரணத்தை எடுத்துக்கொண்டால், மன அழுத்தத்தை ஏற்படுத்திய பரீட்சை தோல்வி வாழ்வில் மற்றைய துறைகளில் ஏற்படக்கூடிய தோல்விகளுக்கு அதே முறையில் மன அழுத்தமாகவோ போதைக்கு அடிமை ஆதலின் மூலமோ எதிர்விளைவை காண்பிக்கலாம். செய்ய வேண்டிய காரியங்களின் நீண்ட பட்டியலும் நமக்கு சிரமத்தை ஏற்படுத்தி முடிக்கப்படாத விஷயங்களை அதிகரிக்கலாம்.

நம்மிடம் அதிகமான ஆளுமை குறைகளும் முடிக்கப்படாத விஷயங்களும் காணப்படும் போது அவற்றால் உண்டாகும் பதட்டத்தை நடுநிலைப்படுத்த மிக கூடிய மனோ சக்தி விரயமாகிறது. இதன் காரணமாக வேறுபட்ட நபர்களிற்கிடையே மன அழுத்தத்தை எதிர்கொள்ள காணப்படும் சக்தியும் வேறுபடும். எனவே கடந்த கால நிகழ்வுகளினாலும்  முடிக்கப்படாத விஷயங்களினாலும் உண்டாக்கப்படும் பதட்டமும், ஒருவரின் ஆளுமையில் காணப்படும் விரும்பத்தகாத பண்புகளுமே, அவருடைய துன்பத்திற்கும், வாழ்வில் மன அழுத்தத்தை சமாளிக்க இயலாமைக்கும் காரணமாகும்

3. மனஅழுத்தத்தின் காரணியாக ஆளுமை

இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரு சந்தர்ப்பம் எப்பொழுதும் தானாக மனஅழுத்தத்தை கொடுக்காது. ஒருவர் அதனை நோக்கும் முறையை பொறுத்தே உள்ளது. ஒருவரின் ஆளுமையை பொறுத்து சந்தர்ப்பம் ஒன்றை நோக்கும் விதமும் வேறுபடும். உதாரணமாக, பார்ட்டி ஒன்றிற்கு செல்வதை ஒரு நிகழ்வாக கருதினால், பெரும்பாலோருக்கு அது மகிழ்ச்சிகரமான ஒரு விஷயமாகும். ஆனால், கூச்ச சுபாவமுள்ள ஒருவருக்கு அது  மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் சந்தர்ப்பம். பின்வரும் அட்டவணையில், ஆளுமையில் காணப்படும் விரும்பத்தகாத பண்புகள் எவ்வாறு ஒரு நிகழ்வை மன அழுத்தம் நிறைந்ததாக மாற்றுகிறது என்பதற்கு சில உதாரணங்களை காண்போம்.

விரும்பத்தகாத ஆளுமை குறைகள் மனஅழுத்தத்தின் காரணியாக மாறும் சந்தர்ப்பம்
1. தன்னம்பிக்கை குறைவு வேலைக்கான நேர்முகத்தேர்விற்கு செல்லுதல், சவாலான வேலை நிலைமை
2. உணர்ச்சி வசப்படுதல் பாட்டி பரிசாக அளித்த மோதிரத்தை தொலைத்து விடுதல்
3. கூச்ச சுபாவம் எதிர்பாலாருடன் உரையாடுதல்
4. உணர்ச்சிவசப்படுதல்/ எதிர்பார்ப்பு

குடும்ப அங்கத்தினருடனோ நெருங்கிய நண்பர்களுடனோ சர்ச்சையில் ஈடுபடுதல்

ஆளுமை குறைகளும் அகம்பாவமும் குறைவாக காணப்படும் நபர்களால் கூடிய அளவு மனஅழுத்தம் நிறைந்த சந்தர்ப்பங்களை கையாள முடியும்.  மாறாக, ஆளுமை குறைகள் அதிகமாக இருப்பவர்கள் எந்த வித மனஅழுத்தத்திற்கும் சுலபமாக உடைந்து போவார்கள்.