1. ஒரு மனையின் எதிர்மறை அதிர்வலைகள் மற்றும் அதன் ஆக்கிரமிப்பு பற்றிய அறிமுகம்

உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான வீடுகளில் எதிர்மறை அதிர்வுகளின் தாக்கம் இருப்பதாக ஆன்மீக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த எதிர்மறை அதிர்வுகள் பல காரணங்களால் ஏற்படலாம் :

    • மனையில் வாழும் மக்கள்
    • மனை எந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகிறது?
    • மனை :
      • கட்டுமான வகை, வீட்டின் தூய்மை, வீட்டில் உள்ள பொருட்கள் மற்றும் அவற்றை வைத்திருக்கும் இடம் போன்றவை.
      • வீடு கட்டப்பட்டுள்ள நிலம்
      • சுற்றியுள்ள பகுதி

மிக முக்கியமாக இந்த எதிர்மறை அதிர்வலைகள், ஆவிகளை (பிசாசுகள், பேய்கள், தீய சக்திகள் போன்றவை) அல்லது பித்ருக்களை ஈர்க்கின்றன. எதிர்மறை அதிர்வுகளைக் கொண்ட மனைகளில் பேய்கள் மற்றும் பித்ருக்களை ஈர்கும் காரணிகள் மற்றும் அவற்றின் சதவீதங்களை பின்வரும் விளக்கப்படம் காட்டுகிறது.

உதாரணமாக, ஒரு மனையில் வாழ்பவர்களிடம் கோபம், பேராசை, போதை பழக்கத்திற்கு அடிமையாதல் போன்ற பல ஆளுமை குறைகள் இருந்தால், அவர்கள் ஆவிகள் அல்லது பித்ருக்களை ஈர்க்கிறார்கள். மேலும் அந்த மனையில் போதை மருந்து விற்பனை, தாமஸீகமான  இசை போன்ற பயன்பாடுகள் இருந்தால், அவை மீண்டும் ஆவிகளை ஈர்க்கும். மேலும், நமது முன்னோர்களில் 60% பேர் இறந்த பிறகு பூமியில் வாழ்கிறார்கள். இந்த மூதாதையர்களில் ஏறக்குறைய பாதி பேர் தங்களுக்குப் பிடித்த இடம் (மூதாதையர் வீடு) அல்லது பொருளைச் சுற்றியும், மற்ற பாதிப் பேர் தாங்கள் மிகவும் விரும்பும் நபர்களைச் சுற்றி வருகின்றனர். பூமியில் இருக்கும் பித்ருக்கள் தங்கள் சந்ததியினருக்கோ அல்லது அவர்களின் மூதாதையர் வீட்டில் வசிப்பவர்களுக்கு கஷ்டங்கள் ஏற்படுத்துவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

கட்டுரையைப் பார்க்கவும் – ஏன் என் மூதாதையர்கள் (பித்ருக்கள்) என்னை தொந்தரவு செய்ய விரும்புகிறார்கள்?

இருப்பினும், பெரும்பாலான மக்கள் ஆவிகளின் கஷ்டம் தரும் சக்தியால் பாதிக்கப்பட்டிருப்பதால், தங்கள் மனையில் உள்ள கஷ்டம் தரும் சக்தி குறித்து அறியாமல் உள்ளனர். இதனால் அவர்கள் ஆவிகள் இருப்பதையோ, பித்ருக்கள் இருப்பதையோ, எதிர்மறை அதிர்வலைகளையோ உணருவதில்லை. பெரும்பாலான மக்கள் மீது கஷ்டம் தரும் சக்தியின் படலம் (சராசரியாக 4 செ.மீ.) சூழ்ந்துள்ளது. மேலும் ஆறாவது அறிவு இல்லாததாலும்  ஆவிகளால் பீடிக்கப்பட்டுள்ள சூட்சும கஷ்டத்தை உணர முடிவதில்லை.

மருத்துவமனைகளில் ஊடுருவும் மருந்துகள் மற்றும் கிருமிநாசினிகளின் நெடியை மருத்துவப் பணியாளர்கள் ஒரு பொருட்டாக கருதாமல், அலற்றிகொள்ளாமல் தொடர்ந்து வேலை செய்வதை போல், கஷ்டம் தரும் சக்தியின் படலத்தினால் சூழ்ந்துள்ளவர்கள், அந்த மனையில் அதிகமான ரஜ-தம நடவடிக்கைகள் ஈடுபடும்போது நன்றாக உணர்கிறார்கள். உதாரணமாக, பீடிக்கப்பட்டிருக்கும் (அசுர சக்திகளுக்கு வசப்படுதல் மற்றும் பேய் பிடித்தலின் அர்த்தம் (spiritualresearchfoundation.org) குடிப்பழக்கம் உள்ள ஒரு நபர், அந்த வளாகத்திற்குள் அதிக மதுபானம் வரும்போது மட்டுமே மகிழ்ச்சியாக இருப்பார்.

2. னையில் ஆவிகள் மற்றும் எதிர்மறையான அதிர்வுகளிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகள்

ஒருவரின் சுற்றுச்சூழலை ஆன்மீக ரீதியாக தூய்மை படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளின் ஒப்பீட்டு முக்கியத்துவத்தை பின்வரும் அட்டவணை காட்டுகிறது:

பரிகாரம் முக்கியத்துவம் -% அளவில்
மனையில் வசிப்பவர்களின் ஆன்மீக பயிற்சி 30
மனையில் வசிப்பவர்கள் மனதுக்கினிய ஆளுமை திறன்  கொண்டவர்கள் 30
மனையை  சுத்தம் செய்யும் சடங்குகள் 14
மகான்களின் விஜயம் 10
கதவுகளையும் ஜன்னல்களையும் திறந்து வைத்திருத்தல் 2
ஒரு மனையில் சூட்சம அதிர்வுகள் தோன்ற காரணமாக விளங்கும் குறைபாடுகளை நீக்குதல் 2
அவுஜா (Ouija) பலகை கொண்டு தீய சக்திகளை பரிசோதனை செய்யாமல் இருப்பது 2
இதர (துளசி முதலிய ஸாத்வீகமான செடிகளை வளர்ப்பது) 10

குறிப்பு : பின்வரும் ஆன்மீக நிவாரண முறைகள் ஒரு மனையில் எதிர்மறையை குறைக்க உதவும் பயனுள்ள முறைகள்

  • எஸ்.எஸ்.ஆர்.எஃப். (SSRF)யின் ஊதுபத்திகளை ஏற்றுதல்
  • தீர்த்தம் (புனித நீர்) தெளித்தல்.

ஒருவர் தொடர்ந்து மேற்கொள்ளும் ஆன்மீக பயிற்சியுடன், நிவாரண முறைகளை பக்தியுடனும், ஆன்மீக உணர்வுடனும் செய்யும் போது இதன் ஆற்றல் அதிகரிக்கிறது. மனையியல் அறிவியல் மற்றும் பெங்ஷுயினால், ஒரு மனையிலிருந்து ஆவிகளை அகற்றுவது அவ்வளவாக பலனளிக்காது. இரு வகைகளிலும் கட்டமைப்பில் மட்டுமே மாற்றம் கொண்டு வர சொல்கின்றன ஆனால் பொருத்தமான ஆன்மீக நிவாரண முறைகள் மட்டுமே அதிக பலனைத் தருகின்றன. இருப்பினும் கீழ்நிலையை சார்ந்த சிறிய ஆவிகள் மட்டுமே ஆன்மீக நிவாரண முறைகள்  மூலம் விலகிச் செல்கின்றன. ஆவிகளால் பீடிக்கப்பட்டுள்ள  வீட்டை, ஆன்மீக ரீதியாக  சுத்தப்படுத்த மாந்திரீர்களின் முயற்சியின் விளைவைப் பற்றிய ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை பின்வரும் அட்டவணை காட்டுகிறது.

பீடித்தலின் இயல்பான தன்மை1 %2 நன்மை
நிஜம் 30 03
கற்பனை 30 304
இதர 40 104

அடிக்குறிப்புகள் :

  1. ஆவிகளால் பீடிக்கப்பட்டிருக்கும் தன்மையை மூன்று பிரிவாக வகைப்படுத்துகிறோம்
    1. நிஜம்: இந்த வகையில் உண்மையாகவே ஆவிகள் அல்லது பித்ருக்களால் பீடிக்கப்பட்டுள்ளது
    2. கற்பனை: இந்த வகையில், வீட்டில் ஆவிகள் இருப்பதாக மக்கள் கற்பனையில் உள்ளார்கள் அல்லது மாயதோற்றத்தில் இருபார்கள்
    3. இதர: வீட்டின் அமைப்பு, சுற்றியுள்ள நிலம், குடியிருப்போரின் எண்ணங்களால் ஏற்படும் எதிர்மறையான அதிர்வலைகளால் ஆவிகளால் பீடிக்கப்பட்டிருப்பதாக தோன்றலாம்.
  2. இந்த நெடுவரிசை சராசரியாக நிஜம், கற்பனையான அல்லது எதிர்மறையான அதிர்வுகளின் விகிதாசாரத்தை வழங்குகிறது.
  3. பேயோட்டுபவர், மந்திரவாதி, தாந்திரிக் (பில்லி சூனியக்காரர்கள்), ஆன்மீக நிவாரணம் அளிப்பவர், பாதிரியார் ஆகியோர் ஆவியை அகற்றுவதற்கான விகிதாசாரம் குறைவாக உள்ளது.
  4. அதாவது ஆவிகள் நடமாட்டம் இருப்பதாகக் கற்பனை செய்தவர்களில் 30% பேர், ஆவிகள் விரட்டுபவர் அல்லது ஆவிகளுக்கு எழுச்சி தருபவர்கள் சுத்தம் செய்த பிறகு ஆவிகள் அகன்று விட்டதாக மனோரீதியாக நிம்மதி அடைவார்கள். மேலும், 10% மக்கள் எதிர்மறையான அதிர்வலைகளின் பாதிப்பிலிருந்து மட்டுமே விடுதலை பெறுகிறார்களே தவிர ஆவிகளிடமிருந்து அல்ல.

ஆறு அடிப்படை கோட்பாடுகள் மூலம் மேற்கொள்ள படும் ஆன்மீக பயிற்சி மட்டுமே, மனையிலிருந்து ஆவியை நிரந்தரமாக ஒழிக்கும் ஒரே வழியாகும்.