சுருக்கம் – நல்லனவற்றிற்கும் தீயனவற்றிற்கும் இடையே நடக்கும் யுத்தம்

SSRF, 'சூட்சும உலகம் ' அல்லது 'ஆன்மீக பரிமாணம் ' என்பதை ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தி ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டது என வரையறுக்கிறது. சூட்சும உலகம் என்பது கண்களால் காண இயலாத தேவர்கள், ஆவிகள், சுவர்க்கம் நிறைந்த உலகை குறிக்கிறது. இதை நம் ஆறாவது அறிவால் மட்டுமே உணர முடியும்.

ஆரம்ப காலத்திலிருந்தே, நல்லது, தீயது இரண்டிற்கும் இடையே சூட்சும யுத்தம் நடந்து கொண்டுதான் உள்ளது. இது மறுபடியும் சூட்சும உலகில் 1999-2025 வருடங்களில் நடந்து கொண்டிருக்கிறது. இதன் விளைவாக 2015–2028 வருடங்களில் பூமியில் யுத்தம் நடைபெறும். இதன் பிறகு இந்த உலகம், யுத்தத்தின் விளைவுகளில் இருந்து மீளுவதற்காக சில காலம் எடுத்துக்கொண்டு, பின்னர் ஒரு புதிய சகாப்தத்திற்காக தன்னை தயார்படுத்திக் கொள்ளும். இந்த புதிய சகாப்தம் தெய்வீக ராஜ்யம் என்று அழைக்கப்படும்; இதில் மனித இனம் ஆயிரம் வருடங்களுக்கு அமைதியையும் தர்மத்தையும் அனுபவிக்கும். நாம் வாழும் இந்த காலம் மிகவும் மகத்துவம் வாய்ந்தது. ஏனென்றால், இந்த யுத்தத்தின் விளைவான பெரிய மாற்றங்கள் பிரபஞ்சம் முழுவதும் உணரப்படும். எனினும், தற்போதைய காலம் ஆன்மீக பயிற்சி செய்து கடவுளோடு ஒன்றிணைவதற்கும் (அதிகபட்ச ஆன்மீக நிலை) மிகவும் உகந்ததாகும்.

குறிப்பு: இந்த கட்டுரையைப் புரிந்து கொள்ள நீங்கள் மூன்று சூட்சும அடிப்படை கூறுகளான ஸத்வ, ரஜ, தம என்ற கட்டுரையை படிப்பது அவசியம். எல்லா படைப்புகளும் இந்த மூன்று கூறுகளால் ஆக்கப்பட்டவை. இனி வரும் பகுதிகளில், இந்த கூறுகள் மற்றும் இதன் உரிச்சொற்கள் ஸாத்வீகமான, ராஜஸீகமான மற்றும் தாமஸீகமான என்று குறிப்பிடப்படும். உதாரணத்திற்கு, நாம் ஒருவரை ஸாத்வீகமான நபர் என்று குறிப்பிட்டால், அவருள் ஸத்வ குணம் அதிக சதவிகிதம் உள்ளது என்றும் அவர் ஆன்மீக கண்ணோட்டத்தில் பவித்திரமானவர என்று அர்த்தம்.

1.  நல்லது, தீயது என்பதின் அர்த்தம்

ஆன்மீக அறிவியலின் கோணத்தில், கீழ்க்கண்ட முக்குணங்களை உடையவர் எவரோ அவர் உயிரோடிருந்தாலும் அல்லது இறந்து சூட்சும உடலுடன் இருந்தாலும் அவரே ‘நல்லவர்’ –

இந்தியாவைச் சேர்ந்த உன்னத மகான் ஆதி சங்கராச்சாரியாரின் (8 - 9 -ஆம் நூற்றாண்டு) கூற்றுப்படி, தர்மம் என்பது 3 பணிகளை சாதிக்கின்றது:
1. சமூக அமைப்பை சிறந்த நிலையில் வைத்திருத்தல்
2. ஒவ்வொரு உயிரின் உலக முன்னேற்றத்தை ஏற்படுத்துதல்
3. ஆன்மீக ரீதியிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்துதல்.
- ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார்
  • ஆன்மீக பயிற்சி செய்வதில் தீவிரமான விருப்பம்
  • தன் அகம்பாவம் உட்பட, எல்லாவற்றையும் கடவுளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற கொள்கை
  • வாழ்வில் கடவுளோடு ஒன்றிணையும் குறிக்கோள்

இவர்கள் பொதுவாக, 30% -க்கு மேலான ஆன்மீக நிலை உடைய, தர்மத்தை பின்பற்றும், ரஜ-ஸத்வ அல்லது ஸத்வ பிரதானமானவர்கள் ஆவர். மேலே கூறப்பட்டுள்ள பண்புகள் இல்லாதவர்கள், அனாதை இல்லங்களுக்கு நன்கொடை அளிப்பது போன்ற சில நல்ல கார்யங்களை செய்யும் போது, இந்த செயல்கள் மெச்சதக்கது ஆயினும், ஆன்மீகத்தின்படி (குறிப்பாக, இந்த காரியங்களை கர்வத்துடன் செய்தால்) இவர்கள் ‘நல்லவர்’ அல்லர். நல்லவர்களும், நல்ல சூட்சும உடல்களும், நல்ல சக்திகளுள் அடங்கும்.

ஆனால் தீயவர்களிடம் (உயிரோடிருப்பவர் அல்லது சூட்சும உடல் கொண்டவர்) அதர்மமும், அஹம்பாவம், ரஜ-தம அல்லது தமோ குணம் மிகுந்து இருக்கும். அவர்கள் ஆன்மீக ஸாதனை செய்தாலும், அது ஆன்மீக சக்தியை அடைவதற்கும் பலத்தை பெறுவதற்குமே. இங்கு அஹம்பாவம்   என்பதை ஆன்மீக கண்ணோட்டத்தில் பொருள் கொள்ள வேண்டும். அஹம்பாவம் என்பது அன்றாட வாழ்கையில் தன்னைப்பற்றிய அளவுக்கு அதிகமான தற்பெருமை, சுய கௌரவம் போன்றவற்றை குறிப்பிட்டாலும், ஆன்மீக கண்ணோட்டப்படி இது ‘நான் கடவுளிடமிருந்து வேறுபட்டவன்’ என்ற பொருளைக் குறிக்கும்.  தீயவர்களும், தீய சூட்சும உடல்களும், தீய சக்திகளுள் அடங்கும்.

ஆன்மீக கோணத்தில் எவனொருவன் கடவுளை அடைய ஆன்மீக ஸாதனை செய்து தன் உடல், மனம், செல்வம், அஹம்பாவம் ஆகிய எல்லாவற்றையும் கடவுளிடம் சமர்ப்பிக்கின்றானோ, அவனே நல்லவன் என்று கருதப்படுகிறான். இந்த காலகட்டத்தில் பூமியில் வெகு சில நல்லவரே உள்ளனர். பெரும்பான்மையோர் ’தீயவர்’ என்ற வகுப்பில் சேர்வர். இவர்களில் 30% -தினர் உலகத்தின் ஸாத்வீக தன்மையை, ஆன்மீக தூய்மையை குறைத்து சமூகத்திற்கு கெடுதல் செய்பவர்கள். பெரும்பான்மையோர் ஆன்மீக பயிற்சி செய்யாததாலும், பொருளுக்கு ஆசைப் படுவதாலும் தீய சக்திகளால் ஆக்ரமிக்கப்பட்டு அவற்றின் கைக்கூலிகளாக மாறுவர்.

2. நல்லது, தீயது எங்கிருந்து வருகிறது

2.1 தீயது எப்போது தோன்றியது?

இந்த பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும் ஒரே கடவுளால் உருவாகப்பட்டது. கடவுளின் தத்துவம் இந்த பிரபஞ்சத்திலுள்ள எல்லாவற்றிலும் அதற்கு அப்பாலும் நிறைந்துள்ளது. அதன்படி நல்லது, தீயது இரண்டும் கடவுளால் உருவாக்கப்பட்டவை. இவை இரண்டும் பிரபஞ்சத்தின் துவக்கத்திலிருந்தே இருப்பவை. எனினும், தீய அம்சம் அப்பொழுது ஒரு விதையாக, செயல்படாத நிலையில் இருந்தது.

படைப்பின் ஆன்மீக விதியின்படி, கடவுள் தத்துவம் தான் எல்லாவற்றையும் உருவாக்குகிறது, நிலைபெற செய்கிறது, பின்பு திரும்பவும் எல்லாவற்றையும் தன்னுள்ளே லயப்படுத்திக் கொள்கிறது. இவ்வாறு, பிரபஞ்சம் உருவானது; இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நீடித்திருக்கும், பின்னர் லயத்திற்கு உட்படும். இந்த தெய்வீக திட்டத்தின் படி, பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் விதை வடிவில் இருந்த தீயது முளைவிட்டு சீராக வளர்ந்து வருகிறது. இது தீய சூட்சும சக்திகளாகவும், மனிதர்களின் வாயிலாகவும் வெளிப்படுகிறது. காலப்போக்கில், தீயது தொடர்ந்து வளர்ந்து 100% அடையும் போது, இந்த பிரபஞ்சம் அழிக்கப்படும்.

2. 2 நல்லது, தீயது – எங்கிருந்து சக்தி கிடைக்கிறது?

நல்லது, தீயது இரண்டும் கடவுள் தத்துவத்தில் இருந்து உருவாவதால், அவைகள் தங்களின் சக்தியை கடவுளிடமிருந்து பெறுகின்றன. இது ஒரு முரண்பாடாக தோன்றினாலும் இந்த ஒப்புமையிலிருந்து புரிந்து கொள்ளலாம். ஒரு கம்பெனியின் இரண்டு தொழிலாளர்கள் சமமான அளவில் கடினமாக உழைத்து ஒரே சம்பளம் பெறுகிறார்கள். சம்பளம் கைக்கு வந்தபின் அதில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது அவர்களை பொருத்தது. ஒருவர் அதை தனது தேவைக்கும், மிகுந்ததை சமூக நன்மைக்கும் பயன்படுத்துகிறார். இன்னொருவன் அதை சமூகத்திற்கு தீங்கு விளைவிக்க பயன்படுத்துகிறான். ஆன்மீக பயிற்சி செய்து நாம் ஆன்மீக சக்தியை பெறுவது, சம்பாதிப்பதை போன்றது. நல்லவர் மற்றும் தீயவர் ஆன்மீக பயிற்சி செய்வதன் நோக்கம் மிகவும் வேறுபட்டது. நல்லவர்கள், கடவுளை அடைவதற்கும் தீயவர்கள், தங்களின் ஆசைகளை அடைவதற்கும் அவரவர் சக்தியை பயன்படுத்துகின்றனர். நாம் ஆன்மீக சக்தியை சேகரித்த பின், அதை நம் சுய விருப்பப்படி உபயோகிக்கும் உரிமையை கடவுள் நமக்கு வழங்கியிருக்கிறார். இந்த ஆன்மீக சக்தியை தர்மத்திற்காக உபயோகிக்கும் பொழுது நல்ல சக்தி எனவும், அதர்மத்திற்காக உபயோகிக்கும் பொழுது தீய அல்லது ‘கருப்பு சக்தி’ எனவும் அழைக்கப்படுகிறது.

இதில் முக்கியமானது என்னவென்றால், ஆன்மீக சக்தியை தர்மத்திற்காக உபயோகிப்பதால் ஒருவர் கடவுளின் அந்த அம்சத்துடன் ஒன்றிணைகிறார். அதனால், ஒன்றிணையும் அளவிற்கு ஏற்ப அவர் தெய்வீக சக்தியை பெறுகிறார். அதன்படி, அவர் ஆன்மீக சக்தியை இழப்பதில்லை. மாறாக, ஒருவன் தன் ஆன்மீக சக்தியை அதர்மதிற்காக உபயோகிக்கும்போது, அது கடவுளின் இயல்பிற்கு மாறாக இருப்பதால், அந்த அளவிற்கு தன் ஆன்மீக சக்தியை இழக்கிறான்.

3. நல்லது, தீயது – அவற்றின் குறிக்கோள் என்ன?

நல்ல சக்தியின் குறிக்கோள், இந்த பிரபஞ்சம் முழுமையிலும் சத்வ தன்மையை நிலைநாட்டுதல் ஆகும். சுருக்கமாக அப்பழுக்கற்ற பிரபஞ்சத்தை உருவாக்குவதே இதன் நோக்கம். மாறாக தீய சக்திக்களுக்கு ரஜ, தம குணங்கள் நிறைந்த அசுர ராஜ்யத்தை உருவாக்குவதே அவற்றின் நோக்கம். அசுரத்தனமான ஆசைகளை பூர்த்தி செய்துகொள்ள உகந்த ராஜ்யமாக இது இருக்கும். இந்த ஆசைகள் வேறுபட்டவை. அளவிற்கு அதிகமான காம இச்சைகள், அதிகார துஷ்பிரயோகம், சாதகர்களுக்கு தொந்தரவு தருவது, அவர்கள் கடவுளுடன் ஒன்றிணைவதற்காக ஆன்மீக பயிற்சி செய்வதை தடுப்பது போன்ற பல்வேறு மாறுபட்ட ஆசைகளாக இருக்கும்.

4. நல்லது, தீயது – அவற்றின் சமநிலை என்ன?

இந்த பிரபஞ்சம் பதினாலு லோகங்களால் ஆனது. இதில் ஏழு நல்ல லோகங்களும், ஏழு தீய லோகங்களும் அடங்கும். பூமி ஒன்றே ஸ்தூலமான லோகமாகும், மற்ற எல்லா லோகங்களும் சூட்சுமமானவை. சுவர்க்கம் என்பது இறப்பிற்கு பிறகு நாம் போகக்கூடிய நல்ல லோகங்களுள் ஒன்றாகும்.

நல்லது, தீயது ஆகிய இரண்டினுடைய பணியின் இலக்கு முற்றிலும் எதிர்மாறாக இருப்பதால், இரண்டுக்கும் எப்போதும் முரண்பாடு இருந்து கொண்டே உள்ளது. இது ஒரே நிலையில் இல்லாமல் மாறிக்கொண்டே இருக்கும். இதன் விளைவுகள் பிரபஞ்சம் முழுவதும் உணரப்படுகிறது. உதாரணத்திற்கு அசுர சக்திகள் மற்றும் தீய சக்திகளின் ஆதிக்கம் அதிகரிக்கும் பொழுது, பூமி (பூலோகம்) மற்றும் சுவர்க்கம் போன்ற நல்ல லோகங்களில் அதன் பாதிப்பு ஏற்பட்டு, அங்குள்ள நிலைமை மோசமடைகிறது. அதனால் பூமியில் நமக்கு உடல், மனம் மற்றும் ஆன்மீக நிலையில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஆனால் நரகம் போன்ற பாதாள லோகங்களில் இது நல்ல விளைவை ஏற்படுத்துகிறது. மாறாக, நல்ல சக்தியின் பக்கம் ஏற்றம் ஏற்படும்போது, சூட்சும அடிப்படையான ஸாத்வீக தன்மை அதிகரித்து, பிரபஞ்சம் முழுவதும் ஆனந்தம் ஏற்படுகிறது. பூமியில் அமைதியும் வளமும் ஏற்படுகிறது. இதனால் அசுர சக்திகளுக்கு கஷ்டம் உண்டாகிறது. அவற்றிக்கு ஏற்படும் சங்கடம், எல்லோரிடமும் நன்றாக பழக கட்டாயப்படுத்தப்பட்ட ஒரு குற்றவாளியின் நிலைமையை போலாகும்.

4.1 தராசு தீய சக்தியின் பக்கம் சாய்வதற்கான காரணங்கள் என்ன?

எந்த காலத்திலும் தீய சக்திகள் பிரபஞ்சத்தில் தராசை தன் பக்கமே இழுக்கப் பார்க்கின்றன. அசுர சக்திகள் தொடர்ந்து, சூட்சும ஸத்வ குணத்தை குறைக்க முயற்சித்தாலும், ஸாதகர்களின் ஆன்மீக பயிற்சி மற்றும் தர்ம பிரசாரத்தை தடுத்தாலும், மஹான்களும், ஸாதகர்களும் ஆன்மீக பயிற்சி செய்யும்வரை நல்ல சக்தியின் கையே மேலோங்கி இருக்கும். இதன் முக்கிய காரணம் மஹான்களும் சாதகர்களும், தங்களின் பக்தியின் மூலம் தீய சக்திகளை முறியடிக்க இறைவன் அவர்களுக்கு துணை புரிகிறான்.

நல்லது, தீயது ஆகியவற்றின் முழு சக்தி மையங்கள் சூட்சும லோகங்களில் உள்ளன. பூமியில் உள்ள நன்மக்களும் தீயவர்களும் இந்த சூட்சும நல்ல மற்றும் தீய சக்திகளின் கைப்பாவைகளாக இயங்குகின்றனர். இவர்களுக்கு சூட்சும லோகங்களில் உள்ள நல்ல அல்லது தீய சக்திகளிடமிருந்து சக்தி கிடைக்கிறது.

4.2 ஆன்மீக நிலையும், தீய சக்திகளின் தாக்குதலும் (பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள் போன்றவை)

தங்களின் ஆன்மீக நிலைக்கு +/- 10% ஆன்மீக நிலையிலுள்ள நல்ல சக்திகளையே தீய சக்திகளால் தாக்க முடியும். 10% க்கு மேல் ஆன்மீக நிலையில் வித்தியாசம் உள்ளவர்களை பேய், பிசாசுகளால் தாக்க முடியாது.  காரணம், கஷ்டத்தின் அளவிற்கு 10%-20% அதிகமாக கடவுளின் பாதுகாப்பு கவசம் இருப்பதால், குறைவான ஆன்மீக நிலையிலுள்ள ஆவிகளால் அவர்களைத் தாக்க முடியாது.

பொதுவாக ஆன்மீக நிலையில் 10% தங்களைக் காட்டிலும் கீழே உள்ளவர்களை தீய சக்திகள் தாக்காது. ஏனென்றால் இவர்களை தீய சக்திகள் ஒருபொருட்டாக மதிப்பதில்லை.  உதாரணத்திற்கு, 30% ஆன்மீக நிலையில் உள்ள நல்லவரை, 20% – 40% ஆன்மீக நிலையிலுள்ள தீய சக்திகள் தாக்கும்.

மக்கள் உலக விஷயங்களில் ஈடுபாடு கொண்டு ஆன்மீக பயிற்சி செய்யாதபோது தீய சக்திகளுக்கு மனிதகுலத்தை தங்களின் அடிமையாக்கிக் கொள்வது சுலபமாகிறது. மனிதகுலத்தின் தம குணங்கள் அதிகரிக்கும்போது தீய சக்திகளும் அதிக தம குணங்கள் நிறைந்ததால் தங்களின் ஆதிக்கத்தை நிலை நிறுத்த ஏதுவாகிறது.

‘எந்த அளவுக்கு ஆன்மீக நிலை தீய சக்திகளின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்?’ என்ற கட்டுரையைப் படிக்கவும்

5. முதன்முதலில் எப்போது நல்லது, தீயது ஆகிய இரண்டுக்கும் போராட்டம் நடந்தது?

இந்த பிரபஞ்சத்தின் ஆயுட்காலம் நான்காக பிரிக்கப்பட்டுள்ளது சத்யயுகம், திரேதாயுகம், த்வாபரயுகம், கலியுகம். சத்யயுகம் ஆன்மீகப்படி அதிகபட்ச புனிதத் தன்மை கொண்டது. அதற்கு பிறகு ஒவ்வொரு யுகத்திலும் மனிதனின் சராசரி ஆன்மீக நிலை வெகுவாக குறைந்து கலியுகத்தில் அடிமட்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இது ஒரு கலவரம் நிறைந்த யுகம். இது 432,000 வருடங்களுக்கு நீடிக்கும்.  இதுவரை நாம் 5100 வருடங்களுக்கு மேல் கடந்திருக்கிறோம்.

ஒவ்வொரு யுகத்திலும் சத்யயுகம், த்ரேதாயுகம், த்வாபரயுகம், கலியுகம் அடங்கிய சிறிய யுகசுழற்சிகள் உள்ளன. இந்த ஒவ்வொரு குறு யுகங்களிலும் மனிதர்களின் ஆன்மீக விழிப்புணர்வு மற்றும் ஆற்றல் வளம் மாறுகின்றன. மேலும் ஒவ்வொரு சிறிய யுகசுழற்சியும், இன்னும் சிறிய நான்கு யுகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதுபோல் குறு யுகசுழற்சிகளுக்கு உள்ளே குறு யுகசுழற்சிகள் என்று உட்பிரிக்கப்படுவது ஆறு முறை நடக்கிறது. இருப்பதிலேயே மிக சிறியதான குறு யுகசுழற்சி தோராயமாக 1000 வருடங்கள் நீடிக்கும். தற்போதுள்ள கால கணக்குப்படி இந்த 1000 வருடங்கள் கணிக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு, சத்யயுகத்தில் இது போன்ற குறு யுகசுழற்சி அதிக வருடங்கள் நீடித்திருக்கும். ஏனென்றால், சத்யயுகம் அதிகபட்ச சூட்சும ஸாத்வீகத் தன்மை கொண்டது. ஸாத்வீகத்தின் சிறப்பம்சம் அதன் பரந்து விரிந்த தன்மையாகும், தாமஸீகத்தின் தன்மை அழிவாகும். அதனால், கலியுகத்தின் ஒரு வருடம் சத்யயுகத்தில் பல வருடங்களாக நீடிக்கும்.

ப்ரபஞ்சத்தின் படைப்பின் ஆரம்பத்தில், 100% நல்ல சக்தியின் ஆதிக்கம் இருந்தது. அசுர சக்திகள் அப்போது செயல்படாத நிலையில் அல்லது விதை உருவில் இருந்தன. ஏனென்றால், முதலாம் யுகத்தில், அதாவது சத்யயுகத்தில், மனித இனம் முழுவதும் ஆன்மீக பயிற்சியில் ஈடுபட்டிருந்தது மற்றும் மக்களின் சராசரி ஆன்மீக நிலை 80% -மாக இருந்தது. தங்களின் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் ஆன்மீக பயிற்சியாக மற்றும் கடவுளுக்கு சேவை செய்வதாகவே எண்ணி, அந்த மனப்பான்மையில் அவர்கள் நடந்து கொண்டனர். சத்யயுகத்தின் இறுதியான குறு யுகசுழற்சியில் உள்ள குறு கலியுகம் ஆரம்பித்தபோது, தீயவர்கள் உலக ஜனத்தொகையில் 2% -க்கு அதிகமாக ஆனார்கள். அப்போதிருந்த சூட்சும தாமஸீக தன்மை, தீய சக்திகள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்த முயற்சிக்க போதுமானதாக இருந்தது. இதுவே நல்ல சக்திகளுக்கும் தீய சக்திகளுக்கும் இடையே நடந்த முதல் யுத்தமாகும். இந்த யுத்தம் சத்யயுகத்தின் இறுதியான குறு யுகசுழற்சியில் உள்ள குறு கலியுகத்தின் முடிவில் நடந்தது.

பகுதி 2 -ல் தொடர்கிறது: நல்லனவற்றிற்கும் தீயனவற்றிற்கும் தற்போது