FAQs on Spiritual healing methodsஆன்மீக நிவாரண முறைகளைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

அட்டவணை

> மற்றவர்களிடமிருந்து நிவாரணம் அடைய விரும்புவோர் கேட்க நினைக்கும் கேள்விகள்?

கே: ஒரு நிவாரண நிபுணரை எங்ஙனம் தேர்வு செய்வது?

ஒருவர் தனது வழக்கமான ஆன்மீக பயிற்சி  மற்றும் சுயமாக செய்து கொள்ளும் ஆன்மீக நிவாரண முறைகள் மூலம் தன்னை குணப்படுத்திக் கொள்வது சிறந்தது. இருப்பினும் ஒருவர் ஒரு நிவாரண நிபுணரின் உதவியை நாட வேண்டியிருப்பின், பின்வருவனவற்றை மனதில் வைத்துக்கொண்டு ஒரு ஆன்மீக நிவாரண நிபுணரை தேர்வு செய்யலாம். அவை;

  • ஒரு நிவாரண நிபுணர் 50% ஆன்மீக நிலைக்கு மேலுள்ளவராக இருக்க வேண்டும்.
  • பணத்திற்கும், புகழுக்கும் ஆசைப்படாமல் மக்களின் பிரச்சனையை சமாளிக்க உதவும் விருப்பமுடைய ஒரு நிவாரண நிபுணரை தேர்ந்தெடுப்பது சிறந்தது.
  • ஒரு குரு அல்லது மகானின் வழிகாட்டுதலின் படி நிவாரண நிபுணர் ஆன்மீக பயிற்சி மேற்கொள்பவராக இருத்தல் அவசியம் (யாரை குரு அல்லது மகான் என்று கூறுவதற்கு கண்டிப்பான வழிகாட்டுதல்கள் இருக்கின்றன என்பதை நினைவில் கொள்ளவும்).
  • இந்த விதிகளை பூர்த்தி செய்யாத ஒரு நிவாரண நிபுணரை நாம் அணுகினால் அவர் மூலம் தீய சக்தி நம் மீது நிவாரணம் செய்வதற்கான வாய்ப்பு அதிகம்.

 

மேற்கூறிய விதிகளுடன் பின்வரும் பண்புகளை கொண்ட ஒரு நிவாரண நிபுணரை தேர்வு செய்வது மேலும் சிறந்தது.

இருப்பினும் ஒரு நிவாரண நிபுணர் இந்த அளவுகோல்களை சந்திக்கிறாரா என்பது செயல்படுத்தப்பட்ட ஆறாவது அறிவின் திறன் மூலம் மட்டுமே அறிவது சாத்தியமாகும். இது ஒரு சராசரி மனிதனின் ஆற்றலுக்கு அப்பாற்பட்டதாகும். ஆன்மீக நடைமுறையில் ஆறு அடிப்படை ஆன்மீக கோட்பாடுகளுக்கு  இணங்க ஆன்மீக பயிற்சி  செய்வது ஒருவரின் ஆறாம் அறிவின்  வளர்ச்சியை அல்லது செயல்பாட்டை உறுதி செய்கிறது.

கே: பணம் செலுத்துதல் முறையா?

ஆன்மீக நிவாரணத்திற்கு பணம் கொடுப்பது முறைதான். இருப்பினும் நிவாரண நிபுணர்களால் வசூலிக்கப்படும் தொகை நியாயமானதாகவும், அவரின் அடிப்படை வாழ்க்கை தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும் அல்லது குறிப்பிட்ட ஆன்மீக நடைமுறையில் ஆன்மீக நிவாரண முறைகளை பரப்புவதற்காகவும் இருக்க வேண்டும்.

முக்கியமான விஷயம் என்னவென்றால் நிவாரண நிபுணர் புகழ் அல்லது பணம் சம்பாதிப்பதில் கவனம் செலுத்தக்கூடாது.

கே: ஆன்மீக நிவாரணத்தை முறையாக செய்யாவிடில் எனக்கு தீங்கு வருமா?

சுருக்கமாகச் சொன்னால் ஆம். பின்வரும் சில வழிகள் மூலம் எங்ஙனம் தீங்கு விளையும் என்பதை காணலாம்.

புகழ், அதிர்ஷடம் மற்றும் குறைந்த ஆன்மீக நிலையில் இருக்கும் நிவாரண நிபுணர்கள் பெரும்பாலும் ஆவிகளால் குறிவைக்கப்படுகிறார்கள். உயர்நிலையில் உள்ள ஆவிகள் ஆன்மீக நிவாரண நிபுணரின் இந்த குறைப்பாடுகள் மற்றும் இணைப்புகளை பயன்படுத்தி அவரை பாதித்து பீடிக்கின்றன. இந்த பீடித்தல் நயவஞ்சகமானதும், கண்ணுக்கு புலப்படாததாகவும் இருக்கும், மேலும் தான் ஒரு ஆவியால்  பீடிக்கப்பட்டுள்ளோம் என்ற ஒரு சிறுதுப்பு கூட நிவாரண நிபுணரிடம் இருக்காது. நிவாரண நிபுணரை ஆவிகள் பீடித்தவுடன், ஆரம்பத்தில் அவரிடம் சிகிச்சை பெறும் நபர்களின் நம்பிக்கையை பெறுவதற்காக தங்களின் ஆன்மீக வலிமையின் மூலம் அவர்களின் நோய் அறிகுறிகளை தணிக்கிறார்கள், ஆனால் அந்த நிவாரணம் பெறும் நபர்களின் மேல் தங்களது கருப்பு சக்தியை திணிக்கிறார்கள்.

நிவாரண நிபுணருக்கு மேம்பட்டஆறாவது அறிவு இல்லையென்றால் சூட்சும உலகில் நேர்மறை மற்றும் எதிர்மறைக்கு இடையிலான வேறுபாட்டை அவரால் அறிய இயலாது. ஆகவே நிவாரண நிபுணர் வழிகாட்டும் ஆவியிடமிருந்து சக்தியை நோயாளியின் மேல் வழியனுப்புவதாக நினைக்கும் போது வழிகாட்டிகளாக தன்னை காட்டிக்கொள்ளும் ஆவிகளின் கருப்பு சக்தியுடன் நிபுணர் குணப்படுத்துகிறார். எனவே நோயாளியின் நம்பிக்கையை பெற ஆரம்ப அறிகுறிகள் குணப்படுத்தப்பட்டாலும், நீண்ட கால விளைவுகள் மேலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

கே: அன்புக்குரியவர்கள் சுயமாக பரிகாரங்களை செய்ய தயாராக இல்லையெனில் அவர்களது ஆன்மீக நிவாரணத்திற்காக ஒருவர் என்ன செய்ய வேண்டும்?

ஒருவர் ஆன்மீக நிவாரணமளிக்கும் தீர்வை செய்ய விருப்பமில்லாமல் பிடிவாதமாக இருந்தால் அவர்களை நம்ப வைப்பது மிகவும் கடினம். இருப்பினும் அன்புக்குரியவர்கள் பரிகாரம் செய்ய விரும்பாதபோதும் நாம் மனதில் கொள்ள வேண்டிய சில குறிப்புகள் பின்வருமாறு;

  • ஆன்மீக நிவாரணத்தின் கோட்பாடுகளைப் பற்றிய கட்டுரையை படியுங்கள், இதன் மூலம் ஆன்மீக நிவாரண முறையின் பின்னால் உள்ள அறிவியலை அவர்களுக்கு கூற இயலும். அவர்கள் ஏன் ஆன்மீக நிவாரணத்தை செய்ய வேண்டும் என்பதை அறிவுசார்ந்த மட்டத்தில் அவர்களுக்கு விளக்கவும். இது அவர்களின் தரப்பிலிருக்கும் விருப்பமின்மையை சமாளிக்க உதவும்.
  • நாம் சொல்லும் ஆலோசனையை அன்புக்குரியவர்கள் கேட்கவேண்டும் என்பதற்காக அவர்களது புத்தியில் இருந்து ஆவிகளின் கருப்பு படலம் அகற்றப்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள். ஆவிகள் பெரும்பாலும் தாம் ஆட்கொண்டிருக்கும் நபர்களின் புத்தியை கருப்பு படலத்தால் மூடி அவர்கள் முடிவெடுக்கும் திறனை மறைக்கும்.
  • விதிமுறைப்படி மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அதிகபட்சம் மூன்று முறை அவர்களிடம் சொல்லுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். அதற்குமேல் அது அவர்களின் விருப்பத்தைப் பொறுத்தது.
  • இறுதியில் அவரின் விதிக்கு ஏற்ப  தான் அவர் கவனமாய் கேட்டும் எண்ணத்துடன் இருப்பார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒருவரின் விதி கடுமையாக இருப்பின் பெரும்பாலான சமயங்களில் அவர் கேட்கும் எண்ணம் கொண்டிருக்க மாட்டார், இதனால் அவர் பலவருடம் துன்பத்தை அனுபவிக்க வேண்டியிருக்கக் கூடும். நாம் அனைவரும் அவரவர் சொந்த ஆன்மீக பயணத்தில் இருக்கிறோம். நம்மால் பிறருக்கு அவர்களின் ஆன்மீக வளர்ச்சியில் உதவ முடிந்தால் நிச்சயமாக நாம் அதை செய்ய வேண்டும். இருப்பினும் பலமுறை கோரிக்கை விடுத்தும் அவர்கள் செவிசாய்க்கவில்லை எனில் சூழ்நிலைக்கு ஏற்ப தத்துவ ரீதியாக விலகிய பார்வையோடு இருப்பது  நல்லது (அது மிகவும் கடினமாக இருப்பினும்), ஏனென்றால் நமது அன்புக்குரியவர்கள் செவிசாய்க்காமல்  இருப்பதும், துன்பத்தை அனுபவிப்பதும் அவர்கள் விதியின் காரணமாகக் கூட இருக்கலாம்.

 

> ஆன்மீக நிவாரண முறைகளை சுயமாக பயிற்சி செய்வது பற்றிய கேள்விகள்

கே:ஆன்மீக நிவாரண முறையின் விளைவுகளை நாம் எவ்வாறு விளக்குவது?

ஒருவருக்கு புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட உணர்வு அல்லது ஆறாவது அறிவு இல்லையெனில் ஆன்மீக நிவாரண தீர்வின் குறிப்பிட்ட விளைவை விளக்குவது மிகவும் கடினம். ஏனென்றால் மேம்பட்ட ஆறாவது அறிவு இல்லாமல் ஆன்மீக நிவாரணத்தின் போது நாம் அனுபவிக்கும் உண்மையான காரணத்தை உணர கடினமாக இருக்கும். உதாரணமாக இரண்டு நபர்களை விபூதியின் உதவி கொண்டு குணப்படுத்தியிருந்தாலும் அவர்கள் இருவருக்கும் முற்றிலும் மாறுபட்ட அனுபவம் இருந்து இருக்கும்.

  • ஆவிகளால் பீடிக்கப்பட்டு இருக்கும் ஒருநபர் கஷ்டத்தை அனுபவிக்கலாம். ஏனென்றால் விபூதியில் இருந்து வெளிப்படும் தெய்வீக சைதன்யம் அவர் உடம்பில் இருக்கும் ஆவியின் எதிர்மறைதன்மையுடன் போராடத் தொடங்கும் போது அவரின் உள்ளிருக்கும் ஆவி துன்பத்தை அனுபவிக்கத் தொடங்கிறது.
  • எதிர்மறை ஆற்றலால் தாக்கப்படாத ஒரு நபர் விபூதியின் தெய்வீக உணர்விலிருந்து வெளிப்படும் நேர்மறை அதிர்வுகளால் மனதில் ஒரு லேசான உணர்வை அனுபவிக்கலாம்.

மற்றொரு அம்சம் என்னவென்றால் உயர்நிலை ஆவிகள் தெய்வீகச் சைதன்யத்தின் தாக்கத்தை நீண்ட காலம் தாங்கும். இதனால் பரிகாரம் செயல்படவில்லை என்ற எண்ணம் தோன்றலாம். இந்த உயர்நிலை ஆவிகள் ஒரு மாயை விளைவை ஏற்படுத்தி நிவாரணம் செயல்படுகின்றது அல்லது படவில்லை என்ற ஒரு தவறான உணர்வைகூட இதன்மூலம் அந்த நபருக்கு வழங்கலாம். 

கே:நிவாரண முறை வேலை செய்ததா என்று நான் அறிவது எப்படி?

ஆன்மீக நிவாரண தொடக்கத்தையும், நோய் குறைந்ததற்கான அறிகுறிகளுக்கும் இடையே உள்ள வலுவான தொடர்பை வைத்து ஆன்மீக நிவாரணத்தினால் தீர்வு ஏற்பட்டதா என்று நம்மால் கணிக்க இயலும். உதாரணத்திற்கு ஒருநபர் தசைப்பிடிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் நாமஜபம் செய்ய தொடங்கியதும் தசைப்பிடிப்பு உடனேயே குறைந்துவிட்டது. நாமஜபத்தை நிறுத்தியவுடன் அந்த வலி மீண்டும் தொடங்கியது. பல வருடங்களாக அவர் சந்தித்து வந்த பிரச்சனை இது, எந்த மருத்துவ சிகிச்சையும் அவருக்கு உதவவில்லை. இங்கே நாமஜபத்தினால் அது உடனடியாக மறைந்துவிட்டது மற்றும் தசைப்பிடிப்பு குறைவதற்காக எந்த மாற்றுசிகிச்சையும் அவருக்கு பரிந்துரைக்கப்படவில்லை.

சில சந்தர்ப்பங்களில் நிவாரணத்தின் விளைவு மிகவும் நுட்பமாகவும், சூட்சுமமாகவும் இருக்கலாம். இதன்மூலம் ஒருவர் அவரது வாழ்க்கையில் ஒரு நல்ல முன்னேற்றம் மற்றும் எதிர்மறை சிந்தனையின் குறைப்பு ஆகியவற்றைக் காணலாம்.

பெரும்பாலான மக்கள் நோய் அறிகுறிகள் குறைவதில் மட்டுமே ஆர்வமாக உள்ளனர். இந்த நோய்க்களுக்கான மூல காரணம் ஆவிகள் மற்றும் மூதாதையர்கள் அவர்களை தொந்தரவு செய்கின்றனர் என்று அவர்களுக்கு தெரியாது. அவர்களுக்கு இருக்கும் தோல்வியாதி, தசைப்பிடிப்பு போன்ற அறிகுறிகளை குறைப்பதை விட அவர்களுள் இருக்கும் ஆவியை விரட்டுவது மிகவும் கடினம். ஆன்மீகப் பயிற்சிஒன்றே வேர்மட்டத்திலிருந்து ஆவிகளை தாக்கி பிரச்சனைகளை சமாளிப்பதற்கான ஒரே நிலையான வழியாகும்.

கே: தினசரி ஆன்மீக நிவாரணத்தை எவ்வளவு காலம் வரை நான் செய்ய வேண்டும்?

பதில்: பயன்படுத்தப்படும் ஆன்மீக நிவாரண வகையைப் பொறுத்து அதற்கு கொடுக்கப்படும் நேரம் குறித்து ஒருவர் தீர்மானிக்க வேண்

டும். ஆன்மீக நிவாரண முறையின் சிறந்தவகை  தீர்வு ஆன்மீக பயிற்சியாகும். நிவாரணத்தை விரைவுபடுத்த உங்கள் ஆன்மீக பயிற்சியை அதிகரிக்க மற்ற தீர்வுகள் பயன்படுத்தப்படலாம்.

நோய் அறிகுறிகளின் தீவிரத்தை பொறுத்து, ஆன்மீக நிவாரண சிகிச்சைகள் தினசரி அடிப்படையில் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.

  • லேசான இன்னல்களுக்கு ஆன்மீக நிவாரண முறையை (அதாவது ஆன்மீக பயிற்சி அல்லது பிற வகைகள்) ஒரு நாளைக்கு 1-2 மணிநேரம்  ஒரே அமர்விலோ அல்லது பல அமர்விலோ செய்யலாம்.
  • அறிகுறிகள் மிதமானதாக இருந்தால் ஒருவர் 3-4 மணிநேரம் அல்லது அதற்கு மேல் செய்ய வேண்டியிருக்கும்.
  • அறிகுறிகளின் தீவிரம் அதிகமாக இருந்தால் தயைக்கூர்ந்து தினமும் முடிந்தவரை நிவாரணம் செய்யுங்கள்.

லேசான, மிதமான மேலும் தீவிரமான அறிகுறிகளை பற்றிய எடுத்துக்காட்டிற்கு ‘ஆன்மீக நிவாரணம் எனக்கு தேவை என்று எவ்வாறு அறிந்துகொள்வது?’  என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

கே:ஆன்மீக நிவாரண முறையை நான் எவ்வளவு காலம் தொடர்வது?

அறிகுறிகள் மறைந்த பின்னும் ஒருவர் 2-4 மாதங்களுக்கு நிவாரண சிகிச்சையை தொடர வேண்டும். தொற்று மூச்சுக்குழாய் அழற்சியில் இருமல் மறைந்து போனாலும் நுரையீரலில் இருந்து நோய் மறைந்தது என்று கூறமுடியாது. ஏனெனில் இருமலை மற்றும் மூச்சுக்குழாய் அழற்சியை உண்டாக்கும் கிருமிகள் நுரையீரலில் மேலும் நீடிக்க வாய்ப்புள்ளது. எனவே நோயை அழிக்க கொடுக்கப்பட்ட நுண்ணுயிர் கொல்லி மருந்துகளை பரிந்துரைக்கப்பட்ட நாட்களுக்கு தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். இதேபோல ஆவிகளின் தாக்கம், அறிகுறிகள் மறைந்த பின்னும் நம்முள்ளே இருக்கலாம் எனவே முழுமையாக குணமடையும் வரை தொடர வேண்டும். 

குணமடைந்த பிறகு ஆன்மீக நிவாரணமுறையை ஒருவர் தொடர வேண்டிய காலகட்டத்தை பாதிக்கும் காரணிகளில் ஒன்று யாதெனின், குணமடைய எடுக்கும் நேரம். குணமடைய எவ்வளவு அதிக நேரம் எடுக்கிறதோ, குணப்படுத்திய பிறகும் அவ்வளவு நேரம் அதைத் தொடர வேண்டும்.

கே: குணமடைய எவ்வளவு காலம் ஆகும்?

ஆன்மீக காரணங்களால் ஏற்படும் பிரச்சனைகளை குணப்படுத்த சில நொடிகள் முதல் பலமாதங்கள் அல்லது ஆண்டுகள் கூட ஆகலாம். உதாரணத்திற்கு, மறைந்த மூதாதையரால் தோல் அரிப்பு நோய் ஏற்பட்டால், புனித நீர் (தீர்த்தம்) மற்றும் கோமூத்திரம் (பசுவின் மூத்திரம்) ஆகியவற்றை பயன்படுத்துவதன் மூலம் உடனடி நிவாரணம் அடையலாம். இருப்பினும், சிகரெட் பிடிக்கும் பழக்கம் ஒரு நபரின் விருப்பத்தின் காரணமாகவும் (அதாவது உளவியல் ரீதியாக) மற்றும் ஓரளவு பீடிப்பின் காரணமாகவும் (அதாவது ஆன்மீக ரீதியாக) இருந்தால், அந்தப் பழக்கத்திலிருந்து விடுபட ஒரு வருட ஆன்மீக பயிற்சி தேவைப்படும்.

நிவாரணத்திற்காக எடுக்கப்படும் நேரம் பல காரணிகளைக்குறித்து அமையும்;

  • நோயாளியின் விதியின் தீவிரம்
  • ஆன்மீக பயிற்சியின் தீவிரம்
  • நிவாரண நிபுணரின் ஆன்மீக சக்தி
  • தனிநபரை தாக்கும் அல்லது பீடிக்கும் ஆவிகளின் வலிமை.
  • அந்த நபரின் ஆளுமை குறைகளை பொறுத்து நிவாரணத்திற்கான நேரமளவு அதிகரிக்கிறது. ஏனென்றால் ஆவிகள், ஒருவரின் கோபம், பயம் மற்றும் உணர்வுசார்ந்த குறைபாடுகளை பயன்படுத்தி ஒரு கருப்பு சக்தி படலத்தை எளிதாக உருவாக்கி உள்நுழைந்துவிடுகின்றன.

கே: நம்பிக்கை வைப்பது முக்கியமா?

 

ஆமாம், நம்பிக்கை பலனளிக்கிறது. இதைப்பற்றி மேலும் அறிய திட நம்பிக்கை இன்றி நாமஜபம் செய்தால் நமக்கு ஏதாவது பயன் கிடைக்குமா?”  என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

உங்களுக்கு ஏதேனும் கேள்வி இருந்தால் எங்கள் உள்நுழைவு வசதியில் கேட்கலாம். இரண்டு நாட்களுக்குள் உங்கள் கேள்விக்கு பதில் அளிக்கப்படும்.