இரவில் தாமதமாக உறங்குதல் – நம்மை எப்படி பாதிக்கிறது?

தாமதமாக உறங்கச் செல்வதன் விளைவுகள்

1. இரவு தாமதமாக உறங்கச் செல்வது பற்றிய முன்னுரை

துயில் எழும் வேளை சிறந்ததாக இருக்க, நாமனைவரும் எப்படி நன்றாக உறங்க வேண்டும் என்பதைப் பற்றி அறிய விரும்புகிறோம். நன்றாக உறங்குவது எப்படி என்பது குறித்த முக்கியமான அளவுகோல்களில் ஒன்று உறங்கச் செல்லும் நேரம் ஆகும். இரவில் நாம் தாமதமாக உறங்கச் செல்வதால், காலையில் சுறுசுறுப்பாக இல்லாமல் இருப்பதை பலரும் அனுபவித்துள்ளோம். உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் இரவில் தாமதமாக உறங்குவதால் உண்டாகும் தீமையை நம்மில் சிலர் அறிந்திருக்கிறோம். ஆயினும் வேலைப் பளு மற்றும் கேளிக்கைகள் காரணமாக பெரும்பான்மையான மக்கள் இரவில் தாமதமாக உறங்கச் செல்கின்றனர். இந்த கட்டுரையில் இரவில் தாமதமாக உறங்கச் செல்வதால், சூட்சும பரிணாமத்தில் ஏற்படும் நிகழ்வை பற்றி காணலாம். இரவில் நாம் எப்போது உறங்கச் சென்றால், நமக்கு நல்ல உறக்கம் அமையும் என்கிற அடிப்படை தீர்மானத்தை எடுக்க ஒரு கண்ணோட்டமாக நமக்கு இது உதவும்.

2. நன்றாக உறங்குவது எப்படி என்பதைப் பற்றிய ஒரு ஆன்மீக ஆராய்ச்சி— உறங்கச் செல்லும் நேரம்

மேம்பட்ட ஆறாவது அறிவு அல்லது புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட உணர்வை கொண்ட எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஸாதகர்கள் நன்றாக உறங்குவதன் அளவுகோலான உறங்கச் செல்லும் நேரத்தின் பலன் விளைவை ஆன்மீக ரீதியாக ஆய்வு செய்தனர். அவர்கள் பெற்ற தெய்வீக ஞானம், பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களால் சரிபார்க்கப்பட்டது.

3. சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு நாம் செய்யும் செயல்களின் பலன்கள்

சூரியோதயம் முதல் அஸ்தமனம் வரை வலஞ்சுழி அல்லது நேர்மறை அதிர்வலைகள் வளிமண்டலத்தை சுற்றுகின்றன. சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு இடஞ்சுழி, அல்லது அதிக கஷ்டங்கள் தரும் அதிர்வலைகள் வளிமண்டலத்தை சுற்றத் தொடங்குகின்றன. எனவே நமது செயல்களின் பலன்கள் படிப்படியாக குறைய தொடங்கும். இதை இன்னும் தெளிவாக புரிந்துகொள்ள சூரிய அஸ்தமனம் முதல் சூரிய உதயம் வரையிலான 12 மணிநேரத்தை, 4 தொகுதிகளாக, ஒவ்வொன்றும் 3 மணிநேரம் வருமாறு பிரிப்போம். சூரிய அஸ்தமனத்திற்கு பின் நமது செயல்களின் பலன்கள் எவ்வாறு சமரசம் செய்யப்படுகிறது என்பதை பின்வரும் வரைப்படம் விளக்கியுள்ளது. (இந்த எடுத்துக்காட்டில் மாலை 6 மணி சூரியன் மறையும் நேரமாகவும், காலை 6மணி சூரியன் உதயமாகும் நேரமாகவும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.)

இரவில் தாமதமாக உறங்குதல் - நம்மை எப்படி பாதிக்கிறது?

4. இரவில் சூட்சும ரஜ – தம அடிப்படை குணங்களின் அதிகரிக்கும் தாக்கம்

சூரிய அஸ்தமனத்திற்குப் பிந்தைய நேரமானது, அதிக சூட்சும அடிப்படை ரஜ-தம செயல்பாட்டின் காலமாகும். இரவு முன்னேறும் சமயம் இந்த சூட்சும அடிப்படை ரஜ-தம கூறு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த ரஜ-தம கூறு நேர்மறையான செயல்பாட்டிற்கு உகந்ததல்ல. எனவே சூரிய அஸ்தமனத்திற்குப் பிந்தைய நேரம் நாம் ஏதாவது சாதிக்க விரும்பினால், இந்த அதிகரித்த சூட்சும ரஜ-தம கூறுகளின் அலைகளுக்கு எதிராக செயல்பட வேண்டும். அதிகரித்த ரஜ-தம கூறுகளின் எதிர்மறை செல்வாக்கைக் கடப்பதில் நமது ஆற்றல் நிறைய வீணாகிறது. இதன் விளைவாக எந்தவொரு பணியையும் நிறைவேற்ற நமக்கு நிறைய ஆற்றல் செலவிட வேண்டியுள்ளது.

சூட்சும அடிப்படை ஸத்வ, ரஜ மற்றும் தமா கூறுகளின் ஏற்ற இறக்கம் 5% ஆகும். அதிகாலை நேரத்தில் சூட்சும அடிப்படை ஸத்வ கூறு மிக அதிகமாக இருக்கும். பகலில் சூரியன் மேல்நோக்கி செல்லும்போது சூட்சும அடிப்படை ரஜ கூறு சீராக இருக்கும். சூரிய அஸ்தமனத்துடன் சூட்சும அடிப்படை தம கூறு உயரத் தொடங்கி நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை அதிகபட்சமாக காணப்படும். எனவே எந்த ஒரு நேர்மறையான செயலையும் நிறைவேற்ற அதிகாலை நேரம் சிறந்ததாகும். ஏன்னெனில் வளிமண்டலத்தில் உள்ள மேம்பட்ட ஸாத்வீக தன்மை ஒருவரின் ஆற்றல் திறனை அதிகரிக்கிறது, அதோடு குறைவான சூட்சும அடிப்படை ரஜ – தம கூறுகளின் காரணமாக செயல்பாட்டிற்கான எதிர்ப்பும் குறைகிறது.

5. இரவில் ஆவிகளின் தாக்கம்

கருத்தில் கொள்ள வேண்டிய மற்றுமொரு முக்கிய காரணி என்னவென்றால் ஆவிகளின் (பேய்கள், பிசாசுகள், எதிர்மறை ஆற்றல்கள்) தாக்கங்களாகும். சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு சூட்சும அடிப்படை தம கூறுகளின் நிலையான அதிகரிப்பு காரணமாக ஆவிகளின் தாக்கம் இரண்டு வழிகளில் அதிகரிக்கிறது.

  • சுற்றுச்சூழலில் உள்ள கருப்பு சக்தி அல்லது எதிர்மறை ஆற்றலை பயன்படுத்துவதற்கான அதிகரிக்கும் திறன்.
  • இந்த ஆற்றலை பயன்படுத்தும் உயர்ந்த திறன், உதாரணத்திற்கு மக்களின் பிராண சக்தியை வடிகால் இட்டு, எதிர்மறை எண்ணங்களை அவர்கள் மனதில் வளர்த்தல்.

ஆவிகளின் செல்வாக்கு அந்தி நேரத்திற்குப் பிறகு படிப்படியாக அதிகரித்து நள்ளிரவு நேரத்தில் உச்சம் அடைகிறது. நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரையிலான காலம் இவர்களின் அதிகபட்ச செல்வாக்கின் காலமாகும். ஏற்கனவே விளக்கப்பட்டபடி ஆன்மீக பயிற்சியின் விளைவு இந்த காலகட்டத்தில் குறைந்தபட்சமாக இருக்கும். எனவே அவர்களின் தாக்குதலுக்கு நாம் அதிகம் பாதிக்கப்படுகிறோம்.

6. சுருக்கம்

இவ்வாறு இரவில் தாமதமாக உறங்கச் செல்வது, உடல் மற்றும் உளவியல் ரீதியில் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர ஆன்மீக ரீதியிலும் கெடுதல் விளைவிக்கும். மேலும் இரவில் தாமதமாக உறங்கச் செல்லும்போது காலையில் தாமதமாக எழுந்திருப்போம். மேலே விவரிக்கப்பட்டுள்ளபடி, சூட்சும அடிப்படை ஸத்வ கூறு சூரிய உதயத்திற்கு முன்னும் மற்றும் பிந்தைய சில மணிநேரத்திற்கு மிக அதிகமாக இருக்கும். எனவே அதிகாலையில் வேலை செய்யாமல் இருப்பதன் மூலம் அந்த நேரத்தில் உருவாகும் ஸாத்வீக பலனை இழக்கிறோம். இவ்வாறு நேரத்திற்கான அதிகபட்ச மதிப்பைப் பெறுவதற்கான கண்ணோட்டத்தில் இரவில் தாமதமாக உறங்காமல் இருப்பது நல்லது.