அட்டவணை

1. ஸ்பிரிச்சுவல் சயன்ஸ் ரிசர்ச் பௌண்டேஷன் பற்றி

1.1 ஸ்பிரிச்சுவல் சயன்ஸ் ரிசர்ச் பௌண்டேஷனின் பணி / குறிக்கோள் என்ன?

ஸ்பிரிச்சுவல் சயன்ஸ் ரிசர்ச் பௌண்டேஷனின் பணியானது:

  1. ஆன்மீக பரிமாணத்தை பற்றியும் இது எவ்வாறு நம்முடைய வாழ்க்கையைப் பாதிக்கிறது என்பது பற்றியும் சமூகத்திற்கு அறிவுறுத்துதல்
  2. பின்வரும் விஷயங்களை மக்கள் பெறுவதற்கு உகந்த கருவிகளை வழங்குதல்
    • ஆன்மீக பரிமாணத்தை புரிந்து கொள்வதோடு அனுபவங்களையும் பெறுதல்
    • ஆன்மீக பரிமாணத்தை காரணியாக கொண்ட பிரச்சனைகளை புரிந்து கொண்டு சமாளித்தல்
    • நிரந்தர ஆனந்தத்தை அடைதல்

2. ஆன்மீகமும் அறிவியலும்

2.1 ஆன்மீகம் ஏன் ஒரு அறிவியலாக கருதப்படுகிறது?

  • ஆன்மீக பரிமாணத்தை ஆய்வு செய்தல், பௌதீக உலக ஆய்வுகளை போல் முறையாக திட்டமிட்ட தர்க்க ரீதியான ஆய்வு ஆகும்.
  • ஆன்மீக அல்லது சூட்சும பரிமாணத்தில் ஏற்படக்கூடிய விஷயங்கள் அனைத்திற்குமான காரணங்கள், பௌதீக உலகினை போல் தெளிவாக வேறுபடுத்தி விளங்கிகொள்ள கூடியதாக இருக்கும்.
  • ஆன்மீக பரிமாண தத்துவங்களை குறிப்பிட்ட கருவிகளின் துணையுடன் திரும்ப திரும்ப பரிசோதிக்க முடியும். எவ்வாறு இயற்பியல் மற்றும் கட்டிடக்கலைக்கு வெவ்வேறு கருவிகள் தேவைப்படுகிறதோ அவ்வாறே ஆன்மீக அறிவியலிற்கும் அதற்கென தனிப்பட்ட கருவிகள் தேவைப்படுகிறது. இங்கு தேவைப்படும் முக்கிய சாதனமானது நன்கு விருத்தியடைந்த சூட்சும உணர்வு அல்லது ஆறாம் அறிவு ஆகும்.

3. ஆன்மீக ஆராய்ச்சி பற்றி

3.1 ஆன்மீக ஆராய்ச்சி என்றால் என்ன?

ஆன்மீக பரிமாணத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வே ஆன்மீக ஆராய்ச்சியாகும். இது ஆன்மீக பரிமாணத்தில் நடைபெறும் நிகழ்வுகளையும் அரிய சம்பவங்களையும் உள்ளடக்கும். ஆன்மீக பரிமாணமானது நமது ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தி ஆகியவற்றின் புரிதலுக்கு அப்பாற்பட்டது ஆகும். நமது ஆறாம் அறிவின் உதவியுடன் மட்டுமே ஆன்மீக பரிமாணத்தில் ஏற்படும் நிகழ்வுகளுக்கான காரணி பற்றி உண்மையான ஆன்மீக ஆராய்ச்சியினை மேற்கொள்ள முடியும். இந்த ஆராய்ச்சி, அரிய சம்பவங்கள் ஏற்படுவதற்கான ஆன்மீக காரணி பற்றியும் அதற்கான ஆன்மீக தீர்வுகள் பற்றியும் ஆகும்.

3.2 நீங்கள் எங்கிருந்து இந்த அறிவினை பெற்றுள்ளீர்கள்? இவ்வலைத்தளத்தில் உள்ள தகவல்களுக்கு ஆதாரமாக இருப்பவர் யார்?

இந்த அறிவிற்கு/ ஞானத்திற்கு ஆதாரம் இறைவனின் அம்சமான பிரபஞ்ச மனம் மற்றும் புத்தி ஆகும். SSRF இல் ஆன்மீக பயிற்சி செய்யும் சாதகர்கள் சிலர், அவர்களின் நன்கு தேறிய ஆறாவது அறிவின் மூலம் பிரபஞ்ச மனம் மற்றும் புத்தியினை அணுகக்கூடியவராக உள்ளனர். அவர்களால் பெறப்பட்ட ஞானம் அனைத்தும் பரம் பூஜ்ய டாக்டர் ஆடவலே அவர்களினால், அவரின் அதி நுட்ப ஆறாவது அறிவின் மூலம் சரி பார்க்கப்பட்டு உறுதி செய்யப்படுகிறது.

3.3 இந்த ஆன்மீக ஆராய்ச்சி பிரதானமாக எங்கு நடத்தப்படுகிறது?

அடிப்படையாக, ஆன்மீக ஆராய்ச்சி என்பது இறைவனிடமிருந்து ஞானத்தை பெறுவது ஆகும். இது ஒருவருடைய அதி நுட்ப ஆறாவது அறிவின் துணை கொண்டு நடத்தப்படுகிறது. ஆகையால், நவீன விஞ்ஞான ஆராய்ச்சி போல் அல்லாது ஆன்மீக ஆராய்ச்சியானது ஆழ்ந்த தியானத்தில் ஆன்மீக பரிமாணத்தில் நடத்தப்படுகிறது. இவை, தனக்கு வெளியே, ஆராய்ச்சி கூடத்திலோ வெட்டவெளி சோதனைகள் மூலமோ நடத்தப்படுவது இல்லை.

3.4 ஆன்மீக நிகழ்வுகள்/பண்புகளுக்கு எவ்வாறு நீங்கள் சதவிகிதங்கள் வழங்குகிறீர்கள்?

ஆன்மீக பரிமாணத்தை ஆய்வு செய்தல், பௌதீக உலக ஆய்வுகளை போல் முறையாக திட்டமிட்ட தர்க்க ரீதியான ஆய்வு ஆகும். ஆகையால், சதவிகிதங்கள் போன்றவற்றை கொண்டு இந்த ஆய்வினை கணக்கிட முடியும். இந்த சதவிகிதங்கள், ஆழ்ந்த தியானத்தின் போது ஆறாவது அறிவின் மூலம் பிரபஞ்ச மனம் மற்றும் புத்தியினை அணுகி ஏற்கனவே தயாராக இருக்கும் வடிவத்தில் பெறப்படுகிறது. இவை வழக்கமான ஆராய்ச்சி செயல்முறைகளின் மூலம் பெறப்படுவதில்லை.

3.5. உங்கள் ஆராய்ச்சியை நீங்கள் எவ்வாறு உறுதி செய்கிறீர்கள்?

எந்தவொரு தலைப்பிலும் பெறப்படும் ஞானமானது, வெவ்வேறு சாதகரின் ஆறாவது அறிவின் மூலம் தனிப்பட்ட முறையில் பெறப்பட்டாலும் ஒரே மாதிரியாகவே காணப்படும். உதாரணத்திற்கு, ‘ஆவிகளால் ஆட்கொள்ளப்பட்ட நபர் ஒருவரின் மீது ஆன்மீக நிவாரண முறையை பிரயோகிக்கும் போது சூட்சும பரிமாணத்தில் என்ன நடைபெறுகிறது’, என்பது பற்றிய தகவல்கள் பல்வேறு சாதகர்களால் ஒரே மாதிரியாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, சாதகர்களால் அறிவிக்கப்பட்ட கண்டுபிடிப்புகள் அனைத்தும் பரம் பூஜ்ய டாக்டர் ஆடவலே அவர்களினால் சரிபார்த்து உறுதி செய்யப்படுகிறது.

3.6 எப்படி மற்ற ஆராய்ச்சிகள் இதே முடிவுகளை அடையவில்லை?

பெரும்பாலான ஆராய்ச்சிகள் வழக்கமான ஆராய்ச்சி முறைகள் மூலம் ஆன்மீக பரிமாணத்தையும் அதனால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் ஆராயும்போது, SSRF அதி நுட்ப ஆறாவது அறிவின் மூலம் ஆராய்ச்சியினை மேற்கொள்கிறது. வழக்கமான ஆராய்ச்சி செயல்முறைகளை பயன்படுத்தி ஆன்மீக பரிமாணத்தை ஆராய்வது, அறிவுத்திறனை அடி அளவுகோல் ஒன்றினால் அளவிட முயற்சி செய்வதற்கு ஒப்பாகும். ஆக சிறந்த நிலையில், இவ்வகையான ஆராய்ச்சிகள் ஒப்புறுதிப்படுத்தும் விதமாக இருக்குமே தவிர ஆன்மீக பரிமாணத்தில் மூல காரணத்தை ஆராயும் நேரடியான ஆய்வாக அமையாது. மனமோ மூளையோ அறியாத ஒன்றை ஒப்பிட்டு உறுதிப்படுத்த ஒருவர் முயல்வதில்லை. SSRF இன் ஆராய்ச்சிகள் அனைத்தும் அதி நுட்ப ஆறாவது அறிவின் மூலம் நிகழ்த்தப்படுவதால் வழக்கமான ஆராய்ச்சி முறைகளின் கட்டுப்பாடுகள் அதற்கு இல்லை. ஆகையினால் ஆய்வு முடிவுகள் கண்டிப்பாக வித்தியாசமாக உள்ளன.

4. ஆன்மீக அறிவியலும் மதமும்

4.1 SSRF எந்த மதத்திற்கு சொந்தமானது?

SSRF எந்த மதத்திற்கும் சொந்தமானது இல்லை. ஆன்மீக அறிவியலின் பிரபஞ்ச தத்துவங்களை ஆதாரமாக கொள்ளும் SSRF, கலாச்சாரம் அல்லது பிறந்த மதம் என்பவற்றுக்கு அப்பாற்பட்டு முழு மனித இனத்திற்கும் சொந்தமானது. எந்த மதத்தை சேர்ந்த கடவுளின் உண்மையான சாதகரும் இதனை பின்பற்றலாம்.

4.2 SSRF மற்றுமொரு புது யுக இயக்கமா?

SSRF ஆன்மீக அறிவியல் மற்றும் ஆன்மீகத்தின் எல்லா அம்சங்களையும் கற்று தருகிறது. இந்த விஞ்ஞானம் மிகவும் பழமையானதும் பரிபூரணமானதும் மாற்றமில்லாததும், மதம், இனம் மற்றும் கலாச்சாரத்திற்கு அப்பாற்பட்டதும் ஆகும். புது யுக இயக்கங்கள், அனைத்துமறிந்த ஆன்மீக விஞ்ஞான தத்துவங்களில் சிலவற்றை, கர்ம கோட்பாடு, ஒளி உடல், மறு ஜென்மம் போன்றவற்றை தழுவி அண்மையில் உருவாக்கப்பட்டன ஆகும். முரண்பாடு என்னவென்றால் இந்த கருத்துக்களில் ‘புதிது’ என்று ஒன்றுமில்லை. இந்த ஆன்மீக கோட்பாடுகளும் நிகழ்வுகளும் கால சக்கரத்தின் துவக்கத்தில் இருந்து காணப்படுபவை ஆகும்.

4.3 ஆன்மீக அறிவியல் சயன்டோலோஜி (Scientology) போன்றதா?

ஆன்மீக அறிவியல், சயன்டோலோஜி இரண்டுமே உண்மையினை ஆராய்கின்றன, ஆனால் பல அம்சங்களில் இவை வேறுபடுகின்றன. உதாரணமாக, வாழ்வின் நோக்கம் தொடர்ந்து வாழ்வது என்று சயன்டோலோஜி கூறுகிறது. மாறாக வாழ்வின் நோக்கம் இறைவனுடன் ஒன்றற கலத்தல் என ஆன்மிக அறிவியல் கூறுகிறது.

5. விரிவுரைகள்

5.1 உங்கள் விரிவுரைகள் எங்கே நடைபெறுகின்றன?

எம்முடைய விரிவுரைகள் பற்றிய தகவல்கள் ‘நிகழ்வுகள்’ எனும் பகுதியில் வழங்கப்பட்டுள்ளன. அதைக் காண இங்கே கிளிக் செய்யவும்.

6. ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு

6.1 இந்த தலைப்புகள் பற்றி எந்தவொரு பின்னணி அறிவும் எனக்கில்லை. நான் எதிலிருந்து துவங்குவது?

வலைத்தளத்தில் பயணமொன்று செய்யுங்கள் எனும் பகுதி, உங்களது முதன்மையான ஆர்வத்தை பொறுத்து, எமது வலைதளத்தில் உள்ள பிரதான பகுதிகளை பற்றிய ஒரு கண்ணோட்டத்தை உங்களுக்கு வழங்கும்.

6.2 என் வாழ்க்கை நன்றாக இருக்கிறது; நான் இந்த வலைத்தளத்தில் இருந்து ஏதேனும் நன்மை பெற முடியுமா?

ஆமாம், நீங்கள் இந்த வலைத்தளத்தில் இருந்து நன்மைகளை பெற முடியும்.

  • வாழ்வை பற்றின ஆழமான புரிதல்: இந்த வலைத்தளம் நம்முடைய வாழ்வை பற்றியும் அதனை பாதிக்கும் விஷயங்கள் பற்றியும் ஆழ்ந்த கண்ணோட்டத்தை வழங்குகிறது. இது வாழ்வின் அடிப்படை நோக்கம், நாம் ஏன் சில விஷயங்களை நம்முடைய குணாதிசயத்திற்கு முரண்பாடான போதிலும் செய்கின்றோம், வாழ்வின் கஷ்டங்களுக்கான காரணங்களும் அவற்றை தீர்ப்பதற்கான வழிகளும் போன்றவற்றை உள்ளடக்கும்.
  • மாற்றம் ஒன்றே மாறாதது: நம்மை சுற்றி இருக்கும் அனைத்துமே மாறக்கூடியது. இப்போது நாம் இருக்கும் நிலை நம் வாழ்வில் வருங்காலத்திலும் அவ்வாறே இருக்கும் என்ற உத்தரவாதம் இல்லை. 35% மான வாழ்வின் நிகழ்வுகள் நமது சுய விருப்பத்தினாலும் 65% மானவை விதியினால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதும் ஆகும். குறைவான மற்றும் மிதமான விதியினை ஆன்மீக பயிற்சி செய்வதன் மூலம் கடந்து செல்லலாம். தீவிரமாக உள்ள விதியில் இருந்து ஒருவர் தப்பிக்க இயலாத போதும், அதனை தாங்கக் கூடிய திறனை ஆன்மீக பயிற்சி வழங்குகிறது.

6.3 ஸாதகர் என்பவர் யார்?

ஸாதகர் என்பவர் ஆன்மீக ரீதியில் முன்னேற்றம் அடைய உண்மையான, தொடர்ச்சியான முயற்சிகளை நாள்தோறும் மேற்கொள்பவர் ஆவார். ஒரு ஸாதகரின் ஆன்மீக பயிற்சி அவரது உள்ளுணர்வின் படி ஆறு அடிப்படை ஆன்மீக கோட்பாடுகளுக்கு ஏற்றாற்போல் இருக்கும். ஆன்மீக வளர்ச்சிக்கு தீவிரமான விருப்பம் கொண்டு ஒரு ஸாதகர் தொடர்ச்சியான முறையில் தனது ஆன்மீக பயிற்சியினை எண்ணிக்கையிலும் தரத்திலும் மேம்படுத்த அயராது போராடுவார்.

6.4 நான் ஒரு நாஸ்திகன், இந்த வலைத்தளம் மூலம் என்ன நன்மையினை நான் பெற முடியும்?

  • வாழ்வின் அடிப்படை நோக்கம், ஆன்மீக அறிவியலின் பிரபஞ்ச கோட்பாடுகள், நாம் ஏன் சில விஷயங்களை நம்முடைய குணாதிசயத்திற்கு முரண்பாடான போதிலும் செய்கின்றோம், வாழ்வின் கஷ்டங்களுக்கான காரணங்கள் போன்ற பகுதிகளில் இருந்து ஆதாயம் பெற முடியும்.
  • ஆவிகள், தேவதைகள், சொர்க்கம், நரகம் போன்ற கண்ணுக்கு தென்படாத பரந்த சூட்சும உலகம் பற்றியும் அது எவ்வாறு நம்மை பாதிக்கின்றது என்பது பற்றியும் அதனை காணும் திறன் கொண்டவர்களிடம் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

6.5 நான் ஒரு ஆஸ்திகன், இந்த வலைத்தளம் மூலம் என்ன நன்மையினை நான் பெற முடியும்?

SSRF விளக்கும் பிரபஞ்ச ஆன்மீக கோட்பாடுகள் மதம், இனம், தேசம் என்பவற்றுக்கு அப்பாற்பட்டவை. உங்கள் ஆன்மீக பயிற்சியினை நிறைவு செய்யும் பொருட்டு இந்த ஆன்மீக கோட்பாடுகளை பயன்படுத்தி கொள்வதோடு, ஆன்மீக முன்னேற்றம் அடையவதற்கும் இங்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை நியமங்களை ஒரு அளவுகோலாக வைத்து முயற்சி செய்யலாம்.

6.6 இந்த வலைத்தளத்தில் உள்ள விஷயங்கள் நம்புவதற்கு கடினமாக உள்ளது

உங்களது உணர்வு எங்களுக்கு புரிகிறது. இந்த வலைத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ள ஆன்மீக பரிமாணம் சார்ந்த பெரும்பாலான விஷயங்கள் இதற்கு முன் எங்கும் பிரசுரிக்கப்படாதவை. இதன் காரணமாக முதல் வாசிப்பிலேயே இவ்விஷயங்களை புரிந்து கொள்வது கடினமாக இருக்கும். ஆன்மீக பயிற்சி ஒன்றின் மூலமே ஆன்மீக பரிமாணத்தில் உள்ள விஷயங்களை உண்மையாக புரிந்து கொள்ள இயலும். இந்த அவநம்பிக்கையினை போக்குவதற்கான ஒரு வழி நேரடியாக அனுபவித்து உணர்ந்து கொள்ளுதல் ஆகும். தொடர்ச்சியான ஆன்மீக பயிற்சியின் மூலம் ஆன்மீக பரிமாணத்தை உணர முடிவதோடு நமது ஐயங்களும் குறைவடையும்.

6.7 எனது ஆன்மீக பயணத்தை (ஆன்மீக பயிற்சி) துவங்குவதற்கு நான் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றி SSRF பரிந்துரைப்பது என்ன?

நீங்கள் எந்த மதத்தை அல்லது கலாச்சாரத்தை சார்ந்தவராக இருப்பினும் உங்கள் ஆன்மீகப்பயணத்தை இப்பொழுதே துவங்குவதற்கு அல்லது நிறைவு செய்வதற்கு ஸ்பிரிச்சுவல் சயன்ஸ் ரிசர்ச் பௌண்டேஷன் மூன்று விஷயங்களை செய்வதற்கு பரிந்துரை செய்கிறது.

  1. நீங்கள் பிறந்த மதத்திற்குரிய இறைவனின் நாமத்தை ஜபம் செய்தல்
  2. மூதாதையர் பிரச்சனைகளுக்கு பாதுகாப்பு நாமம் ஒன்றை உச்சரித்தல்
  3. ஆன்மீக அறிவினை வளர்த்து கொள்ளுதல்

மேலும் விவரங்களுக்கு ‘உங்கள் ஆன்மீக பயணத்தை துவங்குங்கள்’ எனும் பகுதியினை காணவும்.

6.8 ஆன்மீக பயிற்சியினை துவங்குவதற்காக என்னுடைய உலக வாழ்க்கையினை விட்டு வரவேண்டுமா?

நீங்கள் இப்போது இருக்கும் நிலையிலேயே ஓய்வு நேரத்தில் ஆன்மீக பயிற்சியினை ஆரம்பிக்கலாம். ஆன்மீக பயிற்சியானது உலக வாழ்க்கையினை நிறைவு படுத்துவதோடு அதனை மேம்படுத்தவும் செய்கிறது.