அவசரகால சுய ஆலோசனைகள் – ஒரு முழுமையான வழிகாட்டி

நீங்கள் அவசர காலங்களில் மனதளவில் அமைதியாகவும் நிலையாகவும் இருக்க விரும்புகிறீர்களா? ஆம் என்றால் உங்களுக்குத் தேவை அவசரகால சுய ஆலோசனையை பற்றிய கல்வி. நிலையற்ற உலகில் எந்நேரமும் நெருக்கடிகள் வரக்கூடுமாதலால் திடமான மனநிலை பெற இது உதவுகிறது.

அவசரகால சுய ஆலோசனைகள்

ஒரு விரைவான சுருக்கம் 

அவசர காலங்களில் நிலையாக இருப்பதற்கான மன வலிமை மகத்தான நன்மைகளைக் கொண்டுள்ளதுடன் அத்தகைய சூழ்நிலைகளை சரியான முறையில் கையாள உதவுகிறது. இருப்பினும், நெருக்கடி சூழ்நிலையை சந்திக்கும்போது பெரும்பான்மையான மக்களுக்கு திடமான மனநிலை இருப்பதில்லை, அதனால் அதைப் பெறவே ஆசைப்படுவார்கள். இந்த சக்தியை பெற ஒரு வழி யாதெனின் அப்படிப்பட்ட பாதகமான சூழ்நிலையில் எவ்வாறு நடந்து கொள்வது என்று மனதை பயிற்சிப்பதே ஆகும். ஆளுமை குறைகளை களையும்  முறையின் ஒரு பகுதியான அவசர சுய ஆலோசனைகள் மனதின் திறனை மேம்படுத்தும் ஒரு இலவச மற்றும் சக்திவாய்ந்த கருவியாகும். இக்கட்டுரையில் இயற்கை பேரழிவுகள், மருத்துவ அவசரங்கள், தீவிர உணர்ச்சிக் கொந்தளிப்புகள்  போன்ற பலவகை நெருக்கடிகளுக்கான அவசரகால சுய ஆலோசனைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

1. அவசர காலங்களுக்கான சுய ஆலோசனையை பற்றிய அறிமுகம்

மார்க்கஸ் அரேலியஸ் (ஒரு ரோமானிய சக்ரவர்த்தி மற்றும் விருப்பு வெறுப்பு அற்ற தத்துவவாதி) ஒருமுறை சொன்னார், “உனது மனம் உன் கட்டுப்பாட்டில் உள்ளது, வெளி நிகழ்வுகளல்ல. இதை உணர்ந்தால் நீ சக்தி பெறுவாய்”.

இருப்பினும், நம்மில் அவசரகாலத்தை  சந்தித்த பலர் மனதை கட்டுப்படுத்துவது எனும் செயலை செய்வதைவிட சொல்வது சுலபம் என்று அறிவோம்.

கடுமையான நெருக்கடிகள் அல்லாமல், சிலநேரம் நமது புலன்களையும் உணர்ச்சிகளையும் தேவையைவிட அதிகம் செயல்பட வைக்கும் சூழ்நிலைகளை நாம் சந்திக்க நேரிடு கிறது. இது மேடையில் இசை நிகழ்ச்சி செய்வதை போன்ற ஒரு எளிதான  நிகழ்வாகவோ  அல்லது மயிர் கூச்செரிய செய்யும் நிகழ்வான முதல்முறையாக பஞ்சீ ஜம்பிங் செய்வதோ (கணுக்காலை சுற்றி ஒரு நீண்ட நைலான்-உறை ரப்பர் பேண்ட் மூலம் பாதுகாக்கப்படுகையில் ஒரு உயர்ந்த இடத்திலிருந்து குதிக்கும் செயல்பாடு) அல்லது உங்கள் தேர்வு வினாத்தாளை சமர்ப்பிக்க வேண்டிய நாளுக்கு முன்தினம் தற்செயலாக கணினியிலிருந்து நீக்கி விடுவது  போன்ற  நிகழ்வுகளாகவும் இருக்கலாம்.

அப்படிப்பட்ட அவசரநிலைகளுக்குத் தயாராகும் போது அல்லது எதிர்கொள்ளும்போது,  நெருக்கடிகளை கவலை, மன அழுத்தம் மற்றும் அச்சம் சம்பந்தப்பட்ட எண்ணங்கள் நம்மை அதிகளவு மூழ்கடிக்கும் அல்லது  முடக்கக்கூடும். அத்தகைய சூழ்நிலைகளை திடமான மனதுடன் எதிர்கொள்ளும் திறனை இது குறைத்து முடிவெடுக்கும் திறனையும் ஊனமாக்கிவிடும்.

எல்லா சூழ்நிலைகளிலும் மனதை நிலையாக இருக்கப் பயிற்றுவிப்பது ஒரு சவால் தான். இருப்பினும், வாழ்க்கை அளிக்கும் இன்னல்கள் மற்றும் சோதனைகளி லிருந்து காயம் அடையாமல்  மீண்டுவர ஒரு போராடும்  சந்தர்ப்பம் கிடைக்க வேண்டுமானால் இந்த முறையை நாம் கற்றுக்கொண்டே ஆகவேண்டும். பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள் அருளிய ஆளுமை குறைகளை களைதல் முறையில் இதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு அம்சமே மனதிற்கு அவசரகால சுய ஆலோசனை கொடுப்பதாகும். நம்மை அச்சுறுத்தும், கவலைகொள்ள வைக்கும், சினம்கொள்ள வைக்கும் அல்லது உணர்ச்சிவசப்பட வைக்கும் பலவகை அழுத்தமான சூழ்நிலைகளிலும் இதை உபயோகிக்கலாம். இந்த நுட்பத்தை பல்வேறு வகையான சூழ்நிலைகளில் எவ்வாறு உபயோகிப்பது என்பதற்கு ஒரு முழுமையான வழிகாட்டியை உங்கள் நன்மைக்காக கீழே கொடுத்துள்ளோம்.

2. அவசரகால சுய ஆலோசனைகள் என்றால் என்ன?

நெருக்கடியான நிகழ்வுகளில் மனதின் பாதகமான எதிர்வினையில் இருந்து மீண்டுவர குறிப்பாக வடிவமைக்கப்பட்டவையே அவசரகால சுய ஆலோசனைகள் ஆகும். இவ்வகையான சுய ஆலோசனை மனதை திடமாக வைத்து அவசர சூழல்களில் அமைதியாக இருக்க உதவுவதால்,  ஒருவர் பதறாமல் தீர்வு காணும் நோக்கத்துடன் செயல்பட அதிக வாய்ப்புள்ளது.

குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுவதால் மற்ற வகை சுய ஆலோசனைகளை விட அவசர சுய ஆலோசனை மாறுபட்டவையாகும் (பகுதி 3 -இல் உள்ளது). உணர்ச்சியால் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து மீண்டுவந்து அமைதியாக இருக்கவோ  அல்லது அவசர தயாராக வேண்டிய மிக  அவசரமான  தேவை இருக்கும்போதும் இவை எடுத்துக் கொள்ளப்படும்.

3. அவசரகால சுய ஆலோசனைகளை எப்போது உபயோகிப்பது?

3 வகையான நெருக்கடியான சூழ்நிலைகளில் அவசர சுய ஆலோசனைகளை உபயோகிக்கலாம்.அவசரகால சுய ஆலோசனைகளை எப்போது உபயோகிப்பது?

இந்த 3 வகை சூழ்நிலைகளை இன்னும் விரிவாக பார்க்கலாம்.

1. உணர்ச்சிக் கலக்கம்

உணர்ச்சிக் கலக்கத்திற்கான அவசரகால சுய ஆலோசனைகள் உணர்ச்சி ரீதியாக ஒருவரை நிலையின்றி வைக்கும்  வாழ்வின் ஒரு பாதகமான நிகழ்வில் இருந்து மீண்டுவர  அவசரகால சுய ஆலோசனையை உபயோகிக்கலாம். நம் மனதை ஒரு நிகழ்வு பாதிப்பதால் அதிக பிரச்சனைகளை ஏற்படுத்த கூடிய சில மோசமான முடிவுகளை எடுக்க நேரிடலாம்.,

உதாரணத்திற்கு, முதலாளி திட்டியதால் ஒருவர் வருத்தத்தில்  இருந்தால், வாழ்க்கையின் அந்நேரத்தில் யதார்த்தமானதாக இல்லாவிட்டாலும் தனது வேலையை விட்டுவிட நினைக்கலாம் . சரியான முடிவு எடுக்க  மனதை சாந்தப்படுத்துவது மிக முக்கியம். ஒருவர் ஆன்மீக பயிற்சி செய்பவராக இருப்பின் அது தடையின்றி நடைபெற உணர்ச்சி ரீதியாக துன்பப்பட்ட நிலையில் இருந்து மீளவேண்டும்.

2. பொதுவான நெருக்கடிகள்

நெருக்கடிகளை எதிர்கொள்ள அவசரகால சுய ஆலோசனைகள்

பொதுவான நெருக்கடிகளில் அவசரகால சுய ஆலோசனைகள் எடுத்துக் கொள்ளலாம். ஒரு அசம்பாவிதத்தை எதிர்நோக்கி இருக்கும்போதோ அல்லது  நெருக்கடி  நிலையில் இருக்கும் போதோஇது அழுத்தத்தை குறைக்க  எடுத்து கொள்ளப்படலாம். உதாரணத்திற்கு, இயற்கை பேரழிவு காலத்திலோ அல்லது வாகனம் நெடுஞ்சாலையில் செயலற்று போனதால்  மன அழுத்தத்தில் இருந்தாலோ இந்த சுய ஆலோசனைகளை  எடுத்துக் கொள்ளலாம். 

2. ஆயத்த சுய ஆலோசனை

அவசரநிலை நிகழ வாய்ப்புண்டு என்ற சூழ்நிலையில் மனதை முன்கூட்டியே  தயார் செய்ய இந்த சுய ஆலோசனைகளை  அளிக்கலாம். உதாரணத்திற்கு, பூகம்பம் அதிகம் நிகழும் பகுதிகளில் வாழும் ஒருவர் பூகம்பத்தை எதிர்க்கொள்ள மனதை தயார்படுத்த  சுய ஆலோசனை எடுத்துக் கொள்ளலாம். அவசர காலம் நிகழ வாய்ப்பு இருக்கும்போது மனதை தயார் நிலையில் வைக்க சுய ஆலோசனை எடுத்துக் கொண்டால், நிஜமான நெருக்கடி வந்தபோது மனம் சாந்தமாக இருக்க உதவுகிறது. ஒருவரது மனோசக்தி சேமிக்கப்படுவதால் சூழ்நிலையை சமாளிக்க அதிகளவு சக்தி கிடைக்கிறது. அதுமட்டுமில்லை, நாம் சாந்தமாக இருப்பதால் நம்மை சுற்றிலும் இருப்பவர் கூட சாந்தமாக செயல்பட இது உதவுகிறது.

2ஆ. அவசரநிலை நிகழ்ந்து கொண்டு இருக்கும்போதும் அதை எதிர்கொள்ள சுய ஆலோசனைகளை எடுத்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு, பலத்த மழை அல்லது வெள்ளத்தில் ஒருவர் தனது வீட்டிலேயே சிக்கி இருந்தால் அதற்கான சுய ஆலோசனைகளை எடுத்துக் கொள்ளலாம்.

சூழ்நிலையை சரியான முறையில் சமாளிக்க நிஜமான அவசரகாலம் நிகழும் போது மனதை திடமாக வைத்தல் மிக அவசியம் ஆகும். இது வாழ்வுக்கும் இறப்புக்கும் இடையிலான வித்தியாசத்தை கூட ஏற்படுத்தக் கூடும். அத்தகைய சூழலில் அவசரகால சுய ஆலோசனைகளை எடுத்துக் கொண்டால், அது  ஒருவரை சமநிலையில் வைத்து அச்சூழலில் விவேகமாக செயல்பட உதவுகிறது.

3. மருத்துவ அவசரநிலை

மருத்துவ அவசர காலத்திற்கான அவசரகால சுய ஆலோசனைகள்

ஆஸ்த்மா தாக்குதல் , வலிப்பு, ரூட் கேனல் செய்துகொள்ள பல் மருத்துவரிடம் செல்லுதல் போன்ற மருத்துவ அவசரகாலத்தில் இவ்வகையான சுய ஆலோசனைகளை எடுத்துக் கொள்ளலாம்.

அறிகுறி சுய ஆலோசனைகள் இரு வகையாகும்.

3. ஒரு நிகழ்வில் மருத்துவ அவசரகாலம் வரலாம் என தெரிந்த நபர் தன்னை தயார்படுத்திக்கொள்ள ஆயத்த வகையான சுய ஆலோசனைகளை எடுத்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு, வலிபபு  நோயாளி ஒருவர் அந்நோயை எதிர்கொள்ள தன்னை தயார் செய்துகொள்வதற்கு சுய ஆலோசனைகளை எடுத்துக் கொள்ளலாம்.

3ஆ. நிஜமான மருத்துவ அவசரம் நேர்ந்தால் அல்லது அச்சம்பவம் நடக்கப் போவதை பற்றியவிழிப்புணர்வு வந்தால் அறிகுறிக்கான  அவசரகால சுய ஆலோசனைகளை எடுத்துக் கொள்ளவும். உதாரணத்திற்கு, ஒரு ஆஸ்த்மா நோயாளி அந்நோயால் தாக்கப்படப் போகிறேன்   என்று நினைத்தால் சம்பந்தப்பட்ட சுய ஆலோசனைகளை எடுத்துக் கொள்ளலாம். மருத்துவ அவசரத்திற்கு தயாராகவோ அல்லது அது  நிகழத்தொடங்கும் போதோ சுய ஆலோசனைகளை எடுத்துக் கொள்வது அவசரகாலத்திலும் ஒருவரை நிலையாக இருக்க உதவி  செய்து துயரத்தையும் குறைக்கும்.

ஆஸ்த்மா தாக்குதல்  போன்ற சில நிகழ்வுளில் சரியான நேரத்தில் சுய ஆலோசனைகளை எடுத்துக் கொள்வதால் அந்த மருத்துவ அவசரத்தையே கூட தடுக்கலாம். முடிவாக, மருத்துவ அவசரத்திற்கு சம்பந்தமான அவசரகால சுய ஆலோசனைகளை எடுத்துக் கொண்டால் முன்கணிப்பும் வளர்ச்சியடையும். அதாவது இதய பிரச்சனைகளுடைய ஒருவர் மாரடைப்பை அமைதியாக சமாளிப்பது எப்படி என்ற அவசரகால சுய ஆலோசனைகளை எடுத்துக் கொண்டால் அந்நெருக்கடி வரும்போது அதனிலிருந்து குணமடைய அதிகளவு வாய்ப்புள்ளது.

4. ஒரு சுய ஆலோசனை அமர்வில் அவசரகால சுய ஆலோசனை எப்படி கொடுப்பது?

ஆயத்த வகையான அவசரகால சுய ஆலோசனை கொடுக்கும்போது

தற்போது எடுத்துக் கொண்டிருக்கும்  சுய ஆலோசனைகளின் தொகுப்பில் வழக்கமான சுய ஆலோசனைகளாக ஆயத்த அவசரகால சுய ஆலோசனைகளையும்  கொடுக்கலாம். சுய ஆலோசனைகள் எடுத்துக் கொள்வது எப்படி என்ற எங்களின்  கட்டுரையை படிக்கவும்.

நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கையில் எடுக்கப்படும் அவசரகால சுய ஆலோசனைக களைப்  பற்றி

இவை அவசரகாலம் உடனடியாக நிகழப் போகிறது எனும் நிலையிலும் அல்லது நிஜமான அவசரகால நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கையில்  ஒருவர் அதை எதிர்கொள்வதற்கு எடுத்துக்கொள்ள வேண்டிய அவசரகால சுய ஆலோசனைகளாகும்.

அச்சந்தர்ப்பங்களில் நீங்கள் செய்ய வேண்டியவை :

  • நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் மற்ற சுய ஆலோசனைகளை தற்காலிகமாக நிறுத்திவிட்டு இந்த அவசரகால சுய ஆலோசனைகளுக்கு முன்னுரிமை கொடுக்கவும்.
  • அதன்பின், ஒற்றை சுய ஆலோசனை அமர்வில் அவசரகால சுய ஆலோசனையை 3-5 முறை படிக்கவும்.
  • வெறும் 30 நிமிடங்கள் இடைவெளியில் கூட அவசரகாலத்தை கடந்து வரும் வரை இந்தஅவசரகால சுய ஆலோசனையை இயன்றவரை அடிக்கடி எடுத்துக் கொள்ளவும்.

அவசரகாலம் முடிந்தவுடன் நீங்கள் தேர்ந்தெடுத்த பிற ஆளுமை குறைகளுக்கான சுய ஆலோசனைகளை முன்பு எடுத்துக் கொண்டது போல் மீண்டும் தொடங்கலாம்.

இயற்கை பேரழிவு அல்லது மருத்துவ அவசரக்காலம் வரவிருக்கும்  சூழ்நிலையில் அடிக்கடி அவசரகால சுய ஆலோசனைகளை அளிக்க இயலாமல் போகலாம். அந்த நிலையமையில், ஒருவர் நடைமுறையில் முடிந்தவரை அவசரகால சுய ஆலோசனைகளை எடுத்துக் கொள்ளலாம்.

5. அவசரகால சுய ஆலோசனையை எப்படி வடிவமைப்பது?

ஆளுமை குறைகளை களைதல் பிரிவின் முந்தைய கட்டுரைகளில் B1, B2 மற்றும் B3 சுய ஆலோசனை முறைகளை விளக்கியது போல் அவசரகால சுய ஆலோசனைகளை எழுதலாம். அவைகளையும் எங்களது சுய ஆலோசனை நுட்பத்தின் வகைகள் எனும் கட்டுரையையும் படித்து அவசரகால சுய ஆலோசனை எழுதும்போது எந்த முறையை உபயோகிக்கலாம்  என்பதை அறிந்து கொள்க.

6. அவசரகால சுய ஆலோசனைகளின் உதாரணங்கள்

ஒவ்வொரு சூழ்நிலைக்கும் உபயோகிக்கக் கூடிய அவசரகால சுய ஆலோசனைகளின் உதாரணங்கள் இங்கே உள்ளன .

6.1 ஒருவர் உணர்வு ரீதியாக பாதிக்கப் பட்டிருக்கும்போது

உணர்ச்சிக் கலக்கம் from SSRF Inc.

6.2 பொதுவான அவசரத்திற்காக

பொதுவான அவசரத்திற்காக from SSRF Inc.

6.3  மருத்துவ அவசரத்திற்காக

மருத்துவ அவசரத்திற்காக from SSRF Inc.

7. முடிவுரை

நாமனைவரும் வாழ்வில் கடினமான சூழ்நிலைகளை சந்திக்கிறோம். இப்பொழுது உங்களில் சிலர் அத்தகைய  சூழ்நிலையில்  இருக்கக்கூடும். மேலும், உலகில் காணப்படும் நிலையின்மையைப் பார்க்கும்போது எந்நேரமும் ஒரு  நெருக்கடி ஏற்பட்டு நம் வாழ்வையும் மன நிம்மதியையும் பாதிக்கக்கூடிய  சூழ்நிலையில்   முன்னெப்போதையும்விட அவசரகால சுய ஆலோசனைகள் பொருத்தமானவை ஆகின்றன.

நீங்கள் சந்திக்கும் எந்தவித போராட்டங்ககளையும் எதிர்கொள்ள உள் சக்தியை வளர்க்க அற்புதமான கருவி அவசரகால சுய ஆலோசனை முறையாகும். உங்கள் அனைவரையும் இதை முயற்சித்து பார்த்து நன்மைகளை அனுபவிக்க வேண்டும் என நாங்கள் ஊக்குவிக்கிறோம். சுய ஆலோசனைகளுடன் சேர்த்து கடவுளின் நாமஜபம் செய்வது மனதை அமைதிப்படுத்த உதவி செய்வதுடன் பாதகமான விதியின் துயரமான விளைவையும் குறைக்கும்.