எதிர்மறை எண்ணங்கள் வராமல் தடுப்பது எப்படி?

எதிர்மறை எண்ணங்கள் வராமல் தடுப்பது எப்படி?

1. எதிர்மறை எண்ணங்களின் அறிமுகம்

கீழேயுள்ள எண்ணங்கள் உங்களுக்கு ஏற்படுவதை கவனித்துள்ளீர்களா?

  • என் மனதில் ஒரு சம்பவத்தை மறுபடியும் நினைத்துப் பார்க்கிறேன்  (பெரும்பாலும் இனிமையற்ற விஷயங்களை).
  • எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையை திறமையாக கையாளுவதைப் பற்றி எந்நேரமும் நான் சிந்தித்துக் கொண்டிருப்பேன்.
  • எனது  மகிழ்ச்சிக்கு அங்கீகாரம் அல்லது ஒப்புதல் தேவை.
  • நான் விரும்புவது போல் நடக்காவிட்டால் வருத்தப்பட்டு, மற்றவர்களை குறை கூறுகிறேன்
  • குறிப்பிட்ட ஒரு வழியில் ஒருவர் செயல்படும் போது மட்டுமே நான் என்னைப் பற்றி நல்லதாக உணர்கிறேன்.
  • எனக்கு எதிர்காலத்தைப் பற்றிய ஒரு கருத்து உள்ளது, நான் இவ்வாறு என்று என்னைப்பற்றிய ஒரு எண்ணச்சித்திரம் உள்ளது, மற்றும் நிகழ்வுகள் திட்டமிட்டபடி செல்லவில்லை என்றால், ஒவ்வொரு முறையும் நான் மனம் நொந்து போகிறேன்.

இந்த எண்ணங்களில் சிலவற்றை நாம் பல வகையான தீவிரத்தின் அளவுகளுடன் தொடர்புபடுத்த முடியும்.

பெரும்பாலும் இடைவிடாத எதிர்மறை எண்ணங்களானது, நம் மனதில் இருப்பதை விட பலமடங்கு பெரிதாக பிரச்சனைகளை உருவாக்கி, நம் மகிழ்ச்சியையும் மன அமைதியையும் இழக்கச் செய்கிறது.  இத்தகைய எதிர்மறை எண்ணங்களுடன் போராடும் போது, மன உறுதியினைக் காட்டிலும் வேறு பயனுள்ள வழி இருக்கிறதா என்று நாம் யோசிக்கத் தொடங்குகிறோம். பல ஊக்கமளிக்கும் பேச்சாளர்கள் மற்றும் சுய உதவி வழிகாட்டிகள், நேர்மறையான சிந்தனையை தேர்வு செய்யலாம் எனக் கூறினாலும்  அதை செயல்படுத்துவது அவ்வளவு எளிதன்று. தங்களை மாற்றிக் கொள்ளும் ஒரு நபரின் திறனை மையமாகக் கொண்டு (எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் நடத்தைகள் சார்ந்தது), உளவியலாளர்கள் எதிர்மறை சிந்தனைக்கு சிகிச்சையளிக்கின்றனர்; இருப்பினும், ஒருவரின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் எந்தவொரு பரந்த சிக்கல்களுக்கும் இது தீர்வு காணாது.

2. எதிர்மறை எண்ணங்களின் வரைவிலக்கணம்

எதிர்மறை எண்ணங்களுக்கு பல்வேறு வரைவிலக்கணம் உள்ளது; பின்வருவது அத்தகைய ஒரு வரைவிலக்கணம்.

எதிர்மறை எண்ணங்கள் என்பது தன்னைப் பற்றி, பிறரைப் பற்றி  அல்லது பொதுவாக உலகத்தைப் பற்றிய  அறிவாற்றல் ஆகும். அவை எதிர்மறை உணர்வுகள், எதிர்பார்ப்புகள் மற்றும் பண்புக்கூறுகளால் வகைப்படுத்தப்படுகின்றன. அத்துடன் அவை மகிழ்ச்சியற்ற உணர்வுகள் மற்றும் பாதகமான நடத்தை, உடல் மற்றும் சுகாதார விளைவுகளுடன் தொடர்புடையவை ஆகும். (ஹவ்க்கிலே, 2013).

எதிர்மறை சிந்தனை குறித்து ஓர் மகானின் கண்ணோட்டம் :

“எதிர்மறை எண்ணங்கள் மனதில் ஊடுருவி தீங்குவிளைவிக்கிறது. மனம் ஆரோக்கியமாக இல்லாவிட்டால் வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லை. எதிர்மறை சிந்தனை வாழ்க்கையின் மகிழ்ச்சியை பறித்து விடும் என்றும் கூறலாம். இது மனதை பலவீனப்படுத்தி, நம் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்கிறது. இதனால் ஒருவரின் வாழ்க்கை மகிழ்ச்சியற்றதாகவும் நோக்கமற்றதாகவும் மாறும்” -ஸத்குரு (திருமதி) அஞ்ஜலி காட்கில்.

3. எதிர்மறை எண்ணங்களின் வகைகள்

எல்லா எதிர்மறை எண்ணங்களும் நம்மீது வலுவான தாக்கத்தை ஏற்படுத்தாது, ஏனென்றால் நாம் அவற்றை நம்புவதில்லை. மேலும் அவை இயற்கையில் விரைவானவை அதாவது நம்முடைய உணர்வின் நீரோட்டத்தில் ஒரு விநாடிக்குள் வந்து கடந்து சென்றுவிடுகிறது. இருப்பினும், வேறு சில வகையான ஆளுமை சார்ந்த எதிர்மறை எண்ணங்களால் நமது மனம் வெவ்வேறு எதிர்மறை சிந்தனை வடிவங்களுக்குள் மீண்டும் மீண்டும் செல்கிறது. இது பெரும்பாலும் யதார்த்தத்திற்கு மாறான கருத்துக்களுக்கு வழிவகுக்கிறது. அறிவாற்றல் நடத்தை சிகிச்சையாளர்கள் இதை-தானியங்கி எதிர்மறை எண்ணங்கள் (ANTகள்) என்று கூறுவார்கள். தானியங்கி எதிர்மறை எண்ணங்கள் நம்மைப் பற்றி நமக்கு எழும் எதிர்மறையான மற்றும் குறிப்பான நோக்கம் ஏதுமற்ற எண்ணங்கள் ஆகும்.

ஒரு முன்னணி அறிவாற்றல் நடத்தை சிகிச்சையாளரான டாக்டர் டேவிட் பர்ன்ஸ் சில பொதுவான எதிர்மறை எண்ண வகைகளை அடையாளம் கண்டுள்ளார், அவை கீழே பட்டியலிடப்பட்டு உள்ளது (பர்ன்ஸ், 1999).

வரிசை எண் எதிர்மறை எண்ணத்தின் வகை குறுகிய விளக்கம்
1 எல்லாம் அல்லது ஒன்றுமில்லை போன்ற சிந்தனை ஒவ்வொரு நடவடிக்கையையும், கருப்பு மற்றும்வெள்ளையாக அதாவது நேர் முரணான விஷயங்களாக நாம் காண்கிறோம். நம் செயல்கள் பூரணமாகவில்லை என்றால் நாம் முழுத் தோல்வி அடைந்ததாகவே கருதுகிறோம்.
2 அதிகப்படியான பொதுமயமாக்கல் ஒரு எதிர்மறை நிகழ்வை ஒருபோதும் முடிவில்லாத தோல்வியாக நாம் காண்கிறோம்.
3 மனதளவில் வடிகட்டுதல் நாம் ஒரு எதிர்மறை எண்ணத்தை தேர்ந்தெடுத்து அதில் பிரத்தியேகமாக வசிப்பதால், யதார்த்தத்தை பற்றிய நமது பார்வை இருட்டாகிவிடுகிறது. இது ஒரு துளி மையினால் குவளையின் நீர் நிறம் மாறுவது போன்றதாகும்.
4 நேர்மறையினை தகுதியற்றதாக்குதல் ஏதோவொரு காரணத்திற்காக ‘எண்ண வேண்டாம்’ என்று வலியுறுத்துவதன் மூலம் நேர்மறையான அனுபவங்களை நாங்கள் நிராகரிக்கிறோம்., இவ்வாறு  நம் அன்றாட அனுபவங்களுக்கு முரணான, எதிர்மறை நம்பிக்கையை கட்டிக்காத்து வருகிறோம்.
5 சட்டென்று முடிவுக்கு வருதல் நமது முடிவுகளை உறுதியுடன் ஆதரிக்கும் திட்டவட்டமான உண்மைகள் இல்லாவிட்டாலும் எதிர்மறையான பொருள் விளக்கத்தை அளிக்கிறோம்.
6 பிறர் மனதை அறிதல் மற்றவர்களின் எண்ணங்களைப் பற்றி நம்மிடம் போதுமான ஆதாரங்கள் இல்லை என்றாலும், அவர் நமக்கு எதிர்மறையாக நடந்து கொள்கிறார் என்று தன்னிச்சையாக முடிவு செய்கிறோம். மேலும், அதை சரிபார்க்க நாம் கவலைப்படுவதும் இல்லை.
7 குறிசொல்பவரின் பிழை விஷயங்கள் மோசமாக மாறும் என்று நாம்  எதிர்பார்ப்பதுடன், நமது கணிப்பு ஒரு நிறுவப்பட்ட உண்மை என்று நாங்கள் நம்புகிறோம்.
8 பெரிதாக்குதல் (பேரழிவு) அல்லது குறைத்தல் நாம் நமது தவறுகளை அல்லது பிழைகளை மிகைப்படுத்துவது அல்லது நமது மற்றும் பிறருடைய பலம் மற்றும் நேர்மறையான தகுதிகளை நிராகரிப்பதாகும்.
9 உணர்வு சார்ந்த பகுத்தறிவு உண்மையில் விஷயங்கள் வேறுவிதமாக இருந்தாலும்,எதிர்மறை உணர்ச்சிகள் அல்லது உணர்வுகளால் தான் நாம் எண்ணுவது சரியே என்று அனுமானம் செய்கிறோம். நான் அதை உணர்கிறேன், எனவே அது உண்மையாக இருக்க வேண்டும் என்று நம்புகிறோம். பாரபட்சமற்ற முடிவுகளை எடுப்பதை விட நாம் எப்படி உணருகிறோம் என்ற அடிப்படையில் முடிவுகளை எடுக்கும் பழக்கம் இதுவாகும்.
10 ”செய்ய வேண்டும்” எனும் கூற்றுகள் ”செய்ய வேண்டியவை” மற்றும் ”செய்யக் கூடாதவை” இருக்க வேண்டியவை மற்றும் கட்டாயமாக இருக்க வேண்டியவை போன்றவைகளால் நம்மை நாமே ஊக்குவித்தோ அல்லது கண்டித்தோ கொள்கிறோம். இந்த உணர்ச்சிகளின் விளைவுகள் குற்ற உணர்வு ஆகும். இவ்வாறே ”செய்ய வேண்டும்” எனும் கூற்றுகள் மற்றவர்களை நோக்கி திசை திருப்பப்படும்போது கோபம், விரக்தி மற்றும் மனக்கசப்பை உணர்கிறோம்.
11 பெயரிடல் மற்றும் தவறாக எழுதுதல் இது பொதுமைப்படுத்தலின் தீவிர வடிவம். ஒருவரின் பிழையை விவரிப்பதற்குப் பதிலாக, தனக்குத் தானே எதிர்மறையான பெயரை இணைத்துக் கொள்கிறார் – “நான் ஒரு பூஜ்யம்”. வேறொருவரின் நடத்தை நம்மை தவறான முறையில் பாதிக்கும்போது அந்நபருக்கு எதிர்மறை பெயரை இணைக்கிறோம்.
12 தனிப்பயனாக்கம் தனிப்பயனாக்கம் என்பது மற்றவர்கள் எதை செய்தாலும் அல்லது கூறும் அனைத்தும் தங்களுக்கு ஒருவிதமான நேரடி, தனிப்பட்ட எதிர்வினையை ஏற்படுத்துகிறது  என்று ஒரு நபர் நம்புவதாகும். மற்றவர்கள் அவ்வாறு கூறவில்லை என்றாலும் கூட, அவர்கள் எல்லாவற்றையும் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்வார்கள்.

பிரிவு 6இல் (ஆன்மீக தீர்வுகள்) எதிர்மறை எண்ண வடிவங்களை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து நாங்கள் விரிவுபடுத்தியுள்ளோம்.

4. எதிர்மறை சிந்தனையின் தாக்கம்

எதிர்மறை சிந்தனையால் பாதிக்கப்பட்ட ஒருவர், பலவீனம் அடைவதுடன் அவரை சுற்றியுள்ளவர்களும் பாதிக்கப் படுகிறார்கள். எதிர்மறை சிந்தனையின் தாக்கங்கள் சிலவற்றை கீழே பட்டியலிடப்பட்டிருக்கின்றன :

  • இது நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறது.
  • இந்த எதிர்மறை சிந்தனையானது நமது உறவு முறைகளை மிகவும் மோசமாக பாதிக்கிறது.
  • ஒருவரது ஆன்ம சக்தியையும், நேர்மறையாக வளர வேண்டும் என்ற நமது  தீர்மானத்தையும் தகர்த்து விடுகிறது.
  • அதிகப்படியான எதிர்மறை எண்ணங்களால், கடினமான மன உளைச்சல் அல்லது மருத்துவ ரீதியான மனஅழுத்தம் மற்றும் ஒழுங்கு மீறிய நிலைக்கு வழிவகுக்கிறது. மேலும் தீவிரம் அடையும் போது ஒருவர் தனக்குத் தானே அல்லது மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கலாம். உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்களின்படி, உலகளவில் 300 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர், (WHO, 2018) மற்றும் சுமார் 800,000 பேர் ஒவ்வொரு ஆண்டும் தற்கொலை செய்துகொள்கிறார்கள் (ஒவ்வொரு 40 வினாடிக்கும் 1மரணம் நிகழ்கிறது). (WHO, 2019).
  • எதிர்மறை சிந்தனையின் நேரடி தாக்குதலால் மனநோய்கள் அதிகரிக்கிறது. இதனால் பல நாட்பட்ட நோய்களான இருதய நோய், நீரிழிவு, உடல் பருமன், ஆஸ்துமா, கால்-கை வலிப்பு மற்றும் புற்றுநோய்க்கு வழிவகுக்கிறது.
  • இது தினசரி செயல்பாட்டில் சிறிய இடையூறுகளுக்கு வழிவகுக்கிறது. இதனுடைய தாக்கம் தீவிரமாக இருக்கும் போது தனிப்பட்ட, சமூக மற்றும் தொழில் ரீதியான குறைபாடுகளாக உருவெடுப்பதோடு, அகால மரணத்திற்கும் வழிவகுக்கிறது.

5. எதிர்மறை எண்ணங்களின் மூல காரணங்கள்

ஆன்மீக ஆராய்ச்சியின் மூலம், 90% மனநோய்களின் அடிப்படைக் காரணங்கள், ஆன்மீக பரிமாணத்தை சார்ந்தது என்பதைக் கண்டறிந்துள்ளோம். உடல் மற்றும் உளவியல் காரணிகளால் ஏற்படும் மன நோய்களின் விகிதம் ஆன்மீக காரணிகளுடன் ஒப்பிடும்போது குறைவாகவே உள்ளது. உடல் மற்றும் உளவியல் ரீதியாக எல்லாவிதமான உதவிகள் கிடைத்தாலும், ஒரு நேர்மறையான மனநிலையை வளர்க்க முடியாமல் போனதற்கு இதுவே துல்லியமான காரணம் ஆகும். எதிர்மறை எண்ணங்களின் உண்மையான காரணத்தை புரிந்துகொள்வதும், ஒப்புக்கொள்வதும் நிலையான நேர்மறை மாற்றத்தை அடைவதற்கான முதல் படியாகும்.

பின்வரும் துணை பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி உடல், உளவியல் மற்றும் /அல்லது ஆன்மீக அடிப்படை காரணங்களால் எதிர்மறை எண்ணங்கள் ஏற்படலாம் என்று ஆன்மீக ஆராய்ச்சி காட்டுகிறது. பின்வரும் அட்டவணை எதிர்மறை எண்ணங்களின் அடிப்படை காரணத்தின் சதவிகிதத்தை வழங்குகிறது.

மூல காரணம் %
உடல் ரீதியான 20
மனோ ரீதியான 30
ஆன்மீக ரீதியான 50
மொத்தம் 100

ஆதாரம் : ஆன்மீக ஆராய்ச்சி – 09 செப்டம்பர் 2019

தீவிர எதிர்மறை எண்ணங்களின் அடிப்படை காரணங்களில், 50% ற்கும் மேலானவை ஆன்மீக ரீதியானது.

5.1 உளவியல் மூல காரணங்கள்

பராத்பர குரு டாக்டர் ஜயந்த் பாலாஜி ஆடவலே அவர்கள், புகழ்பெற்ற முன்னாள் மனநல மருத்துவர் ஆவார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக, மருத்துவ ஹிப்னோதெரபி மற்றும் ஆன்மீக ஆராய்ச்சியிலும் ஒருங்கிணைந்த ஆராய்ச்சி அனுபவங்களை கொண்டவர்.

அவரது ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளின் படி, எதிர்மறை எண்ணங்கள் ஆழ் மனதில் உள்ள ஆளுமை குறைபாடுகளின் (கோபம், பயம், பொறாமை, உணர்ச்சிவசப்படுதல், பாதுகாப்பின்மை, குற்றம் காணும் மனப்பான்மை, எதிர்மறை சிந்தனை போன்றவை) எண்ணப்பதிவுகளிலிருந்து  வருகின்றன. இந்த எண்ணப்பதிவுகள் தொடர்ந்து எண்ணங்களின் வடிவத்தில் தூண்டுதல்களை வெளி மனதிற்கு அனுப்புகின்றன. நம்முடைய வெளிமனதின் நிலை இந்த தூண்டுதல்களால் ஆளப்பட்டு, மேலும் நாம் எதிர்மறையான சூழ்நிலையை அனுபவிக்கிறோம் அல்லது தவறாக செயல்படுகிறோம் .

5.2 ஆன்மீக மூல காரணங்கள்

ஒருவரது வாழ்க்கையில் திடீரென ஏற்படும் பெரிய மாற்றங்கள்,போதைப் பொருள் துஷ்பிரயோகம், மரபணு காரணங்கள், நாட்பட்ட நோய்கள் போன்ற உயிரியல் மற்றும் உளவியல் காரணிகளால், கடுமையான மன உளைச்சல் அல்லது மருத்துவ ரீதியான மனஅழுத்தம் ஏற்படுகிறது என்று நவீன விஞ்ஞானம் கருதுகிறது (mayoclinic.org, 2019).

இருப்பினும் கடுமையான மன உளைச்சல் மற்றும் பிணி சார்ந்த மன அழுத்தம் போன்றவை, ஆன்மீக காரணங்களால் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதனை ஆன்மீக ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்துள்ளோம். மேலும் மூல காரணத்தை கவனத்திற்கொள்ளாமல், நோய் அறிகுறிகளை மட்டும் கருத்தில் கொண்டு, மனநல மருத்துவர்கள் அளிக்கும் சிகிச்சை ஏன் நிரந்தரமற்றது என்பதை இப்பொழுது புரிந்து கொள்ளலாம் நிரந்தரமாக தீர்வு ஏற்படாமல் சிக்கல் மீண்டும் தோன்றுகிறது அல்லது பின்னடைவு ஏற்படுகிறது.

எதிர்மறை எண்ணங்களுக்கு முக்கிய மூல காரணம் ஆன்மீக ரீதியானது. எதிர்மறை எண்ணங்களின் வலிமை, காலம் மற்றும் அதிர்வலைகள், ஆன்மீகக் காரணிகளால் பெரியளவில் அதிகரிக்கக்கூடும். எதிர்மறை எண்ணங்களுக்கு காரணமாக இருக்கக்கூடிய முக்கிய ஆன்மீகக் காரணிகள் கீழே வரிசைப் படுத்தப்பட்டுள்ளன.

எதிர்மறை சக்திகள்

  • எதிர்மறை சக்திகள் வெளியில் இருந்து ஒரு நபரை பாதிக்கலாம் அல்லது அந்த எதிர்மறை சக்தியால் ஒரு நபர் பீடிக்கப்பட்டிருக்கலாம். குறிப்பாக ஒரு நபர் ஆன்மீக ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் போது, அந்நபரின் உடல், மனம் மற்றும் புத்தியை எதிர்மறை சக்தி கட்டுப்படுத்தப்படுகிறது.
  • அதிக ஆளுமை குறைபாடுகள் மற்றும் அகம்பாவம் உள்ளவர்கள், எதிர்மறை சக்திகளின் இலக்குக்கு மேலும் ஆளாகின்றனர். ஏனெனில் எதிர்மறை சக்திகள் தங்களை போன்று குறைபாடுகள் மற்றும் அகம்பாவம் கொண்ட நபர்களிடம் ஈர்க்கப்படுகின்றன.
  • எதிர்மறை சக்திகள் ஒரு சிக்கலை பெரிதாக்கக்கூடும் – எடுத்துக்காட்டாக, ஒரு நபருக்கு கோப எண்ணங்கள் இருந்தால், எதிர்மறை சக்திகள் அவரை பீடிக்கலாம் அதாவது அந்த எண்ணத்தை பெரிதாக்குவதோடு, எண்ணற்ற அளவில்  அந்த எண்ணத்திலேயே மனம் மீண்டும் மீண்டும் உழல்கிறது.

குறிப்பு : எதிர்மறை சக்திகள் எண்ணங்கள் மூலம் மக்களுக்கு எவ்வாறு தீங்கு விளைவிக்கின்றன என்பதை பற்றி மேலும் படித்து அறிக.

விதி மற்றும் கொடுக்கல்-வாங்கல் கணக்குகள்

மக்கள் ஒருவருக்கொருவர் எதிர்மறையான கொடுக்கல்-வாங்கல் கணக்கு வைத்திருக்கும்போது, அது எதிர்மறை எண்ணங்களை உருவாக்குகிறது. மேலும், கடுமையான விதியால் ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களிடம் எதிர்மறை எண்ணங்களின் விகிதம் அதிகமாக இருக்கும். மேலும் ஒருவரின் வாழ்க்கையில் மகிழ்ச்சியற்ற நிலையை அனுபவிப்பதற்கு விதி ஒரு முக்கிய காரணமாகிறது. ஆன்மீக ஆராய்ச்சி நம்முடைய ஆளுமைகளில் 98% நமது ஆழ்மனது எண்ணப்பதிவுகளை சார்ந்தது என்றும், அவையனைத்தும் கடந்த கால வாழ்க்கையிலிருந்து கொண்டு வரப்பட்டவை என்றும் அறியப்பட்டுள்ளது.

குறிப்பு : விதி பற்றி மேலும் அறிக.

மறைந்த மூதாதையர்கள்

மறைந்த மூதாதையர்களின் அதிருப்தி அடைந்த சூட்சும தேஹங்கள்,  மறுமையிலிருந்தும் அவைகளின் சந்ததியினரை அடிக்கடி பாதிக்கின்றன. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அதிகப்படியான எதிர்மறை எண்ணங்களால் ஒருவர் அவதியுற்றால் மறைந்த மூதாதையர்களால் ஏற்படும் பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்கலாம்.

மேலும் அறிக: பித்ரு தோஷம் (மறைந்த மூதாதையர்களால் ஏற்படும் பிரச்சனைகள்) என்றால் என்ன?

சந்திரனால் நமது எண்ணங்களில் ஏற்படும் விளைவு

பல்லாயிரம் ஆண்டுகளாக மக்களிடையே மனிதனின் மனநிலை சந்திரனால் மோசமாக பாதிக்கப்படுகிறது என்று பிரபலமான கருத்து நிலவுகிறது. எஸ்.எஸ்.ஆர்.எஃப் மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் படி மனித ஆன்மாவில் சந்திரனின் தாக்கம் குறித்த கருத்து உறுதிப் படுத்தப்படுகிறது. குறிப்பாக கூற வேண்டும்  என்றால்,  பௌர்ணமி மற்றும் அமாவாசை இரவுகளில், எதிர்மறை எண்ணங்கள் மற்றும் ஒழுங்கற்ற நடத்தை ஆகியவற்றில் அதிகரிப்பை காணமுடிகிறது.

5.2.1 எதிர்மறை எண்ணங்கள் – சூட்சும பரிமாணத்தில் இவற்றின் தாக்கம் என்ன?

மக்கள் மற்றும் பொருட்களிருந்து வெளிப்படும் சூட்சுமமான அதிர்வுகளை உணரக்கூடிய ஸாதகர்கள் ஆன்மீக ஆராய்ச்சிக் குழுவில் உள்ளனர். மேம்பட்ட ஆறாவது உணர்வின் மூலம் காட்சி வடிவத்தில் தெய்வீக அறிவை பெறும் திறன், இவர்களுக்கு உண்டு. இந்த வரைபடங்கள் ஆன்மீக ஊடுகதிர்கள் போன்றவை. அத்துடன் இவை ஆன்மீக பரிமாணத்தில் இணையற்ற கண்ணோட்டத்தை  சராசரி மனிதனுக்கு வழங்குகின்றன.

கீழேயுள்ள படத்தில், எதிர்மறை எண்ணங்கள் ஒருவரை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான சூட்சும செயல்பாடு முன்வைக்கப்படுகிறது.

எதிர்மறை எண்ணங்கள் வராமல் தடுப்பது எப்படி?

ஒரு நபரிடம் எதிர்மறை எண்ணங்கள் ஓங்கி இருக்கும்போது, நிகழும் சூட்சுமமான செயல்பாடுகள் பற்றிய சுருக்கமான விளக்கம் பின்வருமாறு. முதலாவதாக, அதிக அஹம்பாவம் உள்ள ஒருவர் எதிர்மறை எண்ணங்களை எளிதில் பெறுகிறார். ஏனென்றால், அவர் தனது அஹம்பாவத்தை திருப்திப்படுத்துவதைப் பற்றி அதிகம் சிந்திக்கிறார். ஆதலால் அவரிடம் உணர்ச்சிகள் அதிகரித்து காணப்படுகிறது .இவ்வாறு நிகழும்போது, அந்நபரின் ஆக்ஞா சக்கரம் மோசமாக பாதிக்கப்படுவதால், அவரது சிந்தனை பலவீனமடைகிறது. ஒரு சிந்தனையில் உருவாக்கப்படும் கஷ்டம் தரும் சக்தி மற்ற எல்லா எண்ணங்களுக்கும் மாற்றப்படுவதால், சங்கிலித்தொடர் போன்று எதிர்வினை எண்ணங்கள் உருவாகின்றன. இதனால் எதிர்மறை சக்திகள் அந்நபரிடம் ஈர்க்கப்படுகின்றன.இதன் விளைவாக அவரது உடலையும் அவரது தலையைச் சுற்றியுள்ள பகுதியையும் சுற்றி கஷ்டம் தரும் சக்தி மேலும் அதிகரிக்கிறது. ஆதலால் அந்நபர் எதிர்மறை எண்ணங்களில் தொலைந்து போகிறார், அதே நேரத்தில் தன்னை சுற்றி நடப்பவை பற்றி அறியாமல் இருக்கிறார். எதிர்மறை எண்ணங்கள் அவரது யதார்த்தத்தை வடிவமைக்கத் துவங்குகின்றன.

6. எதிர்மறை எண்ணங்களை சமாளிப்பதற்கான தீர்வுகள்

உடல்ரீதியான தீர்வுகள்

மனதை ஆக்கபூர்வமாக செயல்படுத்த உடற்பயிற்சி, மருந்துகளை எடுத்துக்கொள்வது (தேவைக்கேற்ப), பிராணாயாம பயிற்சிகள், அமைதியான இசையைக் கேட்பது, திட்டமிட்டு செயல்படுதல், ஆரோக்கியமான காலைக்கடன்களை முறையாக செய்தல்  போன்ற தீர்வுகள் உதவுகின்றன. இருப்பினும், எதிர்மறை எண்ணங்கள் மனதுடன் தொடர்புடையவை என்பதால், உடல்ரீதியான தீர்வுகள் மூலம் முழுமையான தீர்வு கிடைப்பதற்கு பதிலாக கவனச்சிதறல் ஏற்படலாம்.

மனோரீதியான தீர்வுகள்

உறுதிமொழிகள் எடுத்துக்கொள்வது, மன ஒருமைப்பாட்டு பயிற்சி செய்தல், மனநல மருத்துவரின் உதவியை நாடுதல் போன்றவை பிரபலமான உளவியல் தீர்வுகளின் வகைகளாகும். அறிவாற்றல் நடத்தை சிகிச்சை (Cognitive Behavioural Therapy) பரவலாக பயன்படுத்தப்படுகிறது. அதாவது ஒருவரின் எண்ணங்களின் நாட்குறிப்பைப் பராமரிப்பதும், பின்னர் எதிர்மறை எண்ணங்களை நேர்மறையான உறுதிமொழிகளுடன் மாற்றி அமைப்பதாகும். எனினும், உறுதிமொழிகள் தங்கள் வரம்புகளையும் கொண்டிருக்கின்றன. இதை எங்கள் கட்டுரையில் உள்ளடக்கியுள்ளோம் – சுய ஆலோசனை மற்றும் உறுதிமொழி..

ஆன்மீக ரீதியான தீர்வுகள்

ஆன்மீக ரீதியான அடிப்படை காரணங்களை கொண்ட எதிர்மறை எண்ணங்களை சமாளிப்பதற்கான சக்தி வாய்ந்த கருவிகள், ஆன்மீக பயிற்சி மற்றும் ஆன்மீக நிவாரணம் ஆகும். ஆன்மீக பயிற்சி நேர்மறையான ஆன்மீக சக்தியை உருவாக்கி, எதிர்மறை ஆற்றல்களிலிருந்து பாதுகாப்பு வழங்கி, தீங்கு விளைவிக்கிற பாதகமான விதியை  நீக்குகிறது . எதிர்மறை எண்ணங்களிருந்து மீண்டு வருவதற்கான நடைமுறைகள் கீழே பரிந்துரைக்கப்படுகின்றன.

  1. நாமஜபம் : ‘ஸ்ரீ குருதேவ் தத்த’ நாமஜபம் செய்வதால் எதிர்மறை எண்ணங்களை, அதாவது மறைந்த மூதாதையர்களால் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க உதவுகிறது. இயல்பாகவே தீவிரமானவை உட்பட அனைத்து வகையான எதிர்மறை எண்ணங்களையும் எதிர்கொள்வதற்கு இந்த நாமஜபத்துடன் ‘ஓம் நமோ பகவதே வாஸுதேவாய’ என்ற நாமஜபமும் தற்போதைய காலத்தின் சூழலுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
  2. ஆன்மீக பயிற்சியின் ஒரு பகுதியாக ஆளுமை குறைகளை களைதல் : ஆளுமை குறைகளை களைதல் செயல்முறைக்கு பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள் முன்னோடியாக திகழ்ந்தார். இந்த  செயல்முறை ஆழ் மனதில் பதிந்துள்ள ஆளுமை குறைபாடுகளின் எண்ணப்பதிவுகளை நீக்க உதவுகிறது. இது ஆழ் மனதை (90% மான மனம் இதுவே) சுத்தப்படுத்துகிறது. ஆளுமை குறைகளை களைதல் செயல்முறையில் துல்லியமான நிகழ்வுகள் அல்லது எதிர்மறை எண்ணங்கள் சுய ஆலோசனைகள் மூலம் கையாளப்படுகின்றன. மேலும் இவை தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்படுகின்றன. டாக்டர் டேவிட் பர்ன்ஸ் அடையாளம் கண்டுள்ள பல்வேறு எதிர்மறை எண்ணங்களின் வடிவங்களை சமாளிக்க பல்வேறு சுய ஆலோசனைகளை நாங்கள் கீழே வழங்கியுள்ளோம்.
  3. உப்பு நீர் நிவாரணம் : இந்த 15 நிமிட நிவாரணம், எதிர்மறை எண்ணங்களின் மூலம் உருவாகும் கருப்பு சக்தியை அகற்றுவதற்கான ஒரு சிறந்த வழியாகும். மேலும் வாசித்து அறிக – உப்பு நீர் நிவாரணம்.

7. முடிவுரை

எதிர்மறை எண்ணங்களுடன் போராடுவது மிகவும் வருத்தமாகவும் அதையரிப்படுத்துவது போல் இருக்கும். ஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளையானது (எஸ். எஸ்.ஆர்.எஃப்.) உங்களின் இக்கட்டான நிலைமையை புரிந்துகொள்வதோடு, நீங்கள் தனியாக இல்லை என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவும் விரும்புகிறோம். உலக மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர் தங்கள் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் எதிர்மறை எண்ணங்களால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது எங்கள் அனுபவமாகும். பெரும்பாலான மக்கள் இப்பிரச்சனையை உடல் மற்றும் உளவியல் தீர்வுகளுடன்  தீர்க்க முயற்சி செய்வதால் எதிர்மறை எண்ணங்களை சமாளிப்பது மிகவும் கடினமாகத் தோன்றுகிறது. இருப்பினும், பிரச்சனை ஆன்மீக இயல்புடையதாக இருக்கும்போது, (பெரும்பாலும் அவ்வாறே), உடல் மற்றும் உளவியல் தீர்வுகளின் செயல்திறன் குறைவாகவே இருக்கும். நாங்கள் பரிந்துரைத்த ஆன்மீகக் கோட்பாடுகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம், உங்கள் மனநிலை மற்றும் உங்கள் வாழ்க்கைத் தரத்தில் ஒரு திட்டவட்டமான முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

8. குறிப்பேடுகள்

பர்ன்ஸ், டி. டி., 1999. ஃபீலிங் குட்: தி நியூ மூட் தெரபி. நியூயார்க்: ஹார்பர்காலின்ஸ் பப்ளிஷர்ஸ் இன்க்.
ஹாக்லி, எல். சி., 2013. எதிர்மறை எண்ணங்கள். [ஆன்லைனில்]
இங்கு கிடைக்கும்: https://link.springer.com/referenceworkentry/10.1007%2F978-1-4419-1005-9_1563 [அணுகப்பட்டது 16 07 2019].