குரு என்பவர் யார், அவரை எவ்வாறு கண்டுகொள்வது?

அட்டவணை

சுருக்கம்

எந்தவொரு துறையிலும் நம்மை வழிநடத்த ஆசான் ஒருவர் இருப்பது விலைமதிப்பற்றதாகும். ஆன்மீகத்திற்கும் இது பொருந்தும். தொட்டுணரமுடியாத சூட்சுமமான ஆன்மீகத்தில்,  உன்னதமான ஆன்மீக வழிகாட்டியை அல்லது குருவை கண்டறிவது கடினம். குரு என்பவர் ஆசிரியர் அல்லது போதகரை காட்டிலும் வேறுபட்டவர். எல்லா மதங்களுக்கும் கலாச்சாரங்களுக்கும் அடிப்படையாக உள்ள பொதுவான ஆன்மீக கோட்பாடுகள் பற்றி நமக்கு கற்றுத்தரும், உலகத்தின் ஆன்மீக ஒளியின் கலங்கரை விளக்கமே குரு ஆவார்.  அவருடைய குணாதிசயங்கள் பற்றியும் முக்கிய அம்சங்கள் பற்றியும்  இக்கட்டுரை விளக்குகிறது

1. அறிமுகம்

ஆசிரியர் அல்லது பல நூற்றாண்டுகளாக ஏற்கனவே பெறப்பட்ட அறிவுசார் விஷயங்கள் எதுவுமில்லாமல், பிள்ளைகளை தாமாகவே கற்றுக் கொள்ள சொன்னால் எவ்வாறிருக்கும்? துறைசார் வல்லுனர்களின் அறிவினை பெறாது, நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதியினையும், புதிதாக உருவாக்க வேண்டியிருந்தால் எவ்வாறிருக்கும்? நம் வாழ்வு முழுவதுமே கற்றுக் கொண்டு மட்டுமே இருந்து விடுவோமே தவிர எந்தவொரு முன்னேற்றத்தினையும் அடைந்திருக்க மாட்டோம். ஏன், தவறான வழியில் கூட செல்வதற்கு வாய்ப்புள்ளது.

விச்வமனம் மற்றும் புத்தி: எவ்வாறு இறைவனின் படைப்புகளான மனிதன், விலங்குகள் ஆகியவற்றிற்கு மனமும் புத்தியும் காணப்படுகிறதோ, அதே போல் இறைவனின் சகல படைப்புகளுக்கும் மனமும் புத்தியும் உண்டு, பிரபஞ்சத்திற்கும் மனம் மற்றும் புத்தி காணப்படுவதோடு அது பிரபஞ்சத்திலுள்ள சகல விஷயங்கள் பற்றியும் மிகச்சரியான உண்மைகளை கொண்டிருக்கும். அதனை இறைவனின் மனம் மற்றும் புத்தியாகவும் கொள்ளலாம். ஒருவர் ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடைய அடைய, அவரது சூட்சும மனமும் புத்தியும் விச்வமனம் மற்றும் புத்தியுடன் இரண்டற கலப்பதால், அவருக்கு இறைவனின் படைப்பு பற்றிய முழு விவரமும் அறியக்கூடியதாக இருக்கிறது

அதே போன்று, நமது ஆன்மீக பாதையில் வழிகாட்டி ஒருவர் மிகவும் அவசியமாவார். ஒரு குறிப்பிட்ட துறையினில் அதிகாரபூர்வமாக இருக்கும் ஒருவரே அத்துறையில் மற்றவரை வழிகாட்ட தகுதியானவர். அவ்வாறே, ஆன்மீகத்தின்படி, ஆன்மீகத்தில் அதிகாரபூர்வமாக இருக்கும் ஒருவரே குருவாக கருதப்படுகிறார்.

பார்வையற்றவர்கள் வாழும் நாட்டில் பார்க்கத் தெரிந்தவன் அரசன் என பழமொழி ஒன்றுள்ளது.  மிக நுண்ணிய ஆறாவது அறிவை கொண்ட குரு ஒருவர், ஆன்மீகத்தில் குருடாகவும் அறியாமையிலும் இருக்கும் மனிதர்கள் மத்தியில் முழுவதுமாக ‘பார்க்க’ தெரிந்தவராக கருதப்படுகிறார். அவர் ஏற்கனவே இந்த ஆன்மீக பாதையை தனது குருவின் உதவியுடன் கடந்து வந்ததோடு விச்வமனம் மற்றும் புத்தியினை அணுகக்கூடியவராகவும்  இருக்கிறார்.  யாரை நாம் ஆன்மீக வழிகாட்டியாக அல்லது குருவாக கருதலாம் எனவும், அவரது குணாதிசயங்கள் எவ்வாறிருக்கும் எனவும் இக்கட்டுரையில் விவரிக்கிறோம்.

2. குரு அல்லது உன்னதமான ஆன்மீக வழிகாட்டி எனப்படுவதன் வரைவிலக்கணம்

பரபிரம்ம இறை தத்துவத்திற்கு பல அம்சங்கள் உண்டு. இந்த அம்சங்கள் பிரபஞ்சத்தில் குறிப்பிட்ட தொழிற்பாடுகளை செய்கின்றன. இது எவ்வாறென்றால், ஒரு நாட்டின் அரசாங்கத்தில் பல துறைகளின் மூலம் பல செயல்பாடுகளை செய்து அந்நாட்டினை ஆட்சி செய்வதற்கு இணையானதாகும்.

அரசாங்கத்தில்  உள்ள கல்வித் துறை எவ்வாறு நவீன விஞ்ஞானத்தை நாடு முழுக்க கற்றுத்தரும் செயல்பாடுகளில் ஈடுபடுகிறதோ, அது போன்றே பிரபஞ்சத்தில் ஆன்மீக கல்விக்கும் ஆன்மீக முன்னேற்றத்திற்கும் பொறுப்பாக உள்ள கடவுளின் அம்சமே குரு எனப்படுகிறார். இதுவே, கண்ணிற்கு புலப்படாத அல்லது வெளிப்படாத (நிர்குண) குரு அல்லது இறைவனின் போதனை தத்துவம் எனவும் கருதப்படுகிறது. வெளிப்படாத குரு தத்துவம் பிரபஞ்சம் முழுவதும் வியாபித்து காண்பதோடு, நம் வாழ்வில் மட்டுமல்ல நாம் இறந்தபின்பு கூட நம்முடன் பயணிக்கிறது. வெளிப்படாத குரு தத்துவம், நம் வாழ்நாள் முழுவதும் நம்முடனே இருந்து, உலக வாழ்க்கையில் இருந்து மெதுவாக நம்மை விடுவித்து, மேலே ஆன்மீக வாழ்க்கைமுறைக்கு உயர்த்தி வழிநடத்துவதே முக்கியமான மற்றும் சிறப்பான அம்சமாகும். குருவானவர் நம்மை நமது ஆன்மீக நிலைக்கேற்ப வழிநடத்துகிறார். அதாவது, நாம் அறிந்தோ அறியாமலோ, ஞானத்தை பெறுவதற்குரிய நமது திறமைக்கேற்ப, விடாமுயற்சி, பொறுப்புணர்ச்சி, விவரத்தில் கவனம் செலுத்தல், நோக்கத்தில் உறுதி, இரக்கம் போன்ற திறன்களை நம் வாழ்வில் வளர்த்துக்கொள்ள நமக்கு உதவுகிறார். இத்தகைய திறன்கள், இறைவனின் ஒரு நல்ல ஸாதகராக இருப்பதற்கு அத்தியாவசியமாக இருப்பதோடு, நம் ஆன்மீக பயணத்தை தொடர்வதற்கும் இன்றியமையாதவையாக கருதப்படுகிறது. ஆன்மீக முன்னேற்றத்தை உயிர்ப்புடன் நாடும் ஒருவருக்கு குரு தத்துவம் அதிக செயல்பாட்டில் காணப்படுவதோடு, அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதலை கண்ணிற்கு புலப்படாத ரூபத்தில் தருகிறது.

உலகின் மொத்த ஜனத்தொகையில் சிலரே, ஒழுங்கமைக்கப்பட்ட மதத்தின் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட, உலகளாவிய  ஆன்மீக பயிற்சியினை செய்கின்றனர். இவர்களில் மிகச்சிலரே (பிறந்த மதம் எதுவாக இருப்பினும்) ஆன்மீக பயிற்சியின் மூலம் 70%-ற்கும் மேலான நிலையை அடைகின்றனர். பின்பு இவ்வாறு உன்னத நிலையை அடைந்த சிலரின் வாயிலாக, வெளிப்படாத குரு தத்துவம் முழுவதுமாக  செயல்பட ஆரம்பித்ததும், அவர்கள் ஸகுண குரு அல்லது மனித ரூபத்தில் குரு என கருதப்படுவர். இன்னொரு விதமாக  கூறுவதானால், ஒருவர்  ஆன்மீக வழிகாட்டி அல்லது குருவாக தகுதி பெற 70% ஆன்மீக நிலையினை அடையவேண்டும். மனித ரூபத்தில் உள்ள குருவானவர் மனித குலத்திற்கு ஆன்மீக ஞானத்தின் கலங்கரை விளக்கமாக இருப்பதுடன் விச்வமனம் மற்றும் புத்தியுடன் சம்பூர்ண ஒருமைப்பாட்டில் இருக்கிறார்.

2.1 குரு எனும் சொற்பதத்தின் அர்த்தம்

ஸம்ஸ்க்ருதத்தில் இருந்து பெறப்பட்ட ‘குரு’ எனும் வார்த்தைக்கு ஆழ்ந்த ஆன்மீக அர்த்தம் உண்டு. ‘கு’ மற்றும் ‘ரு‘ எனும் எழுத்துகளின் அர்த்தங்கள் வருமாறு:

கு’ என்பது மனித குலத்தில் பெரும்பாலானோர் கொண்டுள்ள அஞ்ஞானத்தைக் குறிக்கும்.

ரு‘ என்பது அஞ்ஞானத்தை அகற்றக்கூடிய மெய்ஞான சுடரை குறிக்கும்.

சுருக்கமாக, குருவானவரே மனித குலத்தின் அஞ்ஞானத்தின் இருளை நீக்கி, ஆன்மீக அனுபவங்களையும்   மெய்ஞானத்தையும் வழங்குகின்றார்

3. ஆசிரியர் / பேராசிரியர் மற்றும் குருவிற்கு இடையிலான வித்தியாசம்

ஆசிரியருக்கும் மனித ரூபத்தில் உள்ள குருவிற்கும் இடையிலான வித்தியாசங்களை பின்வரும் வரைபடம் காட்டுகின்றது.

ஒரு ஆசிரியர் ஒரு குரு
ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்கு மட்டுமே கற்பிப்பார் 24 மணி நேரமும் கற்பிப்பார்
வார்த்தைகள் மூலம் கற்பிப்பார் வார்த்தைகள் மூலமும் அதனை தாண்டியும்  கற்பிப்பார்
மாணவனின் சொந்த வாழ்க்கையில் அக்கறையில்லை மாணவனின்  வாழ்வின்  ஒவ்வொரு  பகுதியிலும்  அக்கறை  செலுத்துவார்
சில பாடங்களை மட்டுமே கற்பிப்பார் எல்லா பாடங்களையும்  உள்ளடக்கிய ஆன்மீகத்தை கற்பிப்பார்

4. போதனையாளர் மற்றும் குருவிற்கு இடையிலான வித்தியாசம்

ஆன்மீக சாஸ்திரங்கள் அல்லது சமயம் சார்ந்த கல்வியை போதிக்கும் போதனையாளர் ஒருவருக்கும் குருவிற்கும் இடையே  பெரிய வித்தியாசம் உள்ளது. மக்களை வழிகாட்டுவதில் இருவருக்கும் இடையே உள்ள வித்தியாசங்களை பின்வரும் வரைபடம் காட்டுகின்றது

ஆன்மீக வழிகாட்டுதலில் போதனையாளர் ஒருவருக்கும், ஒரு குருவிற்கும்

ஒரு போதனையாளர் ஒரு குரு
திட்டமிடப்பட்டது தன்னிச்சையானது
செயற்கையானது இயற்கையானது
புத்தியிலிருந்து எழுகின்றது ஆத்மாவிலிருந்து (உள்ளிருக்கும் இறைவன்) எழுகின்றது
பிரபலமான மகான்கள் மற்றும் புனித நூல்கள் கூறுபவற்றையே மேற்கோள் காட்டுவார் புனித நூல்களுக்கு ஆதாரமாக விளங்கும் இறைவனின் வெளிப்படாத போதனை தத்துவத்தின் மூலமாக பெறப்பட்ட ஞானத்தை அடிப்படையாகக் கொண்டது
மேலோட்டமாக இருப்பதால் குறுகிய நேரத்திலேயே கேட்போர் சலித்துவிடுவர் தெய்வீக சைதன்யத்துடன் கூடிய பேச்சு, கேட்போர் பல மணி நேரம் தொடர்ந்து கேட்க விரும்புவர்
மற்றவர் மனதில் உள்ள சந்தேகங்கள் தீராமல் போகும் கேள்விகள் கேட்கப்படாமலேயே சந்தேகங்கள் தீர்க்கப்படும்
பெரும்பாலும் அகம்பாவமே காணப்படுகிறது அகம்பாவம் எள்ளளவும் இருப்பதில்லை

இன்றைய உலகில் பெரும்பாலான போதனையாளர்கள் 30% ஆன்மீக நிலையில் இருப்பதால், அவர்கள் மேற்கோள் காட்டி எடுத்துக் கூறும் புனித நூல்களின் மெய்யான உள்ளர்த்தத்தை அவர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை, மேலும் அவற்றில் எழுதியுள்ள எல்லாவற்றையும அவர்கள் சுயமாக அனுபவித்ததில்லை. ஆகையினால் அவர்கள் பார்வையாளர்களை தவறாக வழிநடத்தும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

5. குருவிற்கும் மகானுக்கும் இடையிலான வித்தியாசங்கள் எவை?

5.1 மகான் என்பதற்கு மேலாக ஒருவரை குரு என ஆக்குவது எது?

ஒவ்வொரு குருவும் மகானே, ஆனால் ஒவ்வொரு மகானும் குருவல்ல. சில மகான்களே  குருவாக கருதப்படுகின்றனர். பின்வரும் வரைபடம், பிப்ரவரி 2016-இல் உலகில் காணப்பட்ட மகான் மற்றும் குருமார்களின் எண்ணிக்கையினை காட்டுகின்றது.

ஆன்மீக நிலை மகான்கள்1 குருமார்கள்2 மொத்தம்
60-69%3 3,500 1,500 5,000
70-79% 50 50 1004
80-89% 10 10 204
90-100% 5 5 104

அடிக்குறிப்புகள்

  1. 70% ஆன்மீக நிலையினை அடைந்தவரையே மகான் என கருதுகின்றோம். ஒரு மகான் சமூகத்தில் உள்ள மக்கள் ஆன்மீக பயிற்சியினை மேற்கொள்ள ஆர்வத்தினை ஏற்படுத்தி ஆன்மீக பாதையினை பின்பற்ற வழிநடத்துகிறார்
  2. குருமார்கள் மோக்ஷம் அடையும் வரை ஸாதகர்களை வழிநடத்தும் முழு பொறுப்பினையும் ஏற்றுக்கொண்டு அவர்கள் அந்நிலை அடைவதனை உறுதி செய்கின்றனர்
  3. 70% ஆன்மீக நிலைக்கு குறைந்த ஒருவரை மகானாக கருதாவிட்டாலும், 60-69% ஆன்மீக நிலை கொண்ட ஸாதகர்களின் மொத்த எண்ணிக்கையான 5000-தினை காண்பித்திருக்கிறோம். இது ஏனென்றால் 60-69% ஆன்மீக நிலையில் உள்ளோர் மகான் அல்லது  குரு நிலை அடையும் தருவாயில் இருப்பதனால் ஆகும். அத்தோடு அவர்கள் மகான்  அல்லது குரு நிலை அடைவதற்கு சாத்தியங்கள் அதிகம். இவர்கள் ஆன்மீக பயிற்சியினை தொடர்ந்தால், இவர்களில்  70% (அதாவது 3,500) மகான் நிலையினை அடைவர் மற்றும்  30% (அதாவது 1,500)  குரு நிலையினை அடைவர்
  4. பிப்ரவரி 2016-இல், 70%-திற்கும் 100%-திற்குமிடையே ஆன்மீக நிலை உள்ள 1000 மகான்கள் உள்ளனர். எனினும் இவ்வரைபடத்தில் தர்ம பிரசாரம் செய்வதில் தீவிரமாக செயல்படும்  மகான்களையும் குருமார்களையும்   மட்டுமே காண்பித்திருக்கிறோம்

5.2 குருவிற்கும் மகானிற்கும் இடையிலான ஒற்றுமைகள் எவை?

  • மகானும் குருவும் 70%-திற்கு மேலான ஆன்மீக நிலையினை  கொண்டுள்ளனர்
  • இருவருமே மனிதகுலத்தின் மீது ஆன்மீக அன்பினை (ப்ரீதி) கொண்டுள்ளனர், அதாவது எதிர்பார்ப்பற்ற அன்பு
  • இருவருமே மிகக்குறைந்த அகம்பாவத்தினை கொண்டுள்ளனர். தம்மை ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தியினால் அடையாளம் காணாது, ஆத்மா அதாவது தம்முள் இருக்கும் இறைவனை கொண்டு அடையாளம் காண்பதே இதன் அர்த்தமாகும்

5.3 மகான் மற்றும் குருவின் குணாதிசயங்களில் உள்ள வித்தியாசங்கள் எவை?

80% ஆன்மீக நிலையிலுள்ள ஒரு மகான் மற்றும் ஒரு குருவிற்கு இடையிலான ஸ்தூல ஒப்பிடுதலை பின்வரும் அட்டவணை காட்டுகிறது.

ஒரு மகானிற்கும் குருவிற்கும் இடையிலான வித்தியாசம்

ஆன்மீக நிலை ஒரு மகான் ஒரு குரு
மற்றவர் மீதுள்ள அன்பின் %1 30% 1,500
சேவை2 30% 50%
தியாகம்3 70% 90%
எழுத்து         அளவு4 2% 10%
                         இயல்பு5 அதிக ஆன்மீக அனுபவங்களை வழங்குவார் அதிக ஆன்மீக வழிகாட்டுதலை வழங்குவார்
வெளிப்பட்ட சக்தி6 20% 5%
ஆன்மீக பரிணாமம்7 விரைவானது மிக விரைவானது

அடிக்குறிப்புகள் (மேற்கண்ட அட்டவணையில் உள்ள சிகப்பு நிற எண்களை குறிப்பது):

  1. மற்றவர்கள் மீது அன்பு என குறிப்பிடுவது எதிர்பார்ப்பற்ற அன்பினை ஆகும். இது ஏதேனும் ஒரு எதிர்பார்ப்பினால் மாசுபட்டிருக்கும் உலக அன்பினை காட்டிலும் வேறானது. 100% என்பது இறைவன் செலுத்தும் நிபந்தனையற்ற, பாரபட்சமற்ற, உயிரற்ற பொருட்கள் மற்றும் எறும்பு போன்ற சிறிய உயிரினங்களில் இருந்து உயர்ந்த ஜீவராசிகளான மனிதர்கள் வரை எல்லா படைப்புகள் மீதும் சமநிலையாக அருளப்பட்ட, எங்கும் வியாபித்திருக்கும் அன்பினை குறிக்கும்.
  2. எல்லா மதங்களுக்கும் ஆதாரமான, இந்த பிரபஞ்சத்தை ஆட்டிப் படைக்கும் பிரபஞ்ச தத்துவங்களுக்கு அதாவது ஆன்மீகத்திற்கு, பரிபூரண சத்தியத்திற்கு செய்யப்படும் சேவையே  ஸத்சேவை  எனப்படும். இங்கு 100% என்பது ஸ்தூல, மனோ, புத்தி, நிதி, சமூகம் ஆகிய எல்லா பரிமாணங்களிலும் தமது நேரத்தையும்  திறன்களையும் 100% அளித்தல் என்பதாகும்.
  3. தன்னுடைய நேரம், உடல், மனம் மற்றும் செல்வத்தில் எவ்வளவு இறைவனுக்கு சேவை செய்வதற்காக தருகிறார்கள் என்பதே தியாகம் என்பதாகும்.
  4. பூரண சத்தியத்தை விவரிக்கும் அல்லது பரப்பும் நூல்கள் எவ்வளவு எழுதப்பட்டுள்ளன என்பதைக் குறிக்கும்.
  5. மகான்கள் மற்றும் குருமார்கள் எழுதுவது முறையே ஆன்மீக அனுபவங்கள் மற்றும் ஆன்மீக வழிகாட்டுதல் தொடர்பானதாகும்.
  6. இறைவன் வெறுமனே தனது இருப்பினால் செயல்படுகிறார். அவர் எந்த ஒரு முயற்சியும் எடுக்கத் தேவையில்லை, ஆகவே அவருடைய சக்தி வெளிப்படுவதில்லை. சாந்தி, ஆனந்தம் போன்ற அவருடைய சக்தியின் ரூபங்கள்  வெளிப்படாததாகும். ஆனால், மகான்களும் குருமார்களும் கண்ணிற்கு புலப்படும் ஸ்தூல உடலை கொண்டிருப்பதால், ஓரளவிற்கு வெளிப்படும் சக்தியை பயன்படுத்துகிறார்கள்.
  7. ‘நான்’ என்பதன் அர்த்தம் இறைவனிலிருந்து தன்னை வேறுபட்டவன் என நினைப்பதும் அனுபவிப்பதும் ஆகும்.

    வெளிப்படாத இறைவனின் ரூபத்துடன் மேலும் இரண்டற கலந்திருப்பதால், குருமார்கள் வெளிப்படும் சக்தியினை அதிகமாக பயன்படுத்த வேண்டியதில்லை. ‘நான்’ என்பது குருமார்களை காட்டிலும் மகான்களுக்கு அதிகம் இருப்பதால், குருமார்களைவிட மகான்கள் அதிக வெளிப்படும் சக்தியை பயன்படுத்துகின்றனர். ஆனால் இது அமானுஷ்ய சக்திகளை பயன்படுத்துபவர்களை காட்டிலும் மிக குறைந்த அளவே ஆகும். உதாரணமாக, நோய்வாய்ப்பட்ட ஒருவர் மகானின் அனுக்கிரகத்தால் குணமாகிறார் என்றால் அங்கு 20% சக்தியே வெளிப்படுவதாகும். இதுவே ஒரு மகானல்லாத, அமானுஷ்ய நிவாரண சக்திகளை கொண்ட ஒருவர் குணப்படுத்தும்போது, அங்கு 50% வெளிப்படும் சக்தி காணப்படுகிறது. இறைவனின் வெளிப்படும் சக்தி 0 என்பதால், ஒருவர் பயன்படுத்தும் வெளிப்படும் சக்தி, அவர் இறைவனுடன் ஒன்றியிருக்கும் அளவைப் பொருத்தது ஆகும். எனவே நம் வெளிப்படும் சக்தி எவ்வளவு அதிகமோ, அவ்வளவு நாம் இறைவனிடம் இருந்து விலகி உள்ளோம். பிரகாசமான ஒளிரும் கண்கள், கூர்மையான கை அசைவுகள் போன்றவை வெளிப்படும் சக்தியின் அறிகுறிகள் ஆகும்.

  8. மகான்கள் மற்றும் குருமார்களுக்கு, தமது பணியினை செய்வதற்காக, இறைவனால் வழங்கப்படுகின்ற வெளிப்படும் சக்தி தேவைப்படுகிறது. மகான்கள் சில சமயங்களில் தம் பக்தர்களின் உலக பிரச்சனைகளை  தீர்ப்பார்கள், இதற்காக ஒப்பீட்டளவில் அதிக சக்தி தேவைப்படுகிறது. குரு  தன் சிஷ்யனை ஆன்மீக முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வைப்பதால், சிஷ்யனானவன் ஆன்மீக காரணங்களால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணுவதில் தன்னிறைவு பெறுகிறான். இதன் விளைவாக குரு மிகக்குறைந்த ஆன்மீக சக்தியையே பயன்படுத்துகிறார்.
  9. மகான்களும் குருமார்களும் குறைந்தபட்சம் 70% ஆன்மீக நிலையினை கொண்டுள்ளனர். 70% ஆன்மீக நிலையினை கடந்த பிறகு, மகான்களை காட்டிலும் குருமார்கள் வேகமான ஆன்மீக முன்னேற்றத்தினை அடைகின்றனர். அவர்கள் ஸத்குரு (80%) மற்றும் பராத்பர குரு (90%) நிலையினை மகான்களை காட்டிலும் வேகமாக அடைகின்றனர். இது ஏனெனில், அவர்கள் தொடர்ந்து ஒரு சிஷ்யனை ஆன்மீகரீதியாக மேம்படுத்துவதில் மூழ்கியிருக்கிறார்கள். மகான்களோ தமது பக்தர்களை உலக மட்டத்திலும் காக்கிறார்கள்.

6. மனித ரூபத்தில் உள்ள குருவின் முக்கியத்துவம் என்ன?

நம்மில் ஒவ்வொருவரும் வழிகாட்டுதல்களுக்காக ஆசிரியர்கள், வைத்தியர்கள், வழக்கறிஞர்கள் போன்றோரை நாடுகின்றோம். ஒப்பீட்டளவில் எளிமையான இத்துறைகளுக்கு கூட வழிகாட்டிகள் தேவைப்படும்போது, பிறப்பு இறப்பு எனும் பந்தத்திலிருந்து விடுவிக்கும்  குரு என்பவரின் முக்கியத்துவத்தை எண்ணிப் பாருங்கள்.

6.1 குருவின் முக்கியத்துவம் – ஒரு மாணவனுக்கு கற்பிக்கும் கண்ணோட்டத்திலிருந்து

குரு பல ரூபங்களில் வருகிறார். சந்தர்ப்பங்கள், நூல்கள், மனித ரூபம் போன்ற பல வழிகளில் அவர் நமக்கு கற்றுத் தருகிறார். இத்தகைய பல்வேறு வழிகளுக்கும் மனித ரூபத்தில் உள்ள குருவிற்கும் இடையிலான ஒப்பீட்டினை பின்வரும் அட்டவணை காட்டுகின்றது.

வெளிப்பட்ட அல்லது மனித ரூபத்தில் உள்ள குருவின் முக்கியத்துவம்

குருவின் ரூபம் குரு ஒருவர் இல்லை
மனிதன் நூல் உருவச்சிலை / உருவப்படம் மற்றவை / வாழ்க்கை சூழ்நிலைகள்
சிஷ்யனின் திறனுக்கு  ஏற்றாற்போல் கல்வியை தீர்மானித்தல் சாத்தியம் சாத்திய-மில்லை சாத்திய-மில்லை சாத்தியமில்லை
சந்தேகங்களை தீர்த்தல் சந்தேகம் எழுந்தவுடன் விரைவில் சாத்தியம் நிறைய படித்த பிறகு, சிறிய அளவிற்கு மட்டுமே சாத்தியம் சாத்திய-மில்லை சாத்தியமில்லை
திட நம்பிக்கை ஏற்பட தேவையான நேரம் மிக குறைவு அதிகம் இன்னும் அதிகம் மிகப்பெரிய கால அளவு
ஊக்கப்படு-த்துதல், கற்பித்தல் மற்றும் பரிசோதித்தல் சாத்தியம் சாத்திய-மில்லை சாத்திய-மில்லை சாத்தியமில்லை
ஆன்மீக பயிற்சியை இடையிலேயே கைவிடும் சிஷ்யர்களின் எண்ணிக்கை குறைவு அதிகம் மேலும் அதிகம் மிகவும் அதிகம் மிகவும் அதிகம்
ஆன்மீக முன்னேற்-றத்திற்கு தேவையான நேரம் குறைவு அதிகம் மேலும் அதிகம் மிகவும் அதிகம் மிகவும் அதிகம்
உளவியல் படி, குருவின் ரூபத்திற்கு பொருத்தமாக உள்ள சிஷ்யனின் ஆளுமை வழிகாட்டு-தலுக்கான மிகுந்த தேவையை உடைய ஒருவர் சுதந்திர மனப்பான்மை கொண்ட ஒருவர் ஆதரவு தேவை என உணரும் ஒருவர் சுதந்திர மனப்பான்மை கொண்ட ஒருவர் இன்னும் அதிக சுதந்திரமன-ப்பான்மை கொண்ட ஒருவர்

6.2 குருவின் முக்கியத்துவம் – மனோரீதியான கண்ணோட்டத்திலிருந்து

மனித  ரூபத்தில்  ஆன்மீக வழிகாட்டி இருப்பதால் ஒரு  மாணவனுக்கு  பல  மனோரீதியான  நன்மைகள்  கிடைக்கின்றன.

  • தமது இருப்பினையும் திறனையும் வெளிக்காட்டாத  இறைவன்  மற்றும்  தெய்வங்கள்  போலல்லாது,  குருவானவர்  தனது  ரூபத்தினை மனித வடிவில் உள்ள குருவின் மூலமாக வெளிப்படுத்துகிறார். இவ்வாறு ஆன்மீக மாணவன் ஒருவனுக்கு, தனது ஆன்மீக பாதையில் தன்னை கவனித்துக் கொள்ள கண்ணுக்குத் தெரியும் குரு ஒருவர் கிடைக்கிறார்.
  • மனித ரூபத்தில் இருக்கும் குரு, வெளிப்படாத குருவைப் போலவே எல்லாம் அறிந்தவர். அத்துடன் அவரது சிஷ்யனை பற்றி எல்லாம் உணரக் கூடியவர். ஒரு மாணவன் உண்மையானவனா இல்லையா, அவன் எங்கு தவறு செய்கிறான் என்பதனை விச்வமனம் மற்றும் புத்தியை அணுகி குரு தெரிந்து கொள்கிறார்.  இதன் விளைவாக, குருவின் இந்த இயலுமையை தெரிந்து கொண்ட மாணவன் தவறான செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்கிறான்.
  • குருவைக் காட்டிலும் தான் குறைந்தவன் எனும் தாழ்வு மனப்பான்மை சிஷ்யன் மனதில் ஏற்படுவதற்கு குரு அனுமதிப்பதில்லை. அவர் தகுதியுடைய சிஷ்யனின் தாழ்வு மனப்பான்மையை நீக்கி எங்கும் நிறைந்த குருவின் இயல்பை அளிக்கிறார்.

6.3 குருவின் முக்கியத்துவம் – ஆன்மீக கண்ணோட்டத்திலிருந்து

ஸாதகன் / சிஷ்யன் ஒருவனின் ஆன்மீக வளர்ச்சிக்கு மனித ரூபத்தில் இருக்கும் குருவின் அவசியத்தை பின்வரும் அட்டவணை காட்டுகிறது.

வெளிப்பட்ட அல்லது மனித ரூபத்தில் இருக்கும் குருவின் முக்கியத்துவம்

குருவின் ரூபம் குரு ஒருவர் இல்லை
மனிதன் நூல் உருவச்சிலை / உருவப்படம் மற்றவர்கள் / வாழ்க்கை சூழ்நிலைகள்
விதிக்கப்பட்ட மற்றும் தன்னிச்சையான செயல்களை குறைப்பது பற்றியும் ஆன்மீக பயிற்சிக்கு தடையாக இருக்கும் கஷ்டம் தரும் சக்திகளில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கும் வழிகாட்டுதலை பெறுதல் சாத்தியம் சாத்தியமில்லை சாத்தியமில்லை சாத்தியமில்லை
குருவின் ஸத்சங்கத்தின் மூலம் அவரது தெய்வீக சைதன்யத்தை பெறுவதால் உண்டாகும் நன்மைகள் சாத்தியம் சாத்தியமில்லை குறைவு சாத்தியமில்லை
குருவின் அருளால் ஏற்படும் நன்மைகள் சாத்தியம் சாத்தியமில்லை குறைவு சாத்தியமில்லை
நன்மையை பெறுவதற்காக பொதுவாக சிஷ்யனிடம் வேண்டிய ஆன்மீக நிலை % 55%1 40% 60%2 30%
ஒரு சிஷ்யன் / ஸாதகர் மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் % 60%3 70% 70% 70% 100%
ஒரு சிஷ்யனுக்கு இருக்க வேண்டிய குணங்கள் சேவையும் தியாகமும் மறைமுக அர்த்தத்தை புரிந்து கொள்ளுதல்4 உள்ளிருந்து வழிகாட்டுதல் பெறுதல் வகையைப் பொறுத்தது அதீத அகம்பாவம்5
வருடாந்திர ஆன்மீக முன்னேற்றத்தின் அளவு 2-3% 0.25% 0.27% 0.25% 0.001%6

அடிக்குறிப்புகள் (மேற்கண்ட அட்டவணையில் உள்ள சிகப்பு நிற எண்களை குறிப்பது):

  1. சுமார் 55%, ஆன்மீக நிலையில் ஒரு மாணவன் / சிஷ்யன் மனித ரூபத்தில் உள்ள குருவின் இருப்பினால் நன்மை அடையும் ஆன்மீக முதிர்ச்சியினை வளர்த்து கொள்கிறார். இது ஆன்மீகத்தில் புலமைப்பரிசில் பெறுவதற்கு ஒத்ததாகும். ஆன்மீக முதிர்ச்சியடைந்த இந்த நிலையில், இறைவனை உணர்வதற்கான குருவின் வழிகாட்டுதலை சரியான முறையில் பயன்படுத்தக் கூடிய திறனை சிஷ்யன் பெறுகிறான்
  2. உருவச்சிலை ஒன்றின் மூலம் நன்மையினை பெறுவது ஒப்பீட்டளவில் கடினமாகும். குருவின் சித்திரம் அல்லது உருவச்சிலை வெளிப்படுத்தும் சூட்சுமமான தொட முடியாத அதிர்வலைகள், 60%-திற்கு மேற்பட்ட ஆன்மீக நிலையுடைய, நுண்ணிய ஆறாவது அறிவு கொண்டவருக்கு மாத்திரமே பயனளிக்கும்.
  3. மனித ரூபத்தில் உள்ள குருவின் வழிகாட்டுதலை பின்பற்றும்போது, ஆன்மீக முன்னேற்றம் அடைய தேவையான முயற்சிகள் சிறப்பாக பயன்படுத்தப்படுவதால், குறைந்தளவு முயற்சியே தேவைப்படுகிறது. மற்ற வழிகளில் தவறு செய்வதன் வாய்ப்புகள் அதிகம்.
  4. புனித நூல்களின் உள்ளர்த்தத்தை புரிந்து கொள்வது எளிதான காரியமல்ல. பெரும்பாலும் புனித நூல்கள் மற்றும் புத்தகங்கள் தவறாக விளக்கப்படும் வாய்ப்புள்ளது.
  5. இங்கு அகம்பாவம் என்பது தன்னம்பிக்கையை குறிக்கும். ஒருவர் தன் மீது கொண்டுள்ள நம்பிக்கை குறைவாக இருந்தால், இன்னொருவருடைய வழிகாட்டுதலின்றி ஆன்மீக முன்னேற்றம் அடைய முடியாது.
  6. ஒரு ஆன்மீக வழிகாட்டி இல்லாமல், ஆன்மீக வளர்ச்சியில் தேக்கம் அல்லது பின்னடைவு கூட ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

7. மனித ரூபத்தில் உள்ள குரு ஒருவரின் சில சிறப்பம்சங்கள்

  • ஒரு குரு கட்டமைக்கப்பட்ட மதத்திற்கு அப்பாற்பட்டவர். அத்துடன் அவர் முழு மனித இனத்தையும் ஒரே மாதிரி பார்க்கிறார். அவர் கலாச்சாரம், தேசியம் அல்லது பாலினம் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதில்லை. ஆன்மீக வளர்ச்சியை தீவிரமாக விரும்பும் மாணவனை மட்டுமே அவர் நாடுகிறார்.
  • ஒரு குரு  மதமாற்றம் செய்யுமாறு யாரையும் ஒருபோதும் கேட்க மாட்டார். மாணவனை உயர்த்தி, எல்லா மதங்களுக்கும் அடிப்படையான உலகளாவிய ஆன்மீக கோட்பாடுகளை புரிந்து கொள்ள வைப்பார்.
  • ஒருவர் எந்த ஆன்மீக பாதை அல்லது மதத்தை பின்பற்றினாலும், அவை அனைத்தும் இறுதியாக குருக்ருபாயோகத்திற்கே கொண்டு செல்கின்றன.

குரு என்பவர் யார், அவரை எவ்வாறு கண்டுகொள்வது?

குருவானவர் சங்கல்பத்தின் ஆன்மீக சக்தியைக் கொண்டு செயல்படுகிறார். இறைவனால் அளிக்கப்பட்ட இந்த ஆன்மீக சக்தியினை கொண்டு, தகுதியான மாணவர் முன்னேற வேண்டும் எனும் தன்னுடைய வெறும் எண்ணத்தால் மாத்திரமே அவரை உயர்த்தி விடுகிறார். ஒரு ஸாதகர் / ஆன்மீகத்தின் மாணவர் குருவின் அருள் மற்றும் மனித ரூபத்தில் உள்ள குருவின் வழிகாட்டுதல் இல்லாமல், 70% ஆன்மீக நிலையை அடைய முடியாது. இதற்கு காரணம், நமது ஆன்மீக பயிற்சியின் ஆரம்ப காலத்தில் ஆன்மீக பயிற்சியின் அடிப்படை கோட்பாடுகளை மட்டுமே பின்பற்றி முன்னேற முடியும். ஆனால் ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்குப் பிறகு ஆன்மீக ஞானம் மிகவும் நுண்ணியதாகிறது. ஒருவர் தனது ஆறாவது அறிவினால் ஆவிகளால் (பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள் போன்றவை) எளிதாக  தவறாக வழிநடத்தப்படலாம். மகான் நிலையை நோக்கிய ஆன்மீக முன்னேற்றத்திற்கான வழிகாட்டுதலுக்காக, மிக உன்னத நிலையில் இருக்கும் மனித ரூபத்தில் உள்ள ஆன்மீக வழிகாட்டி ஒருவர் தேவைப்படுகிறார்.

  • மகான் நிலையை அடைந்த பிறகும், ஒருவர் குருவின் அருளை தொடர்ந்து பெறுவதற்கு தனது ஆன்மீக பயிற்சியை தொடர வேண்டும்.
  • உள்ளிருக்கும் ஆத்ம ஞானத்தை பெறும் வகையில் மாணவரை உயர்த்தி விடுகிறார். இதற்கு நேர்மாறாக, ஆறாவது அறிவு கொண்ட சிலர், ‘மீடியம்’-மாக (இறந்தவரின் ஆவியுடன் பேசுபவர்) செயல்பட்டு, சூட்சும பரிமாணத்தில் உள்ள சூட்சும தேஹங்களிடம் விவரங்களை பெறுகின்றனர் . ‘மீடியம்’-மாக மட்டும் செயல்படும் பொழுது ஒருவரால் ஆன்மீக முன்னேற்றம் அடைய முடியாது.
  • குருவிற்கும் மாணவனிற்கும் இடையே உள்ள உறவு புனிதமானது. அத்துடன் மாணவன் மீது குரு கொள்ளும் அன்பானது எதிர்பார்பற்றதும் நிபந்தனையற்றதும் ஆகும்.
  • குருவானவர் எல்லாம் அறிந்தவர், ஆதலால் ஸ்தூலத்தில் மாணவனின் அருகில் இல்லாவிட்டாலும்,அவரால் அவனை கவனித்துக் கொள்ள முடியும்.
  • குரு எப்போதும் ஒரு நேர்மறையான அணுகுமுறையுடன் கற்பிப்பார். உதாரணமாக, குரு மாணவரின் ஆன்மீக முதிர்ச்சியைப் பொறுத்து, ‘பஜனை பாடல்கள் பாடுங்கள், இறைவனின் நாமஜபம் செய்யுங்கள், கடவுளுக்கு சேவை செய்யுங்கள்’ போன்ற ஆன்மீக பயிற்சியில் ஒன்றை மேற்கொள்ள அறிவுறுத்துவார். அவர் ஒருபோதும் ‘மது அருந்தாதீர்கள், இவ்வாறு நடந்து கொள்ளாதீர்கள்’ என எதிர்மறையாக வழிநடத்த மாட்டார். இதன் காரணம், சிலவற்றை செய்யவேண்டாம் என கற்பிப்பது மனோரீதியான நிலையாகும், ஆன்மீக முன்னேற்றம் அடையும் கண்ணோட்டத்தில் இது உதவுவதில்லை. குரு மாணவனின் ஆன்மீக பயிற்சியில் கவனம் செலுத்துகிறார். இதுவே காலப்போக்கில், தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளை நிராகரிக்கும் திறனை மாணவனுக்கு கொடுக்கும்.
  • மேகங்கள் எல்லா இடங்களிலும் சமமாக மழை பொழிந்தாலும், குழிகளில் மட்டுமே தண்ணீர் சேர்கின்றது. உயர்ந்து நிற்கும் மலைகளில் சேர்வதில்லை. அதேபோல், குருமார்களும் மகான்களும் வேறுபாடு காட்டுவதில்லை. அவர்களின் அருள் மழை எல்லோர் மீதும் சமமாக பொழிகிறது. ஆனால் ஆன்மீக ரீதியில் கற்றுக்கொண்டு முன்னேற விரும்பும் தூய எண்ணத்துடன் குழிகளை போன்று இருப்பவர்களால் குருவருளின் நன்மைகளைப் பெற்றுக் கொள்ளவும் தக்கவைத்துக் கொள்ளவும் முடிகிறது.
  • எல்லாம் அறிந்த குருவானவர் மாணவனின் ஆன்மீக முன்னேற்றத்திற்கு எது சிறந்தது என்பதை உள்ளுணர்வில் அறிவார். அவர் ஒவ்வொரு மாணவனையும் தனிப்பட்ட முறையில் வழிநடத்துகிறார்.

8. குருவை கண்டறிதல் – எவ்வாறு உன்னதமான ஆன்மீக வழிகாட்டி ஒருவரை அடையாளம் கண்டு அவரிடம் சேர்வது?

ஆன்மீகத்தின் மாணவன் ஒருவனுக்கு குருவின் திறனை மதிப்பிடுவது கடினம். இது மாணவன் ஆசிரியரை  சோதிப்பது போலாகும்.

எஸ்.எஸ்.ஆர்.எஃப். (SSRF), ‘சூட்சும உலகம்\' அல்லது \'ஆன்மீக பரிமாணம்\' என்பதை ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தி ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டது என வரையறுக்கிறது. சூட்சும உலகம் என்பது கண்களால் காண இயலாத தேவர்கள், ஆவிகள், சுவர்க்கம் நிறைந்த உலகை குறிக்கிறது. இதை நம் ஆறாவது அறிவால் மட்டுமே உணர முடியும்.

ஒருவரை சோதிக்க, அவரை விட அதிக திறமையை ஒருவர் கொண்டிருக்க வேண்டும். ஒரு மாணவன் குருவை சோதிக்கும் நபராக இருக்க முடியாது. மிக முக்கியமாக, குருவின் திறன் சூட்சும அல்லது ஆன்மீக பரிமாணத்தில் உள்ளது, அதாவது ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்திக்கு அப்பாற்பட்டது. அது மிக நுண்ணிய ஆறாவது அறிவின் மூலமே அளவிட முடியும்.

இது ஒரு சராசரி நபரை, யாரை பின்பற்றுவது எனும் குழப்ப நிலைக்கு  தள்ளி விடுகிறது.

ஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளை (எஸ்.எஸ்.ஆர்.எஃப்), ஒருவர் குருவை தேடிச் செல்லக்கூடாது என்று பரிந்துரைக்கிறது. கிட்டத்தட்ட எல்லா சந்தர்ப்பங்களிலும், ஒரு ஆன்மீக வழிகாட்டியை பிரித்தறிந்து தேர்ந்தெடுக்கும் ஆன்மீக முதிர்ச்சி ஒருவருக்கு இருக்காது.

ஸாத்வீக புத்தி என்பது சூட்சும அடிப்படையான ஸாத்வீக தன்மை பிரதானமானது. இது ஆன்மீக பயிற்சியின் மூலம் பெறப்படுகிறது. இது உலக விஷயங்களுக்காக பயன்படுத்தப்படுவதிலிருந்து மேலே உயர்ந்து, இறைவனுக்கு சேவை செய்வதிலும் ஆன்மீக வளர்ச்சியிலும் அர்ப்பணிக்கப்படுகிறது. ஸாத்வீக புத்தி இருந்தால் ஒழிய புனித நூல்களின் மறைமுகமான அர்த்தத்தை புரிந்துகொள்வது மிகவும் கடினம்.

ஒருவருடைய பிரித்தறியும் திறனை வளர்த்துக்கொள்ள, ஆன்மீக  பயிற்சியின் ஆறு அடிப்படை கோட்பாடுகளுக்கு  இணங்க அவர் ஆன்மீக பயிற்சி செய்ய வேண்டும். இது ஆன்மீக வளர்ச்சிக்கும் ஸாத்வீக புத்தியின் விருத்திக்கும் வழிவகுக்கும். எங்கும் வியாபித்திருக்கும் வெளிப்படாத குரு அல்லது இறைவனின் போதனை தத்துவம் நம்மை தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறது. 55% ஆன்மீக நிலையை ஒருவர் அடைந்துவிட்டால்,  மனித ரூபத்தில் குரு ஒருவர் அவரது வாழ்வில் வருகிறார். (இன்றைய மக்களில் பெரும்பாலானவர்களின் ஆன்மீக நிலை, 20%). 55% ஆன்மீக நிலையில், குருவானவர் போலியில்லை என்பதை தனது ஸாத்வீக புத்தியை கொண்டு உணரக்கூடிய ஆன்மீக முதிர்ச்சியினை மாணவர் கொண்டிருப்பார்.

8.1 போலி அல்லது அங்கீகரிக்கப்படாத குரு

இன்று சமுதாயத்தில் இருக்கும் குருமார்களில் 80% போலியானவர் அல்லது ஆன்மீகத்தில் அதிகாரம் இல்லாதவர். அதாவது, அவர்கள் 70%-திற்கு மிக குறைவான ஆன்மீக நிலையில் உள்ளனர். அத்துடன் விச்வமனம் மற்றும் புத்தியினை அணுக முடியாதவர்கள்.  சில சமயங்களில், அவர்கள் பெற்ற சில குறிப்பிட்ட ஆன்மீக சக்தி மூலம் ஆயிரக்கணக்கான மக்களை ஈர்ப்பதற்கான உயர்ந்த திறனை அவர்கள் கொண்டிருக்கலாம்.

உதாரணமாக, 50% ஆன்மீக நிலையில் உள்ள ஒரு நபர், முன் ஜென்மங்களில் செய்த ஆன்மீக பயிற்சி மூலம் பெற்ற ஆன்மீக சக்தியினால், சிறு வயதிலிருந்தே நோயை குணப்படுத்தும் ஆற்றலை கொண்டிருக்க முடியும். இன்றைய யுகத்தின் மனிதகுலத்தில் பெரும்பாலானோர் 20-25% ஆன்மீக நிலையில் இருப்பதால் ஒருவர் மகானா இல்லையா என்பதை தெரிந்துகொள்ள கூடிய நிலையில் இல்லை. எனினும் அவர்கள் பொதுவாக தங்களை குணப்படுத்தக்கூடிய அல்லது அற்புதங்களைச் செய்யக்கூடிய நபரைப் பின்தொடர்வார்கள்.

ஒரு சராசரி நபரின் நலனுக்காக, யாரெல்லாம் உண்மையான குரு அல்ல என்பதை பற்றி சில குறிப்புகள் வழங்கி இருக்கிறோம். இக்குறிப்புகள் உங்களுக்கு போலி குருவை புத்தியின் மூலம் புரிந்து கொண்டு சோதிப்பதற்கு உதவும். இவை போலி குருமார்கள் தங்கள் செயல்களால் தங்களை வெளிப்படுத்திய சில நிகழ்ச்சிகள் ஆகும்.

1. மற்றவர்களிடையே தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி அவரது பெருமையை வெளிப்படுத்த முயற்சி செய்யும் குருமார்கள் :

ஒரு மகான், அவருக்கு வணக்கம் செலுத்த வருபவர்களிடம்  அவர்களது பெயரையும் வயதையும் கேட்பார். பதில் கூறியதும் அவர் சொல்வார், “இரு பதில்களும் தவறு. பெயர் மற்றும் வயது உடல் சார்ந்தவை. நீங்கள் ஆத்மா. அதற்கு பெயரோ வயதோ கிடையாது”. பின்பு ஆன்மீகத்தை பற்றி பேச்சு எடுத்து, “நீங்கள் ஆன்மீக பயிற்சி செய்கிறீர்களா?” என கேட்பார். யாரேனும் ஆம் என கூறினால், “என்ன ஆன்மீக பயிற்சி?” என கேட்பார். “எனது குரு பரிந்துரைத்த ஆன்மீக பயிற்சி” என ஒருவர் கூறினால், “உங்கள் பெயர் மற்றும் வயது பற்றிய எளிய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியவில்லை. பிறகு உங்கள் குரு என்ன கற்றுக் கொடுத்தார்? ஒரு உண்மையான குரு மட்டுமே இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும். என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு சொல்கிறேன்” என கூறுவார்

இத்தகைய போலி குருமார்களிடம், “உண்மையில் உங்கள் கேள்விகள் அர்த்தமற்றவை! உடலுடன் சம்பந்தப்பட்ட உங்கள் விழிப்புணர்வு (தேஹபுத்தி) காரணமாக தான் எனது பெயரையும் வயதையும் கேட்டீர்கள், அதனால் நானும்  தேஹபுத்தியுடன் பதிலளித்தேன்” என ஒருவர் சொல்ல வேண்டும்

ஒருவருக்கு குரு இருக்கிறாரா அல்லது ஒருவரின் ஆன்மீக பயிற்சி சரியாக நடக்கின்றதா இல்லையா என்று முதல் பார்வையில் கண்டுகொள்ள முடியாதவர் எப்படிப்பட்ட குரு ஆவார்?

2. பொன் மற்றும் பெண் மீது பற்று உள்ளவர்கள்

3. போலி பகட்டுகளை காண்பிப்பவர்கள்

நேரம் மற்றும் கடிகார பட்டியின் கட்டுப்பாட்டிற்குள் இருக்க விரும்பவில்லை என ஒரு குரு கைகடிகாரத்தை பயன்படுத்துவதில்லை. இருப்பினும் ஒவ்வொரு பதினைந்து இருபது நிமிடங்களுக்குப் பிறகு, “என்ன நேரம்?” என அவர் மற்றவர்களைக் கேட்பார்

4. புகழ் மீது ஆசை கொண்டவர்கள்

தான் ஒரு குருவாக அறியப்பட வேண்டும் என தீவிர ஆசை கொண்ட, ஓரளவு ஆன்மீகத்தில் உன்னத நிலையில் இருக்கும் சிலர், பலவித ஆன்மீக பயிற்சியை மற்றவர்களுக்கு பரிந்துரைக்கிறார்கள். பெரும்பாலான சமயங்களில், இவர்கள் தங்கள் பேச்சை தாங்களே நடைமுறைப்படுத்துவதில்லை. இதன் விளைவாக, அறிவுரை பெற்று ஆன்மீக பயிற்சி செய்த ஸாதகர்கள் முன்னேற்றம் அடைகின்றனர், ஆனால் குரு என்று அழைக்கப்பட்டவரோ தேக்கம் அடைகின்றார்.

5. அவரது மாணவர்கள் அவர்களை சார்ந்து இருப்பதை ஊக்கப்படுத்துவார்கள்

சகல ஆன்மீக ஞானத்தையும் தங்கள் சிஷ்யர்களிடம்  கொடுத்துவிட்டால், பின்னர் தங்களுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லாமல் போய்விடும் என்று சில குருமார்கள் அஞ்சுகின்றனர். ஆகையால், எல்லா ஞானத்தையும் அவர்களுக்கு வழங்குவதில்லை.

9. சுருக்கமாக

இந்த கட்டுரையில் இருந்து எடுத்துக் கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள் பின்வருமாறு.

  • 70% ஆன்மீக நிலைக்கு அப்பாற்பட்ட ஆன்மீக வழிகாட்டியே குரு ஆவார்..
  • குருவை தேடி செல்ல வேண்டாம், நாம் மிகவும் மதித்து வழிகாட்டியாக கருதும் ஒருவர் உண்மையில் குரு தானா என நாம் பிரித்தறியும் வாய்ப்புகள் மிக குறைவாகும்.
  • அதற்கு பதிலாக, ஆன்மீக பயிற்சியின் ஆறு அடிப்படை கோட்பாடுகளின்படி ஆன்மீக பயிற்சி செய்யுங்கள். இது ஒருவரை, போலி குருவால் ஏமாற்றப்படாமல் இருக்கும் ஆன்மீக முதிர்ச்சி பெறும் அளவிற்கு முன்னேற்றமடைய செய்யும்
  • குருவின் அருள் இல்லாமல் ஒருவரால் மகான் நிலையை, அதாவது 70% ஆன்மீக நிலையை, அடைய முடியாது.