எதிர்பார்ப்புடன் மற்றும் எதிர்பார்ப்பில்லாமல் செய்யப்படும் ஆன்மீக பயிற்சி

1. வரைவிலக்கணங்கள்

  • எதிர்பார்ப்புடன் செய்யப்படும் ஆன்மீக பயிற்சி (ஸகாம ஸாதனை) : இது உலகியல் ரீதியான எதிர்பார்ப்புடன் செய்யப்படும் ஸாதனை ஆகும். உதாரணத்திற்கு, கீழே கூறப்பட்டுள்ள காரணங்களுக்காக பிரார்த்தனை செய்தல், அர்ப்பணம் செய்தல், உபவாசம் இருத்தல் அல்லது சில சடங்குகளை செய்தல் :
    • செல்வத்தை அடைய
    • வேலை கிடைக்க
    • தொலைந்த பொருள் திரும்பக் கிடைக்க
    • மழலை செல்வம் வேண்டி
    • வியாதியிலிருந்து நிவாரணம் பெற
    • அன்பிற்குரிய ஒருவரின் நலனுக்காக
  • எதிர்பார்ப்பில்லாமல் செய்யப்படும் ஆன்மீக பயிற்சி (நிஷ்காம ஸாதனை) : ஆன்மீக முன்னேற்றம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட ஆன்மீக பயிற்சி இதுவாகும். எனவே, இந்த வகையான ஆன்மீக பயிற்சியினால் ஸாதகர்கள் ஆன்மீக பயிற்சியை செய்து கொண்டே தங்கள் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் ஆன்மீக முன்னேற்றம் ஏற்பட பயன்படுத்திக் கொள்வர். அவர்கள் வாழ்வில் ஏதாவது இன்னல்களை சந்திக்க நேரும்போது தங்களது அகம்பாவத்தை முற்றிலும் குறைத்து இறைவனின் சித்தத்தால் மட்டுமே தாங்கள் இந்த இக்கட்டிலிருந்து விடுபட முடியும் என்ற முழு நம்பிக்கையுடன் இறைவனிடம் சரணடைவதன் மூலம் அந்த கஷ்டமான சூழ்நிலையையே தங்களின் ஆன்மீக முன்னேற்றம் ஏற்பட பயன்படுத்திக் கொள்வர்.

எதிர்பார்ப்புடன் மற்றும் எதிர்பார்ப்பில்லாத பிரார்த்தனை  என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

2.ஸகாம மற்றும் நிஷ்காம வகை ஆன்மீக பயிற்சிஒரு ஒப்பீடு

  • நாம் ஆன்மீக பயிற்சி செய்வதால் குறிப்பிட்டளவு ஆன்மீக சக்தி உற்பத்தியாகிறது. இந்த ஆன்மீக சக்தியை ஸகாம வழியில் உலகரீதியான நலன்களை அடைவதில் செலவழிப்பதால் ஆன்மீக வளர்ச்சி எதுவும் ஏற்படுவதில்லை. இது ஓட்டை உள்ள ஜாடியை நிரப்புவதற்கு ஒப்பாகும்; இந்த ஜாடி எப்பொழுதும் நிறையாது. மாறாக நிஷ்காம ஆன்மீக பயிற்சியினால் நமக்குக் கிடைக்கும் ஆன்மீக சக்தி முழுவதும் நமது ஆன்மீக முன்னேற்றம் ஏற்பட உதவுகிறது. இறைவனுடைய ஸாதகர் நிஷ்காம ஆன்மீக பயிற்சி செய்யும் பொழுது அவரது ஆன்மீக முன்னேற்றம் மட்டுமல்ல, உலக தேவைகளும் கவனிக்கப்படுகின்றன.
  • ஸாதகர் ஸகாம ஆன்மீக பயிற்சி செய்வதன் மூலம் உலகரீதியான மகிழ்ச்சியையும் நிஷ்காம ஆன்மீக பயிற்சி செய்வதன் மூலம் ஆனந்தத்தையும் அனுபவிக்கின்றார்.

எதிர்பார்ப்புடன் மற்றும் எதிர்பார்ப்பில்லாமல் செய்யப்படும் ஆன்மீக பயிற்சி

எதிர்பார்ப்புடன் செய்யப்படும் ஆன்மீக பயிற்சி (ஸகாம ஸாதனை) எதிர்பார்ப்பில்லாமல் செய்யப்படும் ஆன்மீக பயிற்சி (நிஷ்காம ஸாதனை)
எதை செயல்பட வைக்கிறது இறைவனின் காக்கும் சக்தி குரு அல்லது இறைவனின் கற்பிக்கும் தத்துவம்
பலன் : ஆன்மீக பயிற்சியின் தீவிரத்தன்மை மற்றும் விதிக்கேற்ப உலக இச்சைகள் பூர்த்தியாகின்றன ஆன்மீக முன்னேற்றத்தை ஸாதகர் உணர்கிறார்
எதை செயல்பட வைக்கிறது இறைவனின் காக்கும் சக்தி
பலன் : ஸாதகரின் உலக வாழ்க்கையை இறைவன் கவனித்துக் கொள்கிறார்
எதை செயல்பட வைக்கிறது இறைவனின் அழிக்கும் சக்தி
பலன் : ஸாதகரைத் துன்புறுத்தும் எல்லாத் தடைகளையும் இறைவனின் அழிக்கும் சக்தி நீக்குகிறது
  • நாம் ஸகாம ஆன்மீக பயிற்சி செய்யும்போது இறை தத்துவத்தின் காக்கும் தன்மையைத் செயல்பட வைக்கிறோம். நாம் எதை விரும்பி பிரார்த்தனை செய்கிறோமோ அதன் இறுதி பலன், ஆன்மீக பயிற்சியின் தீவிரத்தையும் நம் விதியையும் பொருத்தது. நாம் நிஷ்காம ஆன்மீக பயிற்சி செய்யும்போது நமது ஆன்மீக வளர்ச்சிக்கு ஆதாரமாக உள்ள இறைவனின் கற்பிக்கும் தத்துவத்தை அல்லது குரு தத்துவத்தை செயல்பட வைக்கிறோம். அதோடு கூட இறைவனின் காக்கும் தன்மையையும் செயல்பட வைக்கிறோம். ஒரு நிஷ்காம ஸாதகருக்கு ஏனையோரால் ஏதாவது இடைஞ்சலோ அல்லது துன்பமோ நேரிட்டால் அந்த சமயத்தில் இறைவனின் அழிக்கும் ரூபம் விழிப்படைந்து ஸாதகரைக் காத்து, அவருக்கு துன்பம் அளிக்கும் நபருக்கு உண்டான கூலியான தண்டனையையும் அளிக்கிறது.
  • ஸகாம ஆன்மீக பயிற்சி நிரந்தர பயனைத் தருவதில்லை. உதாரணமாக, ஒருவர் அதிக சொத்துக்களை அடைய வேண்டும் என்பதற்காக ஆன்மீக பயிற்சி செய்கிறார் என வைத்துக் கொள்வோம். அதை அடைந்த பிறகு அத்துடன் அவரது ஆசைகள் நின்று விடுவதில்லை. நல்ல தேக ஆரோக்கியம், நல்ல வாழ்க்கைத் துணை, குழந்தைப்பேறு என்று அவரது ஆசைகள் தொடர்கின்றன. இவ்வாறாக தனது ஆசைகளின் சுழற்சி வலையில் சிக்கிக் கொள்கிறார். நிறைவேறாத இன்னும் பல ஆசைகள் உள்ளதால் ஆசைகளுக்கு முடிவே இல்லை. எனவே இது போன்ற ஆன்மீக பயிற்சியால் ஒருவரால் முழுமையான திருப்தியை அடைய முடியாது. மாறாக நிஷ்காம ஆன்மீக பயிற்சி மூலம் ஒருவர் தன் வாழ்க்கை லட்சியமான ஆன்மீக முன்னேற்றத்தை அடைந்த பிறகு அவரால் அவரது உண்மை ஸ்வரூபத்தை உணர்ந்து இறைவனுடன் ஒன்ற முடிகிறது. ஆன்மீக வளர்ச்சியின் இந்நிலையில் அவரால் நிரந்தர அனுபவமான ஆனந்தத்தை தொடர்ந்து அனுபவிக்க முடிகிறது.
  • ஸகாம ஆன்மீக பயிற்சி என்பது எல்லா படைப்புகளையும் படைக்கப்பட்ட பொருள்களையும் அனுபவிப்பது ஆகும்; நிஷ்காம ஆன்மீக பயிற்சி என்பது படைத்தவனை அனுபவிப்பதாகும். ஸகாம ஆன்மீக பயிற்சி என்பது மாயையிலிருந்து பொருட்களைப் பெறுவதாகும். நிஷ்காம ஆன்மீக பயிற்சி என்பது பரிபூரண சத்தியமான இறைவனை அனுபவிப்பது ஆகும்.