வாழ்க்கையின் உண்மை நிலை

வாழ்க்கையின் உண்மை நிலை

ஆன்மீக ஆராய்ச்சி படி உலகளாவிய அளவில் சராசரி மனிதர்கள், அவர்களுடைய 30% நேரத்தில் மகிழ்ச்சியாகவும்,  மற்றும் 40% நேரத்தில் மகிழ்ச்சியற்றவர்களாகவும் இருக்கின்றனர். மீதமுள்ள 30% நேரத்தில் மகிழ்ச்சி அல்லது மகிழ்ச்சியின்மையை அனுபவிக்க இயலாத நடுநிலையில் இருப்பார்கள். உதாரணத்திற்கு ஒரு நபர்  சாலையில் நடந்து கொண்டிருக்கும் போதோ அல்லது சில சாதாரணமான பணி செய்யும் போதோ, மகிழ்ச்சி அல்லது மகிழ்ச்சியற்ற எண்ணங்களை பற்றி நினைப்பதே இல்லை.

நமது வாழ்வின் மகிழ்ச்சியற்ற நிலைக்கு பங்களிப்பு செய்யும் காரணிகளில், நமது கல்வி அமைப்பு ஒரு காரணமாக கருதப்படுகிறது. கல்வி அமைப்பு மாணவர்களுக்கு  பல்வேறு பாடத்திட்டங்கள் அமைத்திருந்தாலும், நீடித்த மகிழ்ச்சி அடைவது பற்றி கற்பிப்பதில்லை. நம் வாழ்வில் நேரிடும் சூழ்நிலையை பொருட்படுத்தாமல் எவ்வாறு  மகிழ்ச்சியாக இருப்பது என்று நமக்கு  கற்பிக்கப்படவில்லை.

மற்றவரை ஈர்க்கும் வண்ணம் வணிக அட்டையை வைத்திருக்கும் பண்புள்ள ஆண் ஒருவர், அவரது தொழிலில் நிதி இழப்பு ஏற்பட்டால்  எதிர்கொள்ள முடியாமல், மனச்சோர்வடைந்து தற்கொலை எண்ணம் கூட கொண்டிருக்கலாம். பணியிடத்தில் தனது மிகப்பெரிய பங்களிப்பால் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவிய ஒரு பெண்,அவளது வீட்டில் கணவனின் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டு , உணர்ச்சி ரீதியில் பாதுகாப்பற்ற உணர்வை உணர்கிறாள்.

ஒருவர் வசதியான வாழ்க்கையை அடைய, கஷ்டப்பட்டு படித்து பல்வேறு தேர்வுகள்  எழுதி நிலையான வேலைக்கு சென்றால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று எண்ணுகின்றார்.

ஆனால் சரியான திசையை நோக்கி நாம் பார்க்கிறோமா ? நமது மகிழ்ச்சி நிலையை ஒரு வேலை உறுதிப்படுத்துகிறதா? ஒரு குடும்பஸ்தராக இருப்பது எப்பொழுதும் நாம் மகிழ்ச்சியாக இருப்பதை உறுதிப்படுத்துகிறதா? மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறார்களோ அந்தளவுக்கு படித்த மற்றும் படிப்பறிவில்லாதவர்கள் மகிழ்ச்சியின்மையால் பாதிக்கப்படுவதை கண்டறியலாம்.

எனவே, நம்முடைய உலக நிலைமையைப் பொருட்படுத்தாமல், நமக்கு இடைவிடாத மகிழ்ச்சியை தரும் புதிய வழிகளை நாம் ஆராய வேண்டும்.

இப்போது உங்களில் சிலர் சிந்திக்கலாம், “நான் பொதுவாக ஒரு மகிழ்ச்சியான மனிதனாக இருப்பதால், இதைப்பற்றி நினைக்க தேவையில்லை என்று எண்ணலாம்.”

அந்த நபருக்கு பின்வரும் மூன்று காரணங்களால் நாங்கள் இந்த கட்டுரைகளை பரிந்துரைக்கிறோம் :

  • வாழ்க்கை நிலையில்லாதது, மாறும் நிலை கொண்டது. உங்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களும் ,அதாவது  உங்கள் வேலை நிலைமை, நிதி நிலைமை, உங்கள் குடும்பம் மற்றும் உறவுகள் போன்றவை மாற்றமில்லாமலும், நிரந்தரமாக இருக்கும் என்று உத்தரவாதம் அளிக்க முடியாது.
  • மோசமான காலங்களை எதிர்கொள்ள, மன வலிமை என்னும் அணையினை கட்டுவதற்கு வழிவகுக்கும் நுட்பம் ஒன்றை நீங்கள் கற்றுக்கொள்ளவேண்டும். ஏனெனில், ஒருவர் வாழ்க்கையில் எப்பொழுது மூலைக்கு தள்ளப்படுவார் என்றும் எந்த நேரத்தில் நெருக்கடிநிலை ஏற்படும் என்றும் ஒருவரும் அறிய மாட்டார்கள்.
  • “தாகம் எடுக்கும் வரை காத்திருக்காமல் தாகம் எடுக்கும் முன் கிணறு தோண்டிவிடு, அப்பொழுதுதான் உன் தாகத்திற்கு தண்ணீர் கிடைக்கும்.” என்று ஒரு பழமொழி உள்ளது.