பலவற்றிலிருந்து ஒன்றுக்கு செல்வது

பல விஷயங்களைக் காட்டிலும் ஒரே விஷயத்தை குறிக்கோளாக கொண்டு, அதிலே நம் முழு முயற்சியை செலுத்தினால், நம் முயற்சி அதிக பலனைத் தரும்.

எது அதிக பலனைத் தரும்?

  • பத்து மீட்டர் ஆழத்தில் உள்ள நீரை அணுக, பத்து மீட்டர் ஆழமான ஒரு கிணற்றை தோண்டுவதா அல்லது ஒரு மீட்டர் ஆழமான பத்து கிணறுகளை தோண்டுவதா?
  • பல விமான நிறுவனங்களின் போனஸ் மைல்களை திரட்டுவதா அல்லது ஒரே விமான நிறுவனத்தில் எல்லா போனஸ் மைல்களையும் திரட்டுவதா?

நாம் கடவுளை அடைய பல்வேறு வழிகளை பின்பற்றும்போது, இந்த கோட்பாடு எப்படி வேலை செய்கிறது என்பதைப் பார்ப்போம்.

கர்மயோகம்: ஆரம்ப நிலையில், ஒரு ஸாதகர் பல பிச்சைகாரர்களுக்கு உதவுவார். அடுத்த நிலையில், அவர் தம் முழு முயற்சியையும் ஆதரவையும் ஒரு பள்ளிக்கோ அல்லது மருத்துவமனைக்கோ அளிப்பதில் கவனம் செலுத்துவார்.

ஞானயோகம்: ஆன்மீகத்தை பற்றி பல தத்துவ நூல்களிலிருந்தும் சமய நூல்களிலிருந்தும் அறிந்த பின் ஒரு ஸாதகர், இறுதியில் எந்த ஒரு நூலில் ஆன்மீகத்தின் உண்மையான தத்துவம் அதிக சதவிகிதம் உள்ளதோ, அதனிடம் திரும்புவார்.

பக்தியோகம்: ஒரு ஸாதகர் பல தெய்வங்களை வணங்குவதை விட ஒரே தெய்வத்தை வணங்குவதிலும், பல யாத்திரை தலங்களுக்கு செல்வதை விட ஒரு யாத்திரை தலத்திற்கு செல்வதிலும், பல புனித நூல்களை படிப்பதை விட ஒரு புனித நூலை படிப்பதிலும் அதிக கவனம் செலுத்துவார்.

நாமசங்கீர்த்தனயோகம்: இந்த முறையில், ஸாதகர் பல தெய்வங்களின் நாமத்தை உச்சரிப்பதற்கு பதிலாக ஒரு தெய்வத்தின் நாமத்தை உச்சரிக்க ஆரம்பிக்கிறார்.

குருக்ருபாயோகம்: ஒரு ஸாதகர் பல மகான்களை தரிசித்த பின், இறுதியில் ஒரு குருவிடம் சரணடைகிறார். எந்த ஆன்மீக பாதையை பின்பற்றினாலும், ஒரு குறிப்பிட்ட ஆன்மீக நிலைக்கு மேல், குருவின் அருள் இல்லாமல் ஆன்மீக முன்னேற்றம் அடைய முடியாது.