கர்மாவும் கொடுக்கல்-வாங்கல் கணக்கு வழக்கும்

ஆன்மீக நிலை : இறைவனோடு இரண்டற கலந்தவரின் ஆன்மீக நிலை 100% என்று வைத்துக் கொண்டால் இன்றைய கலியுகத்தில் சராசரி மனிதனின் ஆன்மீக நிலை 20% தான். உலக மக்கட்தொகையில் 90%, 35% ஆன்மீக நிலைக்கு கீழ்ப்பட்டவரே. மகான் என்று ஒப்புக் கொள்வதற்கு வேண்டிய குறைந்தபட்ச ஆன்மீக நிலை 70% ஆகும்.

நம் வாழ்வில் நிகழும் பல நிகழ்வுகள், பிறப்பு முதல் எந்த குடும்பத்தில் பிறக்கிறோம் என்பது வரை ஏற்கனவே விதிக்கப்பட்டவை. ஒருவன் தன் விதியை எதிர்கொள்வதற்கு உகந்த சூழ்நிலையும், குடும்பத்தார் ஒவ்வொருவருடனும் தீர்க்க வேண்டிய கொடுக்கல்-வாங்கல் கணக்கும் உடைய ஒரு குடும்பத்தில் பிறக்கிறான்.

கர்மவிதியின்படி ஒவ்வொரு நேர்மறையான செயலும் ஒரு ‘புண்ணிய பலனையும்’ ஒவ்வொரு எதிர்மறையான செயலும் ஒரு ‘பாவ பலனையும்’ உருவாக்குகிறது. பின்னர், தான் செய்த செயல்களுக்கு ஏற்றவாறு ஒருவன் பலனை அடைகிறான். நாம் எப்பொழுதெல்லாம் இன்னொருவருக்கு ஒரு நல்ல காரியத்தை செய்கிறோமோ அவர் கூறும் நன்றியைத் தவிர்த்து அதற்கு நிகரான நல்ல பலன் நமக்கு கிடைக்கிறது. அதேபோல் நாம் எப்பொழுதெல்லாம் கெடுதல் செய்கிறோமோ அப்பொழுதெல்லாம் எதிர்மறையான விளைவுகளை நாம் சந்திக்க வேண்டியுள்ளது. இதை வெறும் ‘மன்னிப்பு’ கோரி சரி செய்ய இயலாது.

கர்மவிதி என்பது என்றும் பொய்க்காது. இது நியூட்டனின் மூன்றாவது விதியைப் போன்றது. ஒவ்வொரு செயலுக்கும் அதற்கு நிகரான எதிர்மறை விளைவு கட்டாயம் உண்டு.

நம் வாழ்க்கை முழுவதும் நம்முடைய பழைய கணக்கான புண்ணிய-பாவ பலனை சரி செய்கிறோம் அல்லது புதியதாக ஆரம்பிக்கிறோம். இந்த பிறப்பில் தீர்க்க முடியாத கணக்கை அடுத்த பிறவிக்கு எடுத்து செல்கிறோம். முற்பிறவிகளின் கொடுக்கல்-வாங்கல் கணக்கைப் பற்றி நாம் உணருவதில்லை.

மேலும், உறவுமுறையும் பாலினமும் அடுத்தடுத்த பிறவியில் மாறலாம். ஒருவருக்கு ஒரு பிறவியில் தந்தையாக இருந்தவர் அடுத்த பிறவியில் அவருக்கே மகளாக பிறக்கலாம்.

எப்படி கணக்குகள் ஏற்பட்டு விதிப்படி தீர்க்கப்படுகிறது என்பதை கீழ்க்கண்ட உதாரணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளலாம். அத்துடன் ஆன்மீக பயிற்சி எவ்வாறு விதியின் விளைவுகளை மாற்ற வல்லது என்பதையும் புரிந்து கொள்ளலாம் .

கர்மாவும் கொடுக்கல்-வாங்கல் கணக்கு வழக்கும்

ஆன்மீக விஞ்ஞானப்படி பெரும்பான்மையான குடும்ப அங்கத்தினருடன் நமக்கு சாதகமான அல்லது பாதகமான கணக்குகள் முற்பிறவியிலிருந்து தொடர்கிறது. இதன் காரணம் நம்முடன் கர்மபந்தப்பட்டவர்களுக்கு அருகாமையில் இருக்கும்போதுதான் கர்ம பலனான மகிழ்ச்சி அல்லது துக்கத்தை நாம் உணர முடியும்.

நமக்குள் ஆன்மீக விழிப்புணர்வு அல்லது ஆன்மீக நாட்டம் இல்லாவிட்டாலும் நாம் உலக விஷயங்களில் மூழ்கி இருந்தாலும் கர்ம விதிப்படி ஆன்மீகம் எந்த அளவிற்கு உதவுகிறது என்பதை இதிலிருந்து உணர முடிகிறது. உலக உறவுகள் நன்மையாக அமையவும் விதியிலிருந்து நாம் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.